நான்
செல்லும் வழியெங்கும்
சந்தோஷ பூக்களை
தூவி செல்கிறாய் !
நானோ துக்க மலர்களை
கூசாமல் உன் மீது எறிகிறேன்
இரக்கமின்றி !
புன்னகையுடன்
பெற்றுகொள்கிறாய்
இப்போது அவையும்
சிரிக்கின்றன உன்னைப்போல !?
வெட்கி தலைகுனிகிறது
என் கோபம் !!
இயன்றால் என் கோபத்தை
மொத்தமாய் சேர்த்தள்ளி
கேட்டு பார்
கேட்டு பார்
உண்மையான நேசம் இது
என்றே பதில் சொல்லும் !!
என்றே பதில் சொல்லும் !!
நூறாவது முறையாக படிக்கிறேன்
படிக்கும் போதெல்லாம்
என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'
24 comments:
..என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'..
எனக்கு இந்த அனுபவம் இருக்கு...
எனக்கு தான் இன்னிக்கு வடையா?
வெட்கி தலைகுனிகிறது
என் கோபம் !//
அட டா உண்மையாவா
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'///
அப்போ ஒரு தடவை sms அனுப்பினா போதும்...
நூறாவது முறையாக படிக்கிறேன்
படிக்கும் போதெல்லாம்
என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'
அழகான கவிதை....
இயல்பாய் என்ற தலைப்பில் எனக்கும் கவிதை எழுத தோன்றுகிறது
வாழ்த்துக்கள்...
nice! :-)
ஹாய் சகோ!
மூணு பாராவும் ஒரே கவிதையா இல்ல தனித்தனியாவா? நான் தனித்தனியாகவென கொள்கிறேன்.
முதல் கவிதையின் கடைசி வரி, பசுங்கிளையின் உச்சியில் நிற்கும் பூவென கண்சிமிட்டுகிறது :)
இரண்டாவது வழக்கமான உங்கள் நடையின் மற்றொரு தடம்!
ஓர் வார்த்தை, அது காதால் கேளாமல் கண்வழியூர்ந்து இதயம் நிறைக்கிறது உங்களுக்கு, எனக்கும்! :)
//நூறாவது முறையாக படிக்கிறேன்//
அலுக்காத பிரியத்தின் இதம் :)
great
இயல்பாய் இனிமையாய்...
Really nice!
Kurinji
நன்று
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
Nice
//நூறாவது முறையாக படிக்கிறேன் //
ஏன்? தமிழ் புரியாதா???
:)
நல்லா இருக்குங்க.
அக்கறையும் அன்பும் கலந்த கோபத்திலும் காதல் வாழ்கிறது...
//என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'//
உண்மையான காதலின் பிம்பம் இந்த வரிகளில் பிரதிபலிக்கிறது
@@சங்கவி...
ஓஹோ அப்படியா...?
:))
@@சௌந்தர்...
ஆமா போதும்.
:))
@@ரேவா...
இயல்பாய் என்ற தலைப்பில் விரைவில் உங்களிடம் இருந்து கவிதை எதிர்பார்கிறேன். :))
உங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
@@ஜீ...
நன்றி சகோ.
@@Balaji Saravana ...
தனி தனி கவிதை தான் பாலா.
//பசுங்கிளையின் உச்சியில் நிற்கும் பூவென கண்சிமிட்டுகிறது :)//
என்ன ஒரு ரசனை...! சூப்பர் !!
//ஓர் வார்த்தை, அது காதால் கேளாமல் கண்வழியூர்ந்து இதயம் நிறைக்கிறது உங்களுக்கு, எனக்கும்! :)//
அடடா அப்படியே உணர்வை சொல்லிடீங்களே !!
அழகான ரசனைக்கு நன்றி பாலா.
@@பார்வையாளன்...
நன்றி சகோ.
@@வெறும்பய...
நன்றி சகோ.
@@Kurinji ...
thank u freind.
@@விஜய்...
நன்றி சகோ.
T.V.ராதாகிருஷ்ணன்...
நன்றி சகோ.
@@அன்பரசன்...
//ஏன்..தமிழ் புரியாதா?//
அது புரிந்தது... :))
நல்ல சந்தேகம் சகோ உங்களுக்கு..!!?
@@வினோ...
//அக்கறையும் அன்பும் கலந்த கோபத்திலும் காதல் வாழ்கிறது...//
உண்மைதான் சகோ.
நன்றி. :))
ANKITHA VARMA கூறியது...
//உண்மையான காதலின் பிம்பம் இந்த வரிகளில் பிரதிபலிக்கிறது//
ம்...ரசனைக்கு மகிழ்கிறேன். உங்களின் முதல் வருகை பிடித்திருக்கிறது.
நன்றி.
எல்லா வரிகளுமே அழகு..!!
//நூறாவது முறையாக படிக்கிறேன்
படிக்கும் போதெல்லாம்
என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'//
ரொம்பவே அழகு..!!
Post a Comment