நீண்ட நாள் முன்பு கேட்ட அதே சத்தம்
ஆங்கார ஓலம்
மிக கொடூரமாய்
மிக கொடூரமாய்
செவிப்பறையை தாக்க
கரங்களால் இருக பொத்தியும் மீறி
உள்ளே ஊடுருவி
உயிரை பிசைகிறது...
உயிரை பிசைகிறது...
வலியால்
கதறித் துடிக்கும் நெஞ்சில்
ரத்தம் கசியாத காயங்கள்...
இழுத்து
தோளில் சாய்த்து கொள்ள
நீண்ட கரம் ஒன்றை
பிடிவாதமாய் விலக்கி
பிடிவாதமாய் விலக்கி
ஓட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டேன்
நத்தை போலான நான் !
படம்- நன்றி கூகுள்
3 comments:
எனக்கு வந்த கனவு போலவே இருக்கிறது இந்த கவிதை..
//நீண்ட நாள் முன்பு கேட்ட அதே சத்தம்
ஆங்கார ஓலம்
மிக கொடூரமாய்
செவிப்பறையை தாக்க
கரங்களால் இருக பொத்தியும் மீறி
உள்ளே ஊடுருவி
உயிரை பிசைகிறது...
வலியால்
கதறித் துடிக்கும் நெஞ்சில்
ரத்தம் கசியாத காயங்கள்...//
நல்லா இருக்கு....
Romba nalla irukku kousalya.. en pondra manithargalai miga azhagaaga pirathibalikkirathu..!
Post a Comment