கொட்டித்தீர்த்தது
அடை மழை
உன் வருகையால் இன்று...
வாசலில் உன் கால்தடம்
ஒளிர்கிறது
மாக்கோலம் இன்று...
தோட்டத்து மின்மினி பூச்சி
கண்சிமிட்டி தெரிவிக்கிறது
வானவில் பிரியங்களை இன்று...
சில்மிஷங்களும் அவஸ்தைகளுமாய்
கழிந்த மாலை பொழுது
மேலும் ரம்மியமானது இன்று...
'அழகனா அவன்?'
கேலிபேசிய கொன்றைப் பூக்கள்
உன் மலர் முகம் கண்டு
வெட்கி இதழ்கள் உதிர்த்து
உன்னை முத்தமிட துடிப்பதை ரசித்து
உன் முகம் மறைக்கிறேன்...
நொடிக்கொரு முறை நம் கைகள்
கோர்த்து பிரித்து அழுத்தி
உறவாடியதை நீயும் ரசித்தாயா என்ன?
விடுவிக்கவே இல்லை உன் விரல்களை...
கவிதைகள் பல
கதைகள் பல
ஆசைகள் பல
ஏக்கங்கள் பல
நேரில் சொல்ல ஒத்திகை பல
அத்தனையும் எங்கே
ஓடி ஒளிந்ததோ...
வினாத்தாள் பார்த்து
விடை மறந்த மாணவியாய்
முழித்துக் கொண்டிருக்கிறேன்!
மனதினுள் எழுதி அழித்து
எழுதி அழித்து
நான் தவித்து தடுமாறுவதை
ஓரவிழிகளால் ஏனடா பார்க்கிறாய்
மொத்தமாய் மறந்து போகிறதே !
என் மன ஓட்டம் அறிந்தும்
"ம் அப்புறம்,வேற என்ன செய்திகள்?"
ராட்சஸா! எங்கேயடா கற்றாய்
இப்படி என்னை சீண்டி சிதைக்க
செல்லச்சினம் ஒன்று தோன்ற
"ம்...ஒண்ணுமில்ல"
"அப்ப ஏதோ இருக்கு, என்ன அது சொல்...!?"
ஒத்திகையின்றி
காவியம் ஒன்றை
அரங்கேற்றுகிறாய் மெல்ல...
படங்கள் -நன்றி கூகுள்
5 comments:
சந்தித்த ... வேளையில் ....
சிந்திக்கவே ... இல்லை ....
தந்துவிட்டேன் .... என்னை ..
என்ற அழகான சினிமாப் பாடல்போலவே அமைந்துள்ளது தங்களின் இந்தக்கவிதையும்.
பாராட்டுக்கள்.
பார்த்த ஒத்திகை மறந்து ஒத்திகையின்றி அரங்கேறிய காதல் காவியம் அருமை.
கலக்கல்ஸ்...
அருமை...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
நேரில் சொல்ல ஒத்திகை பல
அத்தனையும் எங்கே
ஓடி ஒளிந்ததோ... arumai kous.....best wishes.....
Post a Comment