இமைச் சிறகடித்து
பனியிதழ் விரித்து
அவன் சிரிக்கும் போதெல்லாம்
வானுக்கும் பூமிக்குமாய்
பயணிக்கிறது
எனது உயிர் !
* * *
பனியூறிய இதழ்
பனிச் சிதறல் சிரிப்பு
பனித் தூறல் சொற்கள்
பனிமூட்டம் அவனது அண்மை
பனிப்போர்வை அவனது மௌனம்
பனிப்பொழிவு அவனது நேசம்
பனிப்பார்வை குளிர்விக்க
பனியால் சூழ்ந்து
பனியாய் தழுவினான்...
என்னை மறந்துக் கிறங்கிய
ஒருபொழுதில்
மூடிக் கிடந்த விழி
மெல்ல திறக்க...
சட்டென்று
வந்த தடம் இன்றி
கரைந்து
காற்றில் கலந்து
மறைந்தே போனான்
அவன்...!
* * *
2 comments:
மனமும் கவிப் பனியில் குளிந்து போனது
மனம் கவர்ந்த கவிதை
வாழ்த்துக்கள்
காதலின் பெண் மனம் அருமை
Post a Comment