கருத்தை கருத்தாய் கவர்ந்தவனே !
கவிதையாய் வலம் வருபவனே !
கள்குடித்த வண்டாய்
என் மனதை மாற்றியவனே !
மனதில் எழுதி வைத்த அவன் பெயரை
ரகசியமாய் தனிமையில்
உச்சரிப்பதை கண்டு மொட்டை மாடி
சுவர்களும் சிரிக்கிறதே
நான் ஒரு கோழை என்று !!
மலர்ந்த ரோஜா இதழ் தொட்டு
அவன் ஸ்பரிசம்
உணர்ந்து ரசிப்பதை பார்த்த
ரோஜாவும் பரிகசிக்கிறதே
நான் ஒரு பேதை என்று !!
ஒன்றும் ஒன்றும் இரண்டாம்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
எதிர் வீட்டு சுட்டி குழந்தை
சத்தமாக சொல்கிறது
நான் ஒரு முட்டாள் என்று !
பரவாயில்லை
சொல்லிவிட்டு போகட்டும் !
எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!
அழைக்கும் போது !!
*****************
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!
*****************
39 comments:
நல்ல காதல் கவிதை மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்...
//எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!//
மிக மிக ரசித்தேன் உங்கள் வரிகளை...
//ஒன்றும் ஒன்றும் இரண்டாம்//
எவன் சொன்னான்
11
இப்படி தானே வரும் ..செல்லாது செல்லாது ...கவிதையே செல்லாது ....
நீ அழைக்கும் தருணம் ஆயிரம் தடங்கல் வந்தாலும் தவறாது தடை தாண்டி வருவேன்.
அருமை சகோ!
//உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !//
அட்டகாசம் சகோ! காதல் பஞ்ச்! :)
கோழை,பேதை இன்னொன்றை விட்டு விட்டீர்கள் போதை ....
கல் குடித்தால் போதை தானே வரும் .அப்புறம் எப்படி கவிதை வரும் .உங்கள் கவிதையில் பிழை இருக்கிறது .சொர்குற்றமா? பொருள்குற்றமா ? ன்னு கேக்க கூடாது சகோ .......
//எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!//
யதார்த்த வரிகள்.
ரசிக்க வைத்தன.
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!
..... interesting lines... very nice. :-)
// எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !! //
நல்ல கவிதை. பளீச் முடிவு.
நல்ல கவிதை உணர்வுள்ள வரிகள் வலிகளும் சுமக்கும் காதல் அல்லவா
நெஞ்சில் நிறைந்தவனே - என்
கருத்தை கருத்தாய் கவர்ந்தவனே !
கவிதையாய் வலம் வருபவனே !
கள்குடித்த வண்டாய்
என் மனதை மாற்றியவனே !////
மாற்றியது யார்...
மனதில் எழுதி வைத்த அவன் பெயரை
ரகசியமாய் தனிமையில்
உச்சரிப்பதை கண்டு மொட்டை மாடி
சுவர்களும் சிரிக்கிறதே
நான் ஒரு கோழை என்று !!////
ஒன்னும் செய்ய முடியாது......முத்தி போச்சி..... என்ன சொல்வேன் உங்களுக்கே தெரியும் ..........
ஒன்றும் ஒன்றும் இரண்டாம்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
எதிர் வீட்டு சுட்டி குழந்தை
சத்தமாக சொல்கிறது
நான் ஒரு முட்டாள் என்று !///
உண்மையை சொல்லுது அந்த குழந்தை
பரவாயில்லை
சொல்லிவிட்டு போகட்டும் !
எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!////
ம்ம்ம் இதோ பாரு டா
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!////
இது நல்லா இருக்கே.....
superb :)
கவிதை அருமை. கடைசி இந்த இரண்டு வரிகள் அருமையிலும் அருமை.
காதல் வந்திட்டாலே அறிவு வெளில போய்டுமோ கௌசி.பாருங்க முட்டாளா பைத்தியமா ஆக்கி வச்சிருக்கு உங்களை !
// உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !விரும்பி உன்னில் தொலைகிறேன் !!//
கொன்னுட்டீங்க.... சூப்பர்
nice..
>>> எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!
good lines
>>> உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!
this is also good.
//உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !விரும்பி உன்னில் தொலைகிறேன்!!//
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்...........................! அக்கா எப்படி சொல்றதுனே தெரியல..! இந்த வரிகள்ள பின்னி எடுத்துட்டீங்க....
கடைசி ஆறு வரிகள் அருமை சகோ...
/உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!//
இது தான் டாப்
//உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!///
ஹா ஹா... என்ன என்ன... டென்ஷன் ஆகி.. ஏதோ போன போகுது போ.. ன்னு சொல்ற மாதிரி இருக்கு.. ;-))
நல்லா இருக்குங்க... கவிதை.. :-)
சொல்லி விட முடியாதா?
Superb poet!!!
Amazing lines!!!
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன்//
நல்லா இருக்கு சகோ
@@ சௌந்தரபாண்டியன்...
உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
@@ சங்கவி...
நன்றி சதீஷ்.
@@ இம்சை அரசன் பாபு...
ஒன்னும் ஒன்னும் பதினொன்னா?? உங்களுக்கு கணக்கு வாத்தியார் யாரோ...??!!
//கள் குடித்தால் போதை தானே வரும் //
எனக்கு என்ன தெரியும்...?!! :)))
//உங்கள் கவிதையில் பிழை இருக்கிறது //
பிழை பொறுத்தருள்க...
@@ Balaji saravana கூறியது...
//நீ அழைக்கும் தருணம் ஆயிரம் தடங்கல் வந்தாலும் தவறாது தடை தாண்டி வருவேன்.//
குட் இப்படிதான் இருக்கணும்...ஆமாம் இதை யார்கிட்ட சொல்றீங்க??!! :))
உன் வரவு கண்ட பின்னே
காகிதமும் கவிதையாகிறது...!!
இது எப்படி??? :))
@@ இந்திரா...
ரசனைக்கு நன்றி தோழி.
@@ Chitra ...
தேங்க்ஸ் சித்ரா.
@@ பாரத்... பாரதி...
ரசனைக்கு நன்றிங்க.
@@ dineshkumar கூறியது...
//நல்ல கவிதை உணர்வுள்ள வரிகள் வலிகளும் சுமக்கும் காதல் அல்லவா//
அற்புதம் தினேஷ். நன்றி.
@@ சௌந்தர் கூறியது...
//மாற்றியது யார்...//
அவர்தான்...!!
//ஒன்னும் செய்ய முடியாது......முத்தி போச்சி..... என்ன சொல்வேன் உங்களுக்கே தெரியும் .........//
நோ சௌந்தர் அந்த மாதிரி நீயே சொல்ல கூடாது...நாம எல்லாம் ஒன்னு தானே.
//உண்மையை சொல்லுது அந்த குழந்தை//
அது குழந்தை தானே விவரம் போதல. :)))
ரொம்ப நல்லா இருக்கு கவிதை..!! :) எங்கும் காதல்.. எதிலும் காதல்..!! :)
@@ ஜெ.ஜெ...
நன்றி சகோ.
@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ ஹேமா கூறியது...
//காதல் வந்திட்டாலே அறிவு வெளில போய்டுமோ கௌசி.பாருங்க முட்டாளா பைத்தியமா ஆக்கி வச்சிருக்கு உங்களை//
தெரியாத மாதிரி இது என்ன கேள்வி ஹேமா...?! :))
சேம் பிளட் என்று நினைச்சேனே... :)))
@@ மாணவன் கூறியது...
//கொன்னுட்டீங்க....//
அடடா, அப்படி ஏதும் பண்ணலையே ?!! :))
@@ வெறும்பய...
நன்றி.
@@ சி.பி.செந்தில்குமார்...
உங்களின் ரசனைக்கு மகிழ்கிறேன்.
@@ கவிநா... கூறியது...
// அக்கா எப்படி சொல்றதுனே தெரியல..! இந்த வரிகள்ள பின்னி எடுத்துட்டீங்க..//
உனக்கு கிடச்ச கொஞ்ச நேரத்திலும் கவிதையை படித்ததுக்கு நன்றி காயத்ரி.
@@ வினோ...
ரசனைக்கு நன்றி வினோ.
@@ அன்பரசன் கூறியது...
//இது தான் டாப்//
அப்ப மத்தது எல்லாம் டூப்பா...?! :)))
@@ Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...
//ஹா ஹா... என்ன என்ன... டென்ஷன் ஆகி.. ஏதோ போன போகுது போ.. ன்னு சொல்ற மாதிரி இருக்கு.. ;-))//
ஆமாம் ஆனந்தி ஒரு சலிப்பு தான்...!? :))
அழகா ரசிக்கிறீங்க தோழி. மகிழ்கிறேன்
@@ Thanglish Payan...
thank u friend.
@@ கல்பனா...
ரசனைக்கு நன்றி தோழி.
//// உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!///
வார்த்தைகளில் மட்டும் அல்லாது, கருத்திலும் கண்ணீர் சிந்த வைக்கும் வைர வரிகள்.
மிக ஆழமான கருத்து செறிவு.
விருப்பம் என ஒன்று விழுதாக ஆகும் போது, உறவினில் சில சமரசம் செய்து கொண்டு, நாம் சொல்வோம்....
நிலவின் களங்கம் அழகு என்று. அதெப்படி,பளீர் வெண்மைதானே நிலவின் குணம். ஏறிட்டு பார்ப்பது நிலவின் குளிர் ஒளிக்குத்தானே.... என கேள்விகள் கேட்காமல்.
அது போல் ஒரு மெல்லிய ஆதாரமான ஒரு உணர்வை அந்த முதல் வரி சொல்கிறது..
பிரமாதம்..
கடைசி இரண்டு வரிகள் நச்சுனு இருக்கு
Post a Comment