தேவைப்படுகிறது
ஒரு கனத்த மௌனம்
மௌன நிலையில்
ஒன்றையொன்று
உணர்ந்துக்கொள்ளும்
அந்த அற்புத கணம்
என்று வாய்க்குமோ...?!
அவ்வேளையில்
உன் முன்னே
ஒரு வெற்றுத்தாள் போல்
வந்து நிற்கிறேன்
உனது சங்கல்பம்
அப்போதே
என்னுள் எழுதப்படட்டும்
உன்னால்...!
அத்தருணத்தில்
அதுவரையில் இருந்த எனது கற்பனைகளை
கலைத்துப்போடு...
இரவின் தனிமை கட்டிய
கனவுக் கோட்டைகளைத் தகர்த்தெறி...
சேர்த்து வைத்திருந்த
மாயக்கூடுகளை உடைத்துப் போடு...
பழைய எண்ணக்கட்டுகளை
அவிழ்த்து விடு உடன் அழித்துவிடு ...
உணர்ச்சிப் பெருக்குகளை
கட்டுப்படுத்தி கடிவாளம் இடு...
கற்பிதங்கள் படிப்பினைகளை
கரைத்துவிடுவது அவசியமெனில்
கரைத்துவிடு...!
என்னுள் நீ நிறைய
தடையாய் இருக்கும்
அத்தனையும்
இல்லாமல் போகட்டும் !
உன்னை அறிந்து
எல்லாம் அறிந்தவளாக மாற
உன் பாதத்தில்
என்னை சமர்ப்பித்து
பனிமலரால் குளிர்விக்கிறேன்
உன்னை...!!
படம் - நன்றி கூகுள்
10 comments:
ரசிக்க வைத்த சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்...
நல்லதொரு கவிதை... தடையை தகர்தெறிய சொன்ன விதம் அழகு. உன்னை அறிந்தால் நாம் எல்லாம் அறிந்தவளாய் மாறிடுவேன் ; அதற்கு சமர்ப்பனம் ஒன்றே வழி என்று சொன்னது மிக நேர்த்தி... வெள்ளை காகிதத்தில் சங்கல்பம் - மிகவும் ரசித்தேன்...
மிக அழகான கவிதை......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சரணாகதி ஆக வைக்கிறது கவிதை..
அழகு வரிகளில் அழகு கவிதை..
@@ திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள்.
@@ Shankar M கூறியது...
//உன்னை அறிந்தால் நாம் எல்லாம் அறிந்தவளாய் மாறிடுவேன் ; அதற்கு சமர்ப்பனம் ஒன்றே வழி என்று சொன்னது மிக நேர்த்தி... வெள்ளை காகிதத்தில் சங்கல்பம்//
உங்கள் ரசனைக்கு என் மகிழ்வான நன்றிகள்.
@@Easy (EZ) Editorial Calendar...
நன்றி.
@@ மதுமதி...
நன்றிங்க.
@@சிட்டுக்குருவி...
நன்றி.
Post a Comment