Posted by
Kousalya Raj
comments (17)
பக்கமாய் இருப்பவர்களை
விட்டுவிட்டு தூரமாய்
இருக்கும் உன்னைமட்டுமே
நினைவால் தொடும் நான்..!
லேசாய் தொட்டுச் சென்றுவிடும்
காற்றைப் போல நீ....!
இடைவிடாது என் காதில்
ஒலிக்கிறது உன் குரல்
நீ பேசாத போதும்..!
உன்னை பார்த்து
கொண்டிருக்கிறேன், அங்கே
நீ இல்லாத போதும்...!
என்னை மட்டுமே நீ தொடர
வேண்டும் என்றும் , எங்கும்,
எப்போதும்.....உன்னால் இயலாது
என்று தெரிந்தும்,
உத்தரவிடுகிறேன் அன்பாய் !!?
என்னை தவிர
வேறு யாரிடமும் பேசாதே !
உன் இதழ்களில்
நனைந்து வருவதால்
வார்த்தைகள் எல்லாம்
முத்தங்கள் ஆகிவிடுகின்றன !!
Labels:
கவிதை
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
முடிவில்லா
நீண்ட தூர துரத்தல்கள் !!
பகலில் நினைவுகளால்
துரத்துகிறாய்.....அதில்
மூச்சு வாங்கியே இரவு உறக்கம்
தொலைக்கிறேன்
விடிவதற்கு சற்று முன்னே
உறங்கச் சென்றும்
கனவிலும் வந்து துரத்துகிறாய்
உறக்கம் தொலைத்து,
உணவு என்பதை மறந்து
எடை குறைந்து
என்னை வேறாய்
வீட்டு கண்ணாடி பிரதிபலிக்க
நெஞ்சே நீயும் நோயுடையாய் !
என்னையும் நோய் செய்கிறாய் !
இந்த நிலை ஏன் எனக்கு ?
என்ன வேண்டும் உனக்கு ?!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (11)
தேடலின் விடை மற்றொரு
முடிவில்லா தேடல்....!!
தண்ணீர் பிடிக்க சென்றுவிட்டு
வெறும் குடத்துடன் திரும்பி வந்த
மனநிலை..!!
விளக்கம் பெற்றபின்னும்,
அடம் பிடிக்கும் குழந்தை மனம்!!
விளங்க முடியா கவிதையாய் நீ !!
அனைத்தும் எனதாய் எண்ணி
போராடும் மனதை கட்டுபடுத்த
அறியா பேதையாய்...?!
கட்டுபட மறுக்கும் ஆணவம்,
வென்றே தீருவேன் என்ற
பிடிவாதம்....!!
பக்குவம், என்னிடமும் வரும்வரை
சற்றே விலகி நிற்கிறேன், உன்
அனுமதியுடன் மௌனமாய்...!!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (9)
வார்த்தைகள் அபார கடலாய்
விரிந்து என்னை உள்வாங்கியதென்ன...?
மறுபடி எழ முடியாமல் அப்படியே
அமிழ்ந்து போன மாயமென்ன..?!
அந்த நிமிடத்தில்
உனது 'நான்' என்ற ஆணவதொனியில்
எனது 'நான்'
மெதுவாய் கரைந்ததென்ன...?!
இந்த ஆனந்தம்....
சிரித்து மகிழ்கிற பரவசம் அல்ல,
அழுது கரைகிற
ஆனந்தம் என்றே புரிந்ததென்ன...?!
எரிமலையின் வெப்பமும்,
பனி மலையின் குளிர்ச்சியையும்
ஒரு சேர
அனுபவிக்கும் இன்பமென்ன...?!
கோபம், கர்வம் மறந்து மனதை சாந்தமும்,
அமைதியும் கைகொண்ட உணர்வென்ன...?!
இதே நிலை உனதும் என்றால்
ஒன்றும் சொல்லாமல் மறைந்ததென்ன...?!
என்ன....! என்ன....! என்ன ....!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (12)
பல இன்னல் பட்டு அல்லல் பட்டு
துக்க பட்டு. துயரப்பட்டு,
ரோச பட்டு, கோபப்பட்டு,
அடிபட்டு, வதைபட்டு,
மிதி பட்டு, ரத்த கறைபட்டு,
இறுதியாய் சிறை பட்டு
ஊன பட்டு, உயிர் விட்டு
இரவில் வாங்கிய
விடுதலையை, பகலில்
கொண்டாடகூட வகையற்று
அச்சப்பட்டு செங்கோட்டையில்
பலத்த பாதுகாப்பின் நடுவில்
கொடி ஏற்றப்பட்டு,
உரையாற்றுகிறார் பிரதமர்....
கண்ணாடி கூண்டுக்குள் சிறைபட்டு !!
அந்த சிறை மீண்டு உரையாற்ற,
வேண்டும் உண்மையான சுதந்திரம் !
எப்படி பெறுவது ? என்று பெறுவது ?
யாரிடம் இருந்து பெறுவது ??
விடை தெரிந்தால் சொல்லுங்களேன்
என் உடன்பிறவா சொந்தங்களே.....!!
இதுவும் ஒருவகையில் காதல் கவிதைதான்...என் தேசத்தின் மீதான காதல்.... இன்று சுதந்திர தினம்.......! ஆனால் வாழ்த்து சொல்லகூடிய அளவில் மன மகிழ்ச்சி இல்லையே....என்று பெறுவோம் முழு சுதந்திரம்..., நம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளிடம் இருந்து.......??!!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (3)
இன்றும் நான் உன்னை தேடுகிறேன் !
நீ இங்கே இல்லை
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்
இனிய முத்தங்கள் மட்டும் இருக்கின்றன....!
உனது தோளில் சாய்ந்து
கனவு காணவும்
உன் இதழை சொந்தமாக்கவும்
உன் குரலில் மயங்கி கிடக்கவும்உன்னை அணைத்து கொண்டு
விவாதம் செய்யவும்,
எல்லாவற்றிருக்கும் மேலாக
உன்னை முழுமையாக
என்னுடையவளாக்கவும்
ஆசைக் கொண்டு முயன்றாலும்
முடியாது போய் விட்டது...!..
இருப்பினும் அன்பை கொடுக்கவும்
அன்பை எடுக்கவும்
எனக்கிருக்கும் உரிமை
பறிபோகாதவரை.
நாம் காதல் செய்வோம் .......!!
Labels:
காதல் கவிதைகள்








