நினைத்தப் போது அழைப்பாய்
அழைத்தப் போது நினைப்பேன்
உன் கோபத்தை
நான் பார்த்ததில்லை
கோபம் தவிர வேறொன்றும்
நான் கொடுத்ததில்லை
'சாப்டியா' என கேட்க தவறமாட்டாய்
தவறியும் கேட்டதில்லை நான்...
காய்ச்சல் என்றதும்
நொடிக்கொரு முறை விசாரித்து
காய்ச்சலை விட அதிகம் படுத்தி எடுப்பாய்
உன் அக்கறை எனக்கு இம்சை
என் இம்சைகள் உனக்கு ரசனை
என் தேவைகள் உனக்கு அவசியம்
உன் விருப்பம் எனக்கு அனாவசியம்
உன் தத்துப்பித்து உளறல்களை
கவிதை என்பாய்
அட அசடே என்றெண்ணி
ஆஹா அற்புதம் என்பேன்
தனிமையில் என்னை
மூழ்கடித்தப் போதெல்லாம்
எங்கே என்று தேடிக்கொண்டிருப்பாய்
தேடுவாய் என்று தெரிந்தே
தொலைந்துப் போகிறேன் அடிக்கடி...
நிலவென்றாய்
உயிரென்றாய்
இரண்டெழுத்தில்
என் பெயர் சுருக்கி
அழுத்தமாய் உச்சரித்து
இது காதல் என்கிறாய்
இப்படி சொல்வதில் உனக்கு
இன்பம் என்றால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
நமக்குள் காதல் !
படம் : கூகுள்
3 comments:
அருமை
இருந்துவிட்டுப் போகட்டும் என்ன
நிலையாகவே நன்றாகவே இருக்கட்டும்
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
@@எல் கே...
thanks Karthik
@@Ramani...
அப்படியே இருக்கட்டும் :-)
நன்றிகள் ரமணி சார்
Post a Comment