கண்ணாமூச்சி விளையாடும்
சிறுபிள்ளையாய் ஓடி
ஒளிந்து கொள்ளும் உன்னை
ஒவ்வொரு அறையாய்
தேடித் தேடி
களைத்துப் போகும் என்னை
ஓரமாய் நின்று
மௌனமாய் ரசிப்பதே
உன் வேலையாகி போனது !
இதோ
இன்றும்
தேடி ஓடுகிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
களைத்து சோர்ந்து
வாசலோரம் சாய்ந்து அமருகையில்
மடியில் வந்து விழுகின்றன
'எடுத்துக் கொள்ளேன்' என்று
இந்த வார்த்தைகளும்
நீயும் ஒன்று
தேடவைப்பதில்...!!
படம் -நன்றி கூகுள்
4 comments:
ஓரமாய் நின்று மௌனமாய் ரசிப்பதே உன் வேலை என்று சொன்னதால் நிகழ்காலம் என்று கொள்கிறேன். ரசிக்க வைப்பதால் மகிழ்ச்சி கொள்ளலாமே தோழி... எடுத்துக் கொள்ளேன் என்ற வார்த்தைகளுடனான உவமை அழகு. உவமை தேடலுக்கு மட்டும் பொருந்துமா அல்லது ரசிப்பதற்குமா ??
முடிவில் வரிகள் ஏங்க வைக்கிறது...
உண்மையில் இறுதியாக சொன்ன வரிகள் மனதில் வலியை உண்டுபண்ணுகிறது
கவிதை முடிவு வலியை விட்டுச் செல்கிறது.
அருமையா இருக்கு அக்கா.
Post a Comment