நீ பார்க்கும் பார்வைகள்
நீ கேட்கும் பாடல்கள்
நீ சுவாசிக்கும் சுவாசங்கள்
எல்லாமும் நானாக
முடிகிறது ...!
ஆசை தீர ரசித்து
சண்டை இட்டு மௌனித்து
சமாதானம் செய்யடா என கெஞ்சி
அப்படியே கொஞ்சவும்
முடிகிறது ...!
உன் காத்திருப்புகள்
கவனிப்புகள் என் ஒருத்திக்காக
கவனிப்புகள் என் ஒருத்திக்காக
சமாதானம் செய்து கொள்ள
முடிகிறது ...!
கதை பேசிக்கொண்டே
உன் விரல் சொடுக்கு எடுக்க
முடிகிறது ...!
உன் கையுடன் இறுக்கமாக
என் கை கோர்த்து பரவும்
வெப்பத்தில் என்னை எரிக்க
முடிகிறது ...!
வாய்ப்பில்லாத
அனைத்தையும்
சாத்தியமாக்கி குதூகளிக்க
முடிகிறது ..!
உடலெங்கும்
பரவும் சிலிர்ப்பில்
அனைத்தையும்
சாத்தியமாக்கி குதூகளிக்க
முடிகிறது ..!
உடலெங்கும்
பரவும் சிலிர்ப்பில்
மதிமயங்கி
படபடக்கும் நெஞ்சை
இறுகப் பிடித்து
விழிகளில் நீர் பெருக
மண்டியிட்டு
சரிந்து விழுகிறேன்
சரிந்து விழுகிறேன்
உன் காலடியில்
என் கனவுகளில்..!
என் கனவுகளில்..!
உயிரே!
காதலே!
தாயே!
இறையே!
இறையே!
என் ஜீவன் உள்ளவரை
என் கனவுகள் போதுமெனக்கு...!!
7 comments:
இயல்பான அழகியல் கவிதை. அருமை.
உயிரே!
காதலே!
தாயே!
இறையே!
என் ஜீவன் உள்ளவரை
என் கனவுகள் போதுமெனக்கு ...!!
•• இப்படி முடித்திருக்கலாம்.
@@ அகநாழிகை...
//இப்படி முடித்திருக்கலாம் //
மாத்தியாச்சு !
மகிழ்வுடன் நன்றிகள்.
:)
அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
உணர்வுகளை வானில் பறக்கவிட்டால் மட்டுமே சிரகடிகிறது நிலத்தில் தவள விட்டால் அழிந்துபோகிறது பலரின் கால்தடங்களில் பட்டு ஆகவே கனவாகவே இருப்பதில் மகிழ்வுதான் தோழி...........வரிகள் உணர்வுகளை வலியவிடுகிறது ............அருமை
" என் ஜீவன் உள்ளவரை
என் கனவுகள் போதுமெனக்கு...!! "
ம்ம்ம் அசத்துறீங்க..
Post a Comment