என் உணர்வுகள்
என் வார்த்தைகள்
என் மௌனங்கள்
என் சுவாசங்கள்
அனைத்தும்
உன் ஒருவனை
உன் ஒருவனை
பற்றியதாகவே இருக்கிறது
மொத்த வாழ்வின்
ஒரே தேடலாய்
ஒரே தேடலாய்
ஒற்றை முடிவாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
ஆதி எதுவென நான் அறியேன்
அந்தம் நீ...நீ மட்டுமே !
பலநேரங்கள்
நீயாகிய நான்
சில நிமிடங்களே
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
பாலை புயலாய் சுழன்றடிப்பாய்
காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
போய்விடுகிறதென் நான் ! காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
...
என்றாவது ?!
என்றாவது ?!
8 comments:
அற்புதமான கவிதை!அழகான எழுத்து நடை,ஆழமான கருத்துக்கள்!
வாழ்த்துக்கள்!
என்றும் நேசமுடன்
ஸ்ரீதர்
அருமை!!
அருமையான கவிதை.
மனதை நெகிழ வைக்கிறது.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
kalakkal kavithai
நல்ல அழகான கவிதை.
என்றாவது
என்னாலும் எழுத முடியுமா?
என ஏங்க வைக்கிறது.
பாராட்டுக்கள்.
2 மச்..
அருமை...
உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.com/
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தோழி
Post a Comment