கவிதை
அவன் ஆன்மாவுடன் பேச
நான் கண்டு பிடித்த
ரகசிய வழி!
எழுத்தின் வழி
என்னவனை
சென்றடைய வேள்வி!
இங்கே
கட்டளைகள் சில
மீறப்படும்
கட்டுப்பாடுகள் சில
தளர்த்தப்படும்
கவனிப்புகள் சில
நிராகரிக்கபடும்
புதிர் விடுவிக்கும்
சில கொஞ்சல்கள்...
புனிதம் தெய்வீகமாகும்
சில கெஞ்சல்கள்...
யாரும் அறியாவண்ணம்
அந்தரங்க மொழியில்
திகட்ட திகட்ட
பரிமாறப்படுகிறது
கட்டுடைத்த காதலும்
எண்ணமுடியா முத்தங்களும்...!
இங்கே
நான்
அவன்
மற்றும்
என் கவிதை மட்டுமே...!!
படம் - கூகுள்
6 comments:
அருமை அருமை
மௌன மொழியின் சப்தம்
மிக மிக ரம்மியமாய்
மனம் கொள்ளை கொள்ளும் விதமாய்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
அங்கேயும் இங்கேயும் - கவிதை சிறப்பு.....
தொடரட்டும் கவிதைகள்....
அருமை வாழ்த்துக்கள்.தொடர்ந்து பேசுங்கள். அப்படியே இதைhttp://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_529.htmlயும் படிங்க.
@@Ramani கூறியது...
//மௌன மொழியின் சப்தம்
மிக மிக ரம்மியமாய்
மனம் கொள்ளை கொள்ளும் விதமாய்//
உற்சாகமூட்டும் உங்களின் வார்த்தைகளுக்கு மகிழ்வுடன் மிக்க நன்றிகள்.
@@ வெங்கட் நாகராஜ் கூறியது...
//அங்கேயும் இங்கேயும்//
எங்கேயும்... :)
நன்றி வெங்கட்.
@@ கவியாழி கண்ணதாசன்...
உங்களின் முதல் வருகைக்கு என நன்றிகள்.
Post a Comment