நேசம் தவிர
வேறு சில தேவைகள்
சில சரிபடுத்தல்கள்
அவசியமாகி விட்டது
இப்போது...
உனது முப்பொழுதும் இன்பமாய்
கழியவேண்டுமென்று
உன் மேல் படிந்திருந்த
நரக நிழலை
வழித்தெடுத்து எறிந்துவிட்டேன்...
உனது பயணம் சுகமாக
இருக்கவேண்டுமென்று
வழியிலிருந்து எடுத்து
அப்புறப் படுத்திவிட்டேன்
முள் என்னை...
உன்னை துன்புறுத்தும்
நினைவு மிச்சங்களை
மொத்தமாய் தீயிலிட்டு
எரித்துவிடுவேன்
இன்னும் சற்று நேரத்தில்...
யாவும் முடிந்துவிடும் !
இனி
தினமும் நீ
விழித்தெழுந்து பார்க்கையில்
உன் வீட்டு பூந்தொட்டியில்
ரோஜாக்கள் மட்டும் பூத்திருக்கும் !
முட்களை எடுத்து
வந்துவிட்டேன் கையோடு...!!
படம் - நன்றி கூகுள்
6 comments:
முட்கள் இல்லாத ரோஜா ?? இயற்கைக்கு முரண் தான் என்றாலும் கவிதைக்கு அழகு... நரக நிழல், வழியில் இருக்கும் முள், தீக்கு இரையாகும் நினைவு மிச்சங்கள் --> வார்த்தைகளின் அடர்த்தி வாசிப்பவருக்கு தாக்கம் ஏற்படுத்தும். ரோஜாவாகவே மாறிவிட்டால் ? இத்தனை சங்கடங்கள் தவிர்க்கலாம் தானே...
அருமை.
கவிதை அருமை...முள்ளில்லா ரோஜா பாதுகாப்பில்லாத பெண் போல ஆகிவிடுமே
மிக அருமையான கவிதை..பகிர்வுக்கு நன்றி...
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
Too good friend... one of your best
அழகான கவிதை
////////////
உனது பயணம் சுகமாக
இருக்கவேண்டுமென்று
வழியிலிருந்து எடுத்து
அப்புறப் படுத்திவிட்டேன்
முள் என்னை...
/////////////////
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
Post a Comment