நீ
இல்லாத
இரவுகளும்
இதமாகவே
இருக்கின்றன...
உன்னைவிடவும்
இறுக்கமாக
அணைத்திருக்கின்றன
உன் நினைவுகள்!
* * *
எனக்குள்
ஓடி பிடித்து
விளையாடுகின்றன
'பத்ரமா பாத்துக்கோ' வென
நீ ஒப்படைத்து சென்ற
உன் நினைவுகள்...
விழுந்து
அடிபடாமல்
பாதுகாப்பதிலேயே
முப்பொழுதும்
முடிந்துவிடுகிறது...
* * *
ஒன்றும் செய்யவிடாமல்
பாடாய் படுத்தியெடுக்கும்
உன் நினைவுகளால்
நினைவிழந்து போகிறேன் நான் !
* * *
வரும்வரை வைத்துக் கொள்...
உனக்கென்ன
கொடுத்துவிட்டு
போய்விட்டாய்...
நானல்லவா மாட்டிக்கொண்டு
முழிக்கிறேன்
நினைவுக்கும் கனவுக்கும் நடுவில்...
ஒன்று
தூங்கவிடுவதில்லை !
மற்றொன்று
தூங்கினாலும் விடுவதில்லை !
* * *
நீ வர தாமதித்தால்
நிலைமை இங்கே
மிக மோசமாகிவிடும்...
உன்னை விட
அருமையாய் காதலிக்கின்றன
உன் நினைவுகள் !
* * *
உன் நினைவுகளில்
மூழ்கித் திளைப்பதே
காதல் என்பதாகிப்
போனதெனக்கு!
* * *
படங்கள் -நன்றி கூகுள்
3 comments:
anaiththum arumai....
நினைவுகளை நினைத்து, பல கவிதைகள் படைத்து, பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... நன்றி...
///ஒன்று
தூங்கவிடுவதில்லை !
மற்றொன்று
தூங்கினாலும் விடுவதில்லை !//
சூப்பரா சொல்லிருக்கீங்க..
Post a Comment