குவிக்கப்பட்டனர்
முப்படைவீரர்கள்
பல்லாயிரக்கணக்கில் !
பல்லாயிரக்கணக்கில் !
விமான நிலையம்
ரயில் நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
தீவிர சோதனையில்...!
பாராளுமன்ற வளாகம்
ஹோட்டல்கள்
தங்கும் விடுதிகள்
மனிதர்கள்
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
சுற்றிலும் இரகசிய கேமராக்கள்
ஹெலிஹாப்டர் ரோந்துகள்
நடுவே செங்கோட்டை
கண்ணாடி கூண்டின் உள்ளே பிரதமர் !
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
எங்கள் முன்னோர்களே...
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
8 comments:
யதார்த்தமான வரிகள் அருமையான கவிதை.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
வேண்டும் இன்னொரு சுதந்திரம் என்று சொல்லியுள்ளீர்கள்.. உண்மை தான்... ஏற்கனவே நமக்காக பாடுப்பட்ட தியாகிகளுக்கு வணக்கத்துடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
யதார்த்தமான வரிகள் ...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...
@@ கே. ஆர்.விஜயன்...
நன்றிகள் விஜயன்
@@S Maharajan...
நன்றி நண்பரே
@@ பட்டிகாட்டு தம்பி...
உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்
@@ மாய உலகம்...
நன்றிகள்
@@ Rathnavel...
நன்றிகள் ஐயா.
@@ kavithai...
வருகைக்கு நன்றிகள் வேதா
@@ Reverie...
நன்றிகள்
@@ FOOD...
நன்றிகள் அண்ணா
Post a Comment