உலவும் காடுகளில்
கடவுளுக்கு ஏனோ
வேலையிருப்பதில்லை !
மனிதரின் கண்ணீர்
மொத்தமும் விழுந்து
நாள்காட்டியின்
ஏதோ ஒரு நாளில்
ஆழிபேரலை வரும்
அதில் அடித்துச்செல்லப்படும்
அத்தனை அசிங்கங்களும் !
சக மனிதனை
குத்திக்கிழிக்கும்
வெறிப்பிடித்த
தீநாவுகள்
கருகிப் போகும்
கர்வங்கள்
துரோகங்கள்
பொய்கள்
பசப்பு வார்த்தைகள்
மிகைப்பட்ட
கோமாளித்தனங்கள்
எதுவும் இருக்காது அந்நாளில் !
இறுதிநாளில்
தன்னுடன்
அழைத்து செல்ல
அழைத்து செல்ல
வந்த கடவுள்
ஏமாந்தே போவான்
மனிதன் ஒருவரையும் காணாமல் !?
படங்கள் - நன்றி கூகுள்
3 comments:
கனமான கவிதை இது...அந்த நாளுக்காக தான் காத்திருக்கறேன்..!வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு...
அழுத்தமான வரிகள் ...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
Post a Comment