Posted by
Kousalya Raj
comments (6)
முன்பு தினமும்
உனது நேசத்தைப் பெறுவதற்கான
வழிகளைப் பற்றியே
யோசித்துக் கொண்டிருந்தேன்
சிரிப்பால்
அழுகையால்
கோபத்தால்
இரக்கத்தால்
பைத்தியகாரத்தனத்தால்
பிரியத்தை பெறுவதற்காக
தினமும் ஒரு நாடகத்தை
நடத்திக்கொண்டிருந்தேன்...!
ஆனால் எல்லாம் முடிவுக்கு வந்ததும்
நாடகங்கள் அற்ற
சொற்கள் இல்லாத
ஒரு நேசத்தைக் கொடுக்க
ஆரம்பித்தேன் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (16)
வென்றாய் எனை இறுதியாய் !!
அன்றில் இருந்து , உன்னை
படிக்கிறேன் விழித்ததும் ,
உன்னை படித்தே உறங்க
செல்கிறேன்....ஏன் விலக்கினேன்,
இன்று ஏன் இணைக்கிறேன்,
புரியவில்லை மனமும் மந்தியாய்
அலைகிறதே ,கிளைதேடி,
அழைத்தேன் நிரந்தரமாய்
அமர எண்ணி....காணவில்லை
உன்னை, நேற்று வரை
விரும்பி, இன்று வெறுக்கிறாயா ?
நட்பாய் நான் கை நீட்ட
எங்கே சென்றாய் ?
விரும்பி அழைக்கிறேன்....
காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் காவிய படைப்பின் புது மலர்கள்...!!
அன்றில் இருந்து , உன்னை
படிக்கிறேன் விழித்ததும் ,
உன்னை படித்தே உறங்க
செல்கிறேன்....ஏன் விலக்கினேன்,
இன்று ஏன் இணைக்கிறேன்,
புரியவில்லை மனமும் மந்தியாய்
அலைகிறதே ,கிளைதேடி,
அழைத்தேன் நிரந்தரமாய்
அமர எண்ணி....காணவில்லை
உன்னை, நேற்று வரை
விரும்பி, இன்று வெறுக்கிறாயா ?
நட்பாய் நான் கை நீட்ட
எங்கே சென்றாய் ?
விரும்பி அழைக்கிறேன்....
காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் காவிய படைப்பின் புது மலர்கள்...!!
Posted by
Kousalya Raj
comments (6)
கவிதைகளால் நீ செய்யும்
தவறுகளுக்கு,
எனக்கு நான் தரும்
தண்டனை, அதை
படிக்காமல்
இருப்பதுதான்...!
***************************************************
பதிவு எழுதலாம் என்று
எண்ணி அமர்ந்தாலும்
என் பேனா கவிதையே
எழுதுகிறது, சொன்னாலும்
கேட்கவில்லை மனதும்,
இந்த பேனாவும் ! நீ
கொஞ்சம் மனதைவிட்டு
வெளியே செல்லேன்...
தாம்பத்தியம் பதிவை
தொடரவேண்டும் நான்.
அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்
மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??
(இதையும் கவிதைன்னு நினைச்சி படிங்க, வேற என்ன சொல்ல...உங்க தலைஎழுத்து...!! )
--
Labels:
கவிதை மாதிரி
Posted by
Kousalya Raj
comments (22)
நான் உனக்காக காத்திருப்பது போல
யாருக்காகவோ காத்து இருக்கிறது படகு.
யாரும் பயணிக்காத படகு
நதியில் மூழ்கிவிடும்...
நீ கவனிக்காத என் காதல்
என்னையே மூழ்கடித்து விடும்.
உன் நதி மேனியில்
எப்போது பயணிக்குமோ
என் விரல் படகுகள்
வா... வந்து என்னிடம் காதலை சொல்
பயணிக்க தொடங்கி விடும்
என் படகு......
படிச்சதில் பிடித்தது.....
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (23)
எங்கோ தூரத்தில் இருந்து
உன் நினைவுகளால் ஏன்
என்னை துரத்துகிறாய்?
நான் நானாகவே இங்கு
இருக்கும்போது உனக்குள் எப்படி?
என்று கடன் பெற்றேன்,
இன்று திருப்பித்தாவென கேட்க ?
அழகான என் இதய கண்ணாடியில்
நீ எறிந்த கல் பட்டு உடைந்து
சிதறிய சில்லில் என் உருவம்
காணாமல் தேடுகிறேன்.
தேடிக்கொண்டே இருக்கிறேன்.....
*************
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (15)
காதல் கவிதை தவிர
வேறு எழுத தெரியாதா?
என்கிறார் என்னவர்..!
மனம் முழுதும் காதலாய் நீ
வியாபித்திருக்கும் போது
கவிதையிலும் காதல்தான்
இருக்கும் என்றேன் திமிராக !
சங்க இலக்கியம் தேடி
எதுகை, மோனையில்
எழுதுகிறேன் வெறுப்பில் ,
சண்டையிடு
என்னிடம் என்றேன்.
அது எப்படி? சொல்லிதா
என்றாய் குறும்புடன்..! .
சட்டென கண்மூடிய நான்
மனதிற்குள் வணங்கினேன்
உன்னை எனக்களித்த உன்
அன்னையை.
பின் வார்த்தைகள் அற்ற
மௌனமாய் தொடர்ந்தன
நம் வாதங்கள்!!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (32)
கவிதையில்லை...?!
அன்று,
மூணாறு தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை ,
தனது காதலனுடன் வாழவேண்டும் என்பதற்காக
ஒன்றும் அறியாத கணவனை கொன்றாள்....
நேற்று,
சட்டம் படித்தவள் , காதலன் கரம் பிடிப்பதற்காக,
திருமண நாளை எதிர்பார்த்து ஆசையுடன் காத்திருந்த
அப்பாவியை, கண் முன்னால் கொன்று ரசித்தாள்....
இன்றோ,
தன்னை ஏமாற்றிய ஆண் மகனை பழிவாங்க
அவனது இளந்தளிர் வாரிசை இரக்கமின்றி
கழுத்தை நெரித்து கொன்று பழி (பலி) வாங்கினாள் ...
என்னவாயிற்று என் இனத்திற்கு ?
மென்மை, தாய்மை, இனிமை, அன்பு, பாசம், கருணை,
இரக்கம் இவற்றின் மொத்த உருவம் தானே பெண்...!
இந்த பெண்மையில் மண் விழுந்தது எப்போது ??
பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும்
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும், இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!
***************************
.
Labels:
கவிதை
,
கவிதை மாதிரி


.jpg)

