இதுவரை
அவன் எனக்காக
ஒன்றும் செய்ததில்லை
பரவாயில்லை
அவனுக்கும் சேர்த்து
நான் காதலிக்கிறேன்
* * *
நேரம் போவது தெரியாமல்
அவனுடன் பேசிகொண்டிருக்கையில்
எனக்கு ஒரே ஒரு கவலை
இந்த நேரம் ஏன் இப்படி ஓடுகிறது?
* * *
எனக்காக அவன்
பேசியதை விட
என்னிடம் பேசியதில் தான்
உணர்கிறேன் காதலை !!
* * *
'என் கவிதையை படித்துவிட்டு
தூங்கச் சென்றால்
தூங்கமாட்டாய் நீ'
என்றான் ஒருநாள்
என்னமோ தினமும்
நான் தூங்குவது மாதிரி...!
* * *
அவனிடம் பேச இயலாதபோது
எதிர்ப்படும் அத்தனை பேரிடமும்
பேசுகிறேன்
அவனைப் பற்றி மட்டுமே...!
* * *
யார் அவன்
கேள்விக்கு
பதில் சொல்ல முடிவதில்லை
எல்லோரிடமும்...
எங்கும் தேடாதீர்கள்
என் கவிதைகளில் இருக்கிறான்
என் 'அவன்' !
படம்-நன்றி கூகுள்
5 comments:
'அவன்'ஐ கண்டுகொண்டேன் - தங்கள் கவிதைகளில்.... கவிதை வாசிக்க தொடங்கியதிலிருந்து தேடத்தான் செய்தேன். படிப்பவரின் மனதை படைக்கும்போதே படித்து அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதும் அருமை.
யார் காதலித்தால் என்ன ? மொத்தத்தில் காதல் வேண்டும்... எதிர்பார்ப்புகளை அகற்றினால் காதல் என்று தொடங்கியது அழகு.
கவலையை அனைத்து காதலர்கள் சார்பிலும் பதிவு செய்தது ரசிக்க வைத்தது.
யாருக்காக வேண்டுமானாலும் பேசு ; ஆனாலும் என்னிடம் பேசு... அப்போது உணர்வேன் காதலை என்று சொல்லும் போது, உணர்தல் உணரவைக்கப் பட்டது. அதே உணர்தலை அவனைப் பற்றி பேசியும் உணர்கிறேன்.. அவனோடு பேசாவிட்டாலும் பரவாயில்லை என்னும் போது வார்த்தையின் விளையாட்டு...!! இந்த இரெண்டு பத்திகளையும் பக்கத்தில் வைக்காதது ஏன் தோழி ? இன்னும் அழகாக இருந்திருக்கும்....
தினமும் அவன் கவிதையை படிக்கிறேன் என்று தூங்காமல் சொன்னது கவிதைக்கு அழகு.
மொத்தத்தில், காதல் படித்தேன் தோழி... தொடர வாழ்த்துக்கள்!!
...ம்... அந்தக்கால ஞாபகம் வந்தது...
@@Shankar M கூறியது...
// கவிதை வாசிக்க தொடங்கியதிலிருந்து தேடத்தான் செய்தேன். //
ரசித்தேன்
//யார் காதலித்தால் என்ன ? மொத்தத்தில் காதல் வேண்டும்... எதிர்பார்ப்புகளை அகற்றினால் காதல் என்று தொடங்கியது அழகு.//
//கவலையை அனைத்து காதலர்கள் சார்பிலும் பதிவு செய்தது ரசிக்க வைத்தது.//
அது என்னவோ உண்மைதான் :)
// இந்த இரெண்டு பத்திகளையும் பக்கத்தில் வைக்காதது ஏன் தோழி ? இன்னும் அழகாக இருந்திருக்கும்....//
/என்னிடம் பேசியதில் தான்/
என்ன பேசப்பட்டது,அது எப்படி எடுத்துக்கொள்ளப்பட்டது அதுதான் அடுத்ததில். பத்தி நடுவில் வந்த காரணம் இது.நீங்க சொன்னதும் அழகு. ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனா சில வரிகளை இந்தளவு ஆராய்ச்சி செய்வீங்கன்னு நினைக்கல...!!!!!! :)
நல்ல ரசனை.
நன்றி ஷங்கர்.
@@ திண்டுக்கல் தனபாலன் கூறியது...
//...ம்... அந்தக்கால ஞாபகம் வந்தது...//
அது சரி...!!! :))
நன்றிகள்
அழகான கவிதை...
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment