'ம்' என்ற உன் ஒற்றைச்சொல்
சிறிதும் தயக்கமின்றி
என் உயிரை குடித்து
சற்று நேரம் கழித்து வெளியே துப்பும்
விந்தை நீ அறிய வாய்ப்பில்லை !
உன் வார்த்தைகளின் பிரமாண்டம்
அண்ணாந்து பார்த்து
மலைக்கிறேன் - அதிசயமென
வியக்கிறேன் - அதன்முன்
சிறு புள்ளியாய் தெரிகிறேன் - அதில்
விழுந்து திக்கெங்கும் தெறிக்கிறேன் !
உன் வார்த்தைக்குள் கரைகிறேன் - பின்
மெல்ல தெளிகிறேன் - அதை
தெளிக்கிறேன் மனவாசலில் - நான்
கலைக்கிறேன் அதை
மீண்டும் உன் வார்த்தை கோலமிட !
சுகிக்கிறேன் சுகமென - அனலாய்
தகிக்கிறேன் தவமென - அதை
மறைக்கிறேன் எதுவென - நான்
இருக்கிறேன் உனக்கென - நீ
இன்றி ஏதுமில்லை இனி
இன்றி ஏதுமில்லை இனி
வாழ்வில் எனக்கென !!
சமயத்தில்
கோபத்தில் சிதறும்
உன் வார்த்தைகள்
வரவழைக்கும் விழிநீரை
சுண்டி எறியும்
தொடர்ந்து வரும்
வார்த்தைகள் !
செந்தணலையும்
நீராய் மாற்றும்
வார்த்தைகள்
உனதல்லவா ?!
இப்போதும்
என் இதயம்
குளிர்ந்து துடிக்கிறது
நீ வார்த்தை மழை பெய்வித்து
கொண்டிருக்கிறாய் !
22 comments:
நல்ல அழகிய கவிதை அந்த ரோஜா மலர் போலவே. பாராட்டுக்கள்.
// சுவைக்கிறேன் தேனென -அதில்
சுகிக்கிறேன் சுகமென - அனலாய்
தகிக்கிறேன் தவமென - அதை
மறைக்கிறேன் எதுவென - நான்
இருக்கிறேன் உனக்கென - நீ
இன்றி ஏதுமில்லை இனி
வாழ்வில் எனக்கென !!//
...வாவ்.. உண்மையில் அழகான வரிகள். :))
கவிதை எழுதணுமுன்னு சில கவிதைகளை வாசிக்கும்போது தோணும். இதுவும் அதுலே ஒண்ணுன்னு சொல்லலாம். :-)
ஆனா, நான் எழுதினா கொடுமையாயிருக்கும்...
நீ பேசும் வார்த்தைகள்
என்னை பேச விடுவதில்லை
என்றும்..
ஏனென்றால் நீ
"பேசாமல் சும்மா இரு!"
என்றல்லவா சொன்னாய்...?
என்று எழுதிவிடுவேன்.
:-))
கவிதைக்கும் எனக்கும் தூரம். நான் கவிதை படிப்பதில்லை.நீங்கள் கழுதை...... கற்பூரம் என்று சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் எதுகை மோனைக்காக நல்ல போராட்டம் போராடியிருக்கிறீர்கள். ரூம் போட்டு யோசிப்பீங்க்ளோ???.
ரசித்தேன்..சுவைத்தேன்...வாழ்த்துக்கள்...
வார்த்தை மழை பொழிகிறதே... ஒவ்வொரு துளியிலும் கவிதை கலக்குகிறதே.... மிகவும் அற்புதமாக இருந்தது. வார்த்தை - ஜகஜால வித்தை
ம்ம் அருமையான வார்த்தை விளையாட்டு
அசத்தலான கவிதை..
அழகிய கவிதை கௌசல்யா..
@@ FOOD கூறியது...
//வார்த்தை மழை வாசலில்.//
நன்றி அண்ணா ! :)
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
ரொம்ப நன்றிங்க :)
@@ Ananthi (அன்புடன் ஆனந்தி)...
அழகான ரசனைக்கு நன்றி தோழி :)
@@ சேட்டைக்காரன் கூறியது...
//கவிதை எழுதணுமுன்னு சில கவிதைகளை வாசிக்கும்போது தோணும். இதுவும் அதுலே ஒண்ணுன்னு சொல்லலாம்.//
உண்மைதானா ? எனக்கு பெருமை பிடிபடல போங்க...! :)
//ஆனா, நான் எழுதினா கொடுமையாயிருக்கும்...//
அப்படியில்ல...நகைச்சுவையாக இருக்கும் என்பது என் கணிப்பு ! உங்க பேருக்கு ஏற்றார்போல :)
//நீ பேசும் வார்த்தைகள்
என்னை பேச விடுவதில்லை
என்றும்..
ஏனென்றால் நீ
"பேசாமல் சும்மா இரு!"
என்றல்லவா சொன்னாய்...?//
கவிதை, படிப்பவர்களை ரசிக்க வைக்கணும் இப்போ இந்த வரிகளை நான் மிக ரசித்தேன். :)
இது போல் நீங்கள் ஒரு கவிதை எழுத வேண்டும் என்பது என் விருப்பம்...
ரொம்ப நாள் ஆச்சு உங்களை இங்கே பார்த்து. நலம் தானே ?
இன்று வந்த வருகைக்கும் அழகான ரசனைக்கும் என் நன்றிகள்.
@@கே. ஆர்.விஜயன் கூறியது...
//கவிதைக்கும் எனக்கும் தூரம்.//
ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமா ? :)
// நான் கவிதை படிப்பதில்லை.நீங்கள் கழுதை...... கற்பூரம் என்று சொன்னாலும் பரவாயில்லை.//
ம்...நீங்களே சொல்லிடீங்க நான் இதை எப்படி வெளிபடையா சொல்றது ?!! :))
//ஆனால் எதுகை மோனைக்காக நல்ல போராட்டம் போராடியிருக்கிறீர்கள்.//
எதுகை மோனை அப்படினா ? :))
எப்படியோ கவிதை வாசித்ததிர்க்கு நன்றி விஜயன்
@@ Reverie...
உங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்
@@ மாய உலகம் கூறியது...
கவிதையின் ரசனைக்கு மகிழ்கிறேன். நன்றிகள்
@@ பலே பிரபு...
நன்றி பிரபு :)
@@ அமைதிச்சாரல்...
நன்றி தோழி.
@@ !♥!தோழி பிரஷா...
நன்றி பிரஷா
இதுக்கு நான் கவிதை சூப்பர்னே சொல்லியிருப்பேன்.
கவிதை மிக அழகாக உள்ளது . படித்தேன் ! ரசித்தேன் !
சுவைக்கிறேன் சுகிக்கிறேன் தகிக்கிறேன் மறைக்கிறேன் இருக்கிறேன் //
அழகிய வார்த்தைகள்
கொண்ட அழகிய கவிதை
வாழ்த்துக்கள் தோழி....
@@ கே. ஆர்.விஜயன் கூறியது...
//இதுக்கு நான் கவிதை சூப்பர்னே சொல்லியிருப்பேன்.//
அப்படி சொல்லி இருந்தால் விளைவுகள் இன்னும் பயங்கரமா(?) இருக்கும் பரவாயில்லையா விஜயன் ?! :))
@@ shunmuga...
உங்களுக்கு என் நன்றிகள்.
@@ S Maharajan...
நன்றி நண்பரே.
//சுவைக்கிறேன் தேனென -அதில்
சுகிக்கிறேன் சுகமென - அனலாய்
தகிக்கிறேன் தவமென - அதை
மறைக்கிறேன் எதுவென - நான்
இருக்கிறேன் உனக்கென - நீ
இன்றி ஏதுமில்லை இன வாழ்வில் எனக்கென !!//
நல்ல அழகிய கவிதை:)
Post a Comment