மௌனமான மௌனங்கள் !
திரை விலகும் தருணம்
எதிர்பார்த்தே
விழும் மற்றொரு கனத்த திரை !
எதற்கான ஊடல்,
மறந்து புதிதாய் சேர்ந்த
உனது பாரா முகம் !
உனக்கான சொற்கள், தகவல்கள்
எனக்குள்
பிடிவாதமாய் மரிக்கின்றன !
தனிமை உதடுகள் அசைய
வார்த்தைகள் காற்றில்
கேட்பாரற்று!
நீண்ட மௌனம்
நீள் உறக்கத்திற்கான
ஒத்திகை !?
பிரிவு வலிக்கிறதுஒத்திகை !?
மௌனம் இதயம் பிளந்தாலும்
சுகித்து திளைக்கிறது காதல் !
பூமி நனைத்த மழை
ஒரு போதும்
வான் நனைத்ததில்லை !
நீ வான்
வெப்பம், குளுமை உன்னில் !
நான் மண்
தாங்குவேன் என்னில் !
தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?!
காலமற்று போய்
திசைகளற்ற பயணத்தில்
செயலற்று பறக்கும்
சிறகுகளற்ற
ஒரு சிறு பறவை !!
படங்கள் - நன்றி கூகுள்
20 comments:
பூமி நனைத்த மழை
ஒரு போதும்
வான் நனைத்ததில்லை !
நீ வான்
வெப்பம், குளுமை உன்னில் !
நான் மண்
தாங்குவேன் என்னில் !
அருமையான வரிகள்! நீங்கள் கையாண்ட உவமை புதுசு + அசத்தல்!
//தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?!//
நிச்சயம் இல்லை...
நீண்ட மௌனம்
நீள் உறக்கதிற்கான
ஒத்திகை !?
பிரிவு வலிக்கிறது
மௌனம் இதயம் பிளந்தாலும்
சுகித்து திளைக்கிறது காதல்
வரிகள் அருமை நன்றாக உள்ளது.
அசத்தல்....
பிடிவாதமாய் மரிகின்றன !
i think marikkindrana
>>//தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?!//
kalakkal lines
nallaayirukku..
last 3 stanza
superb
// தனிமை உதடுகள் அசைய
வார்த்தைகள் காற்றில்
கேட்பாரற்று! //
வாவ்வ்... அருமை அக்கா.... இந்த வரிகள் மட்டுமல்ல... இன்னும் நிறைய வரிகள் "அட" போட வெச்சது...
ரொம்ப அற்புதம் அக்கா...
(அது சரி என்னக்கா, இப்பெல்லாம் ஒரே பிரிவுக் கவிதைகளாவே வருது. சந்தோசமா, அந்த "இனியது காதல்" தொடரின் அடுத்த பாகத்தைப் போடுங்கக்கா சீக்கிரம்.... :) )
வழக்கம் போல அருமை.
அருமை
உங்களின் ஒவ்வொரு கவிதையும் அருமையாக உருபெற்று வருகிறது. பாராட்டுக்கள்!
அருமை.பாராட்டுக்கள்!
வர வர உங்கள் கவிதைகள் மெருகேறிக்கொண்டே போகிறது
கடைசி பத்தி மிக அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
அருமை...
கௌசி....காதலின் உணர்வை.....
பூமியை நனைத்து தன் குளிச்சி தரும் வானம்.அருமை தோழி !
கடைசிப் பாரா எக்ஸலண்ட் சகோ! மொத்த எடையும் அதிலே தான்!
"தவிப்பதும்
தடுமாறுவதும்
காத்திருப்பதும்
கலங்குவதும்
காதலுக்கு புதிதா ?"
This is good!
உங்களுக்கு விருது வழங்கி இருக்கிறேன் பெற்றுகொள்ளவும்.
நல்லாயிருக்குங்க.
Post a Comment