புகைப்படத்தில் வசீகரித்த
மர்ம புன்னகை !
என்னை கட்டி போட்ட
புயல் வேக பேச்சுக்கள் !
வார்த்தைகளின் ஊடே
மிரட்டும் சிரிப்புகள் !
பரிமாறிய மின் அஞ்சல்கள்,
குறுந்தகவல்கள் !
செல்ல சண்டைகள்,
சமாதானங்கள் !
செல்பேசி சிணுங்கலுக்கான
காத்திருப்புகள் !
ஓவியமாக தெரிந்த
உன் கையெழுத்து !
காதலை கொட்டி
எழுதிய கவிதைகள் !
ஏதாவது ஒரு தருணத்தில்
உண்மையை சொல்லி இருக்கலாம்
......
நான் விரும்பிய உன்னில்
என்னை நிரந்தரமாக
இருத்திக்கொள்ள
விரும்புகிறேன் என்று !!
படம் - நன்றி கூகுள்
18 comments:
நடிகை அமல்வுக்கு கண்ணு மாதிரி இருக்கு ........படம் சூப்பர் .....
நடிகை அமலாவுக்கு கண்ணு மாதிரி இருக்கு ........படம் சூப்பர் .....
அழகான படம் உணர்வுமிக்க கவிதை தோழி :)
புயல் வேக பேச்சுக்கள் !///
கரையை கடந்து விட்டதா
வார்த்தைகளின் ஊடே
மிரட்டும் சிரிப்புகள் !///
நம்பியார் சிரிப்போ
பரிமாறிய மின் அஞ்சல்கள்,
குறுந்தகவல்கள் !
செல்ல சண்டைகள்,
சமாதானங்கள் !///
ஓஹ சமாதானம் ஆயாச்சா
உண்மையை சொல்லி இருக்கலாம் ///
...................
அழகின் விவரிப்புகளினூடே ஏக்கத்தின் பிம்பம்! அருமை சகோ!
very nice.
அருமைங்க ... வரிகள் ஒவ்வொன்றும் அழகு ..
ம்... நல்லாத்தான் இருக்கிறது உங்கள் கவிதை தோழி! கடைசி நான்கு வரிகளும் டச்சிங்! சொல்லவேண்டியதை ஒரு போதுமே மனதில் வைத்துப் பூட்டக் கூடாது!
அது சரி தோழி நம்ம ஏரியாவுக்கு வரவே மாட்டேன் என்கிறீர்களே! கோபமா என்ன?
அழகான படம்.வரிகள் அருமை.
இவ்வளவு நினைவுகலையும்... கோர்வையாய் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
கரைபுரண்ட அன்பின் கவிதை தொகுப்பா? நல்லாயிருக்கு.
ம்ம்ம்... சொல்லாத காதலா அக்கா? அந்த கண்களிலேயே தெரிகிறதே காதல். அருமையான படம். அழகான கண்கள்..
//நான் விரும்பிய உன்னில்
என்னை நிரந்தரமாக
இருத்திக்கொள்ள
விரும்புகிறேன் என்று !! //
எப்போதுமே இறுதிவரிகளில் படிக்கும் இதயங்களை இழுத்துப்பிடித்துவிடுகிறீர்கள் அக்கா... அருமை..
நல்லாயிருக்கு வரிகள்..
kavithai alagu
கண்கள் அழகா இருக்கு..
கவிதையும் அழகா இருக்கு..
உணவுர்வை வெளிப்படுத்தும் கவிதை.
அந்தப் போட்டோ எங்கங்க பிடிச்சீங்க... கவிதை சொல்லும் கண்கள்.
கவிதை அழகு
ஆமாங்க உண்மையைச் சொல்லியிருக்கலாம்
இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல
//சொல்லாதே காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது//
என்பதை நினைவுபடுத்திவிட்டீர்கள் ..!
நீங்களுமா ??
நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்.
கா.வீரா
www.kavithaipoonka.blogspot.com
Post a Comment