நீ சிதறிய வார்த்தைகளை
நேற்றிரவில்
கனவுகளில் சேகரித்து
விடியலில்
விதைத்துவிட்டேன்
இன்னும் ஆழமாய்
நெஞ்சில்...
நெருப்பால் அணைத்தாய்
பனியென மடி அள்ளிச் சேர்க்க
சுடும் வரை உரைக்கவில்லை
சுட்ட பின்போ
சுட வைத்தவன் நீ தானே
ரசித்து சுகித்தேன் தீயில்...
நேற்று சாம்பாலாகி போன
என் உடலை
உன் நினைவு நீரூற்றி
உயிர்ப்பிக்க
வைத்துவிட்டேன்
உனக்காக இன்று...
மறுபடி
என்றாவது ஒருநாள்
உனக்கு தேவைப்படலாம்
எரித்து விளையாட...!
* * * * *
14 comments:
உருக வைக்கும் வரிகள்...
நல்லதொரு ப்டைப்பு. கனவில் உன்னோடு இருந்த மனித்துளிகளை நினைவிலிருந்து நீக்காமல் இருத்திக் கொண்டேன் என்று தொடங்கிய விதம் என்றும் நான் உன்னோடு தான் என்பதை நிலை நிறுத்தியது.
செய்வது நீயானால் என்செய்தாலும் ரசிப்பேன் என்று கூறும் போது வார்த்தைகளின் விளையாட்டு... தீயில் சுகித்ததையும் அனுபவித்த சுகம் படித்த என் கண் முன்னால்...
மரித்தாலும் மீண்டு வருவேன்... உனக்காக ; உன் மகிழ்வுக்காக என்று முடித்த விதம் கைதட்ட வைத்தது.
இரவில் கனவில் சேகரித்து விடியலில் ஆழமாய் விதைப்பது இன்னும் சுகமே/
மறுபடி
என்றாவது ஒருநாள்
உனக்கு தேவைப்படலாம்
எரித்து விளையாட...!
//////////////////////////////////////
வலிக்கும் வரிகள்
உடலை எரித்தாலும் உயிர்ப்பித்து மீண்டும் எரியூட்டும் விளையாட்டுக்கு எடுத்துவைக்க எத்தனை மனவலி(மை) இருக்கவேண்டும்? கவிதை போர்த்திய காதல் அழகு. பாராட்டுகள் கௌசல்யா.
அருமையான உணர்வுகள் மீண்டும் ஒருமுறை வரிசைபடுத்தி வார்த்தைகளை அடுக்குங்கள் அழகிய வெளிப்பாடை உணர்வீர்கள்
உணர்வு பூர்வமாய் ஒரு கவிதை....
வாழ்த்துகள்.
மறுபடி
என்றாவது ஒருநாள்
உனக்கு தேவைப்படலாம்
எரித்து விளையாட...!
hmmmmmmm அருமையான வரிகள்
Supper Kawsi akka :)
@@திண்டுக்கல் தனபாலன்
நன்றிகள்.
@@Shankar M கூறியது...
//செய்வது நீயானால் என்செய்தாலும் ரசிப்பேன் என்று கூறும் போது வார்த்தைகளின் விளையாட்டு... தீயில் சுகித்ததையும் அனுபவித்த சுகம் படித்த என் கண் முன்னால்...
மரித்தாலும் மீண்டு வருவேன்... உனக்காக ; உன் மகிழ்வுக்காக //
என் கவிதை இப்போதுதான் மேலும் அழகாகிறது !!
உங்கள் விளக்கம், மிக ரசித்தேன்.
நன்றி ஷங்கர்.
@@நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றி.
@@விமலன்...
நன்றி.
@@சிட்டுக்குருவி...
நன்றி.
@@கீதமஞ்சரி...
பெண்களின் மனவலிமை பற்றி விளக்கவும் வேண்டுமா ? :)
நன்றி தோழி.
@@கோவை மு சரளா கூறியது...
//மீண்டும் ஒருமுறை வரிசைபடுத்தி வார்த்தைகளை அடுக்குங்கள் அழகிய வெளிப்பாடை உணர்வீர்கள் //
இதுதானே வேண்டாங்கிறேன் !! :))
அது எப்படினு தெரியலையே...
நானும் சிரமப்பட்டு தமிழையும் சிரமபடுத்தி கவிதைன்ற பேர்ல போடுறேன். உங்களுக்கு தோணியத அப்டியே இங்கே எழுதினா நானும் கத்துபேனே...
நன்றி தோழி.
@@வெங்கட் நாகராஜ்...
நன்றி வெங்கட்.
@@Harini Nathan...
நன்றி ஹரிணி.
Post a Comment