எங்கெல்லாம் கூட்டி செல்கிறாயோ
அங்கெல்லாம் கேள்வி ஏதும் இன்றி
உன் கை பிடித்து வரும் என்னை...
'சிரி' என்று நீ சிரிப்பாய்
சிரிப்பேன்
'பேசு' என்று நீ பேசுவாய்
பேசிக் கொண்டே இருப்பாய்...
உன் வார்த்தையை
ஒவ்வொன்றாக
அசைபோட்டு மென்று தின்பேன்...
விழிகளால் உன்னை பருகி
நெஞ்சை நிறைக்கும் என்னை
நடு நடுவே
துடிக்கவைத்து ரசிப்பாய்...
சமயங்களில்
என் உயிரை
விலை பேசும் உன் மௌனம்
வெம்மை முழுமையாக
எரிக்கும் முன்
மண்டியிடுவேன்
உன் காலடியில்...
கர்வத்துடன் காதலால்
அள்ளி அணைப்பாய்...!
இதோ
பிரிந்து விட்டாய்
மற்றொரு விடை பெறுதல் !
பிரிவு தற்காலிகம்
மனதிடம் சமாதானம்
எடுபடவில்லை...
வழக்கத்திற்கு மாறாக
உன் தோளோடு தோள் நெருங்கி அமர்ந்து
உன் கரங்களை குழந்தையை போல
தூக்கி முத்தமிட்ட
அடுத்த கணம்...
கனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய
கரங்களில் என் பிடியின் அழுத்தம்
உணர்ந்து நிமிர்ந்த வேளை
விழியோரம் துளிர்த்தது நீர்
பதறி புரிந்தவனாய்
'சீக்கிரம் வந்துவிடுவேன்'
அதுவரை...?
அதுவரை.....!!
படம்-நன்றி கூகுள்
11 comments:
hii.. Nice Post
Thanks for sharing
நல்ல வரிகள்...
பிரிவுத் துயரம் கஷ்டமானது தான்...
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
அருமை.
வாழ்த்துகள்.
பிரிவின் ஆழம் மிகவும் அதிகமானதுதான்
நல்ல வரிகள்......
பிரிவின் துயரையும் காத்திருப்பதன் வலிகளையும்உணர்பூர்வமான கவிதை வடிவில் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி .மிக்க நன்றி பகிர்வுக்கு .
கனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய//
அதுக்கு பதில் கன்னத்துல அறைஞ்சு இருக்கலாம்... :)
@@ Sweety...
வருகைக்கு நன்றிகள்
@@ திண்டுக்கல் தனபாலன்...
நன்றிகள்.
@@ Rathnavel Natarajan...
நன்றி ஐயா.
@@ சிட்டுக்குருவி...
தொடரும் வருகைக்கு நன்றிகள்
@@ அம்பாளடியாள்...
மிக்க நன்றிகள் சகோ.
@@ சௌந்தர் கூறியது...
//அதுக்கு பதில் கன்னத்துல அறைஞ்சு இருக்கலாம்... :)//
அதானே ?! அடுத்த முறை சொல்லிடுறேன் :)
வலிக்கின்ற பிரிவு வார்த்தைகளிலும் தொனிக்கிறது.வாழ்த்துக்கள் சொந்தமே!!!
Post a Comment