நீ பயணிக்கும் பாதைகளில்
என் நேசம் பின் தொடருவதை
நீ அறியாய் !
உன் பெயரை கையெழுத்திட்டு கிழித்த
என் காசோலைகளின் எண்ணிக்கை
நீ அறியாய் !
நீ எழுதி கொடுத்த காகித பிரதியை
அலங்கரித்து தினம் பூஜிப்பதை
நீ அறியாய் !
ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?
*****************************************
நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!
*****************************************
என் ஒரே நம்பிக்கை
பந்தயத்தில்
முன்னால் பலர் சென்றாலும்
முடிவில்
நீதான் வருவாய் முதலில் !!
25 comments:
நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!///
அப்போ எவ்வளவு நேரம் பேசினாலும் வேலைக்கு ஆகாது
என் ஒரே நம்பிக்கை
பந்தயத்தில்
முன்னால் பலர் சென்றாலும்
முடிவில்
நீதான் வருவாய் முதலில் !!///
பந்தயம் ணா எந்த பந்தயம் சொல்லுங்க
சௌந்தர் கூறியது...
//பந்தயம் ணா எந்த பந்தயம் சொல்லுங்க//
ம்... எந்த பந்தயம்னாலும் என் ஆள்தான் முதலில் வருவார் அப்படின்னு அர்த்தம் !! :)))
ரொம்ப நல்ல இருக்குதுங்க!
குறிஞ்சி குடில்
ரொம்ப வெறித்தனமான லவ்வா இருக்குமோ?.
//ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?//
மொரட்டு நேசமா இருக்கும்போல...
நல்லாருக்குங்க....சூப்பர்
காதல் வந்தால் இப்படித்தானோ
கவிதை சூப்பர்
paaraaddukal.
http://kaatruveli-ithazh.blogspot.com/
// நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை //
ஸ்பீக்கர் அவுட்டா...
//நீ பேசுவது ஒன்றும் செவி சென்று சேருவதில்லை அதற்கு முன் என் இதயம் வாங்கிவிடுவதால் //
ஓ! டேக் டைவர்சன் ஆயிடுதோ?! #டவுட்டு ;)
//உன் பெயரை கையெழுத்திட்டு கிழித்த என் காசோலைகளின் எண்ணிக்கை நீ அறியாய் //
அந்தக் கையெழுத்த அவரோட காசோலைல போட்டிருக்கலாமே! ஜஸ்ட் மிஸ் ;)
//நீதான் வருவாய் முதலில் !! //
:))
அடடே அழகா இருக்கே கவிதை.. :)
கவிதை அழகு.
//ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?//
என்னமா யோசிக்கிறீங்க..
நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!////////////
அருமையான வரிகள்...
ஒவ்வொரு வரிகளுமே அருமை
காதல் கவிதைக்கான என் கைத்தட்டுகள்.
அருமையான கவிதை...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.
@@ சௌந்தர் கூறியது...
//அப்போ எவ்வளவு நேரம் பேசினாலும் வேலைக்கு ஆகாது//
சரியாய் படி இன்னொரு முறை...
:))
@@ Kurinji கூறியது...
நன்றி தோழி.
@@ இனியவன் கூறியது...
//ரொம்ப வெறித்தனமான லவ்வா இருக்குமோ?.//
ஒரு விதத்தில அப்படிதான்... :))
@@ மாணவன் கூறியது...
//மொரட்டு நேசமா இருக்கும்போல...//
மிரட்டும் நேசமும் கூட...! :))
@@ dineshkumar கூறியது...
//காதல் வந்தால் இப்படித்தானோ//
அப்படினா என்னனு தெரியாத மாதிரி இது என்ன கேள்வி ?? :))))
@@ முல்லை அமுதன்...
முதல் வருகைக்கு நன்றி
@@ Philosophy Prabhakaran கூறியது...
//ஸ்பீக்கர் அவுட்டா.//
பேசினதை கேட்டு கேட்டு ஒரு வேளை specker அவுட் தான் போல...
:))
Balaji saravana கூறியது...
//நீ பேசுவது ஒன்றும் செவி சென்று சேருவதில்லை அதற்கு முன் என் இதயம் வாங்கிவிடுவதால் //
//ஓ! டேக் டைவர்சன் ஆயிடுதோ?! #டவுட்டு ;)//
அதே தான் !! :))
//அந்தக் கையெழுத்த அவரோட காசோலைல போட்டிருக்கலாமே! ஜஸ்ட் மிஸ் ;)//
உள்ள போக யோசனை சொல்றது மாதிரி இருக்கு பாலா !? :)))
@@ பால் [Paul] கூறியது...
//அடடே அழகா இருக்கே கவிதை.. :)//
ஆச்சரிய குறி காணும்...?!
நன்றி :)))
@@ சே.குமார்...
நன்றி சகோ.
@@ இந்திரா கூறியது...
//என்னமா யோசிக்கிறீங்க.//
என் காதல் மேல் உள்ள நம்பிக்கை இப்படி சொல்லுது இந்திரா. :))
@@ ஜெ.ஜெ...
நன்றிங்க.
@@ தமிழ்த்தோட்டம்...
வருகைக்கு நன்றி
@@ சி. கருணாகரசு கூறியது...
//காதல் கவிதைக்கான என் கைத்தட்டுகள்.//
ரொம்ப நன்றிங்க...ஆனா எனக்கு கேட்கிற மாதிரி தட்ட கூடாதா...??!!
:))
@@ தோழி பிரஷா...
ரசனைக்கு நன்றி பிரஷா.
@@ தமிழ் உலகம்...
நன்றிங்க ...இணைகிறேன்
Post a Comment