ரசிக்க விடு என்றேன்
பேச விடு என்கிறாய்
பேசி விடு என்றேன்
ரசிக்க விடு என்கிறாய்
இதோ
ரசித்து கொண்டே
பேசிக் கொண்டிருக்கின்றன
மௌனங்கள் இரண்டும் !!
* * * * * * * *
வார்த்தைகளால்
விவரிக்க முடியாத காதலை
மௌனம் பேசிவிடும் தருணத்தில்
உயிர் தொடும் தீண்டல்
தெய்வீகம் !
படங்கள் - நன்றி கூகுள்
4 comments:
தெய்வீக உணர்வுடன் கூடிய அழகான கவிதையை தீண்[ண்/ட்]டியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
ரசிக்க வைத்தது கவிதை..
கவிதைகள் அழகு.
வாழ்த்துக்கள்.
தீண்டல்...! நன்றாக உள்ளது..
Post a Comment