தவம் கிடக்கிறோம்
நானும் தொலை பேசியும் !
சிணுங்கும்
ஒவ்வொரு முறையும்
உன் குரலை எதிர்பார்த்து
சலித்த மனது !
என்றோ வரும்
அழைப்புக்காய்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
பேசித்தொலை தொலைபேசி !!
நலம் விசாரிப்பு
ஊடல்
கோபம்
தவிப்பு
கண்ணீர்
கெஞ்சல்
கொஞ்சல்
கூடல்
சிரிப்பு
அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...
நான் தனித்தில்லை
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!
25 comments:
தொலைபேசித்தவம் என்றுமே இனிமையானது
நல்ல கவிதை...
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
superb
//தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
பேசித்தொலை தொலைபேசி !!//
என்ன கௌசல்யா சார் ஊருக்கு
போய் இருக்காரா?
கவிதை அருமை.............
அலெக்சாண்டர் ஹிரகாம் பெல்லுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேணும்!
பிரிந்து வாழும் காதல் ஜோடிகளுக்கு பொருத்தமான கவிதை..
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்////
ரொம்ப தொல்லையா...?
உங்கள் தவம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!///
நீங்க ரொம்ப நல்லவங்க....
கௌசி...காதலோடு காத்திருப்பு சுகம் உங்கள் கவிதைகள்போல !
அருமை
வாசித்து
வாக்களித்தேன்
காதலில் காத்திருத்தல் சுகம்
Avoid using cellphone :)
anyway superb poem.
தொலைபேசி கைக்கிளையா !!!
வாழ்த்துக்கள்
விஜய்
பில்லு எகிரட்டும்...
தொலைவிலிருந்து தொலைபேசியால் தொட்டுட்டீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.
அருமை .வாழ்த்துக்கள்.
// பேசித்தொலை தொலைபேசி//
ada!
//இன்றாவது பேசித்தொலை தொலைபேசி//
கலக்கல்...
//அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...
நான் தனித்தில்லை
இவ்வாறு
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் !!//
பிரிவுத்துயர் நீக்கும் சமாதானமா அக்கா?
அருமை.. வாழ்த்துக்கள்..
The blog is very good!
Congratulations!
http://nelsonsouzza.blogspot.com
Hi, good work! Excellent blog. I am an educator and I am constantly gathering information, I invite you to visit the mine on philosophy, literature and film. If you want to know, the address is:
http://alvarogomezcastro.over-blog.es
Greetings from Santa Marta, Colombia.
கவிதை மனதில் தைக்கிறது....
//என்றோ வரும்
அழைப்புக்காய்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
தொலை பேசியும்
தொலைந்த மனதும் !//
...ஹ்ம்ம்.. ரொம்ப அழகா இருக்குங்க.
எதிர்பார்ப்பதிலும், காத்திருத்தலிலும் கூட ஒரு வலி கலந்த சுகமும் உண்டு.. :-))
// அனைத்தும்
நிகழ்ந்துவிடுகிறது
தொலைபேசியில்...//
ஓஹோ..
தவம் கிடக்கிறோம்
நானும் என் கணினியும் !
காற்றில் மின் விசிறி சுற்றும்
ஒவ்வொரு முறையும்
மின் சாரம் வந்துவிட்டது என்று எதிர்பார்த்து
சலித்த மனது !
என்றோ வரும்
மின்சாரத்துக்காக
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறது
என் கணினி & தொழில்
தொலைந்த மனதும் !
தொல்லையடா உன்னுடன்
இன்றாவது
வரும்ம ஒழுங்கான மின்சாரம் !!
ஹி ..ஹி ..இன்னைக்கு புல் பவர் கட் அந்த வயிற்று எரிச்சலில் ...உங்கள் கவிதை மாறிவிட்டது
நல்ல கவிதை, அழகாய் இருக்கிறது!
Post a Comment