எதிர்பாரா நேரத்தில்
சற்றுமுன் கேட்ட
உன் குரல்...
என் நரம்புகளை
உருவேற்றி சென்றதை
நீ அறிய மாட்டாய்...
சேகரித்து வைத்திருந்த
நினைவுகளை
உன் குரல்...
என் உயிர் பிளந்து
களவாடிய போனதை
நீ அறியமாட்டாய்...
என் தனிமைச்
சுமைகளை
உன் குரல்...
அதிகரித்துச் சென்றதை
நீ அறியமாட்டாய்...
தலைகோதி
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
செவியில் உன் குரல்
எதை முழுதாய் ரசிப்பது
தவித்து நிற்க்கையில்
சட்டென்று ஒலிக்கும்
உன் சிரிப்பொலி...
உன் சிரிப்பொலி...
அந்த அதிர்வில்
மொத்தமாய் சிதைந்து
சிதறி சருகாய் உதிர்ந்து
போனேன் நான் !
மீண்டு எழுவதற்குள்
முடிந்தே விட்டது
இந்த முறையும்
நம் தொலைபேசி உரையாடல் !!
நம் தொலைபேசி உரையாடல் !!
10 comments:
அருமை .அருமை .
Aha kadesila tholaipesiyil konduvanthu mudichidinka
superb...
அழகிய வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...
இனிய வரிகள்..
கடைசி வரியில பிண்ணிட்டீங்க.... அருமை....
கவிதையும், போன் உரையாடலும் கனவு போல சொல்லியுள்ளது அருமை...!
@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிகள்.
@@ கவி அழகன்...
நன்றி
@@ Kurinji...
வாங்க நலமா?
நன்றி
@@ திண்டுக்கல் தனபாலன்...
நன்றி.
@@ கோவி...
நன்றி.
@@ எல் கே...
நன்றி :)
@@ ரிஷ்வன்...
நன்றி :)
@@ MANO நாஞ்சில் மனோ...
இது கனவுகள் பூக்கும் தோட்டம் தானே...?! :)
நன்றி மனோ.
தொலைபேசி நினைவுகளை கூறிய விதம் அருமை தோழி
எனக்கான நிகழ்வுகள்,
உங்களின் கவிதைகளில் எப்படி தொடர்ச்சியாக..?
எனக்கு வலி கொடுக்கும் இனிய நினைவுகளை
உங்கள் கவிதைகள் தட்டி எழுப்புகின்றன...
Post a Comment