வேண்டும்...!


உனை நனைக்கும்
மழைத் துளிகளில்
ஒரு துளியாக

நீ ரசிக்கும்
வானவில்லின்
ஒரு நிறமாக

உன் கேசம்
கலைத்து விளையாடும்
காற்றாக 

நீ நடக்கும்
பாதையோர
ஒற்றை புல்லாக 

உன் பாதம் பட்டு  
சரசரக்கும்
இலைச் சருகாக

நீ அணியும்
ஆடையின்

ஒற்றை இழையாக

நீ விரும்பி கேட்கும் 
பாடலின் 
ஒரு ஸ்வரமாக

உனது
கவிதைகளில் 

முற்றுப்புள்ளியாக

நீ அருந்தும்
தேநீரின்
கடைசித் துளியாக

 
ஏதோ ஒன்றாகவேணும்
நானாக வேண்டும் !





4 comments:

ஒவ்வொரு முறையும் மனதை கவருகின்றன உங்கள் கவிதைகள்..

[ நான்தான் வாசல் தேடி கொஞ்ச நாளா வரலைனு நெனச்சா.. நீங்க வாசலை திறக்கவே மறந்துட்டீங்க போல..]

 

@@கோவை நேரம்...

நன்றிகள்

 

@@ அன்பு துரை...

நிஜமா மறந்துட்டேன்... திறந்த வாசல் இனி அடைக்கபடமாட்டாது :)

இரண்டு வரியாவது எழுதாம விடுறதா இல்லை :)

நன்றி அன்பு.