உன்னை தவிர வேறு யாரையும்
விரும்பவில்லை
என்று மறந்தும் நீ
சத்தியம் செய்ததில்லை !
உன் பேனா என்றும்
எனக்காய் கவி எழுதியதில்லை !
உன் மேகம் இதுவரை
என்மீது மழை பொழிந்ததில்லை !
உன் தேடல் ஒரு போதும்
எனக்காய் இருந்ததில்லை !
உன் கனவில் நான் வந்ததாய்
இதுவரை தகவலில்லை !
உனக்குள் என் நினைவுகள்
இருப்பதாய் ஆதாரம் இல்லை !
உன் வார்த்தைகள் என்னை
விரும்புவதாய் சொன்னதில்லை !
உனக்காய் எழுதும் கவிதைகளை
நீ வாசித்ததும் இல்லை !
உன் நடைகள், தவறியும்
என் வாசல் வந்து சென்றதில்லை !
உனது காத்திருப்புகள்
எனக்காய் காத்திருந்ததில்லை !
உனக்கு பிடித்தவர்கள்
பட்டியலில் என் பெயர் கூட இல்லை !
......................
......................
......................
இருந்தும்
'உன்னை நான் விரும்புகிறேன்'
உயிராய், உணர்வாய், யாவுமாய்....!!
23 comments:
இன்னிக்கு வடை எனக்கா...
..உனக்காய் எழுதும் கவிதைகளை
நீ வாசித்ததும் இல்லை !
உன் நடைகள், தவறியும்
என் வாசல் வந்து சென்றதில்லை !..
விரும்பிய வரிகள்...
உதாசீனப்படுத்தியும் உள்ளன்போடு காத்திருக்கும் காதலின் வலு(லி)மிகும் வார்த்தைகள்.
நல்லாயிருக்கு சகோ :)
ஆகா.. மணிரத்னம் பட வசனம் ஸ்டைலில் காதல் கவிதை...வித்தியாசமாய்..
நல்லா இருக்குதுங்க...
//உனது காத்திருப்புகள்
எனக்காய் காத்திருந்ததில்லை !
உனக்கு பிடித்தவர்கள்
பட்டியலில் என் பெயர் கூட இல்லை //
\
பிடித்த வரிகள்..
ஒரு தலை காதல் கவிதை, நல்லா இருக்குங்க.
superb
ஒரு பக்க காதலா? சகோ ரெண்டு பக்கத்துல கவிதை அருமை...
// உன் தேடல் ஒரு போதும்
எனக்காய் இருந்ததில்லை !
உன் கனவில் நான் வந்ததாய்
இதுவரை தகவலில்லை !//
அடடா ..!!
// உனது காத்திருப்புகள்
எனக்காய் காத்திருந்ததில்லை !
உனக்கு பிடித்தவர்கள்
பட்டியலில் என் பெயர் கூட இல்லை !//
ஒரு வேளை ரொம்ப பிடித்தவர்கள் பட்டியலில் இருப்பீங்களோ ..?!
நல்ல கவிதை.. சூப்பர்..
கவிதை நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
ஆகா..superb
எல்லாம் இல்லை .இல்லை என்று சொல்லிவிட்டு கடைசி பாராவில் யாவுமாய்ன்னு போட்டு இருக்கேங்க இது செல்லாது .உங்கள் பாட்டில் (கவிதா(தை ))யில் குற்றம் இருக்கிறது ..... (பெரிய நக்கீரன் பரம்பறையோ ன்னு யாரோ சொல்லுறது கேக்குது )
இன்னும் ரெண்டு வாடி படிச்சிட்டு வரேன் அப்பவாது மர மண்டைக்கு புரியுதான்னு பாப்போம் ????????
நல்ல காதல்
விரும்புங்க ... அவங்களும் விரும்புவாங்க ..
நல்லா இருக்குங்க
'உ' க்கள் அனைத்தும் அருமை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
அடடே.. அழகாய் இருக்கிறது கவிதை..!! :-)
@@சங்கவி...
நன்றி சகோ...
@@Balaji saravana...
//உதாசீனப்படுத்தியும் உள்ளன்போடு காத்திருக்கும்//
புரிதலுக்கு நன்றி சகோ.
@@பாரத்... பாரதி...
தொடர் ரசனைக்கு நன்றி.
@@Chitra கூறியது...
//ஒரு தலை காதல் கவிதை//
ஆமாம் சித்ரா அப்படி கற்பனை செய்து எழுதிய கவிதை தான். நன்றி
@@பார்வையாளன்...
ரசனைக்கு நன்றி சகோ.
@@வினோ...
புரிதலுக்கும், ரசனைக்கும் நன்றி சகோ.
@@கோமாளி செல்வா...
//ஒரு வேளை ரொம்ப பிடித்தவர்கள் பட்டியலில் இருப்பீங்களோ ..?!//
அந்த லிஸ்ட்லயும் செக் பண்ணிட்டேன் செல்வா அதிலும் இல்லை...அந்த கோபத்தில் தான் இந்த கவிதை... :))))
@@பதிவுலகில் பாபு...
ரசனைக்கு நன்றி சகோ.
@@வெங்கட் நாகராஜ்...
நன்றி சகோ.
@@Velu .G
நன்றி சகோ.
@@அரசன் கூறியது...
//விரும்புங்க ... அவங்களும் விரும்புவாங்க ..//
சரிங்க அப்படியே ஆகட்டும்...:)
@@விஜய்...
ரசனைக்கு நன்றி சகோ.
நன்றி.
@@பால் [Paul]...
//அடடே.. அழகாய் இருக்கிறது கவிதை..!! //
அடடே...உங்கள் வருகையும் நல்லா இருக்கிறதே... :))
வருகைக்கு நன்றி.
@@T.V.ராதாகிருஷ்ணன்...
ரசனைக்கு நன்றி சகோ.
இம்சை அரசன் பாபு...
//உங்கள் பாட்டில் (கவிதா(தை ))யில் குற்றம் இருக்கிறது ...//
எத்தனை குற்ரம் இருக்கிறதோ அதை மட்டும் தவிர்த்து விட்டு மத்ததுக்கு ஏதோ கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க பாபு... கை வலிக்க டைப் பண்ணி இருக்கிறேன்...!! :)))
//இன்னும் ரெண்டு வாடி படிச்சிட்டு வரேன் அப்பவாது மர மண்டைக்கு புரியுதான்னு பாப்போம் ??//
இன்னும் கூட நாலு வாட்டி படிங்க, புரிஞ்சாலும் புரியும்... :))
நன்றி பாபு
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
Post a Comment