Showing posts with label சகோதரன். Show all posts
Showing posts with label சகோதரன். Show all posts
Posted by
Kousalya Raj
comments (44)
வரைய மறுத்து
வடிக்கிறது
உனக்கு ஒரு கவிதை !
பாசத்தையும் பரிவையும்
பாச கயிறாக்கி
என் நெஞ்சோடு
பிணைத்தாய் இறுக்கமாய் !
நீ பிறந்தாய்
உன் தாயின் மகனாக
நான் பிறந்தேன்
என் தாயின் மகளாக
இணையத்தால் இணைந்தோம்
ஒரே தாயின் பிள்ளைகளாய் !
இணைத்தது இறைவன் என்கிறேன் நான்
விதி என்று சொல்லி சிரிக்கிறாய் நீ !
வீட்டிற்கு வந்தேன் உன்னை காண
தயங்கி வாசலுடன் திரும்பினேன்
சிறகொடிந்து நீ
நிற்பதை காண சக்தி அற்று !
என்றாவது ஒரு நாள் என் வாசல்
வருவாய் நடந்து !
அந்நாளும் வந்திடாதோ
என் மனமும் குளிர்ந்திடாதோ !
என் மேல் நீ காட்டும் பாசம்
கண்டு என்னுள்ளம் கலங்குகிறது
என் பிள்ளையாய் நீ
பிறந்திருக்க கூடாதா என்று !!
என் சௌந்தரியமே
உரக்க ஒருமுறை அழைத்திடு
அம்மா என்றே
பாலையிலும் பூ பூக்கட்டும் !!


