Showing posts with label தொலைபேசி. Show all posts
Showing posts with label தொலைபேசி. Show all posts

தவம்...!

                                                   
     தவம் கிடக்கிறோம்
     நானும்  தொலை பேசியும் !         
     சிணுங்கும் 
     ஒவ்வொரு முறையும்
     உன் குரலை எதிர்பார்த்து 
     சலித்த மனது !   
     என்றோ வரும் 
     அழைப்புக்காய்
     ஒவ்வொரு நொடியும்
     காத்திருக்கிறது
     தொலை பேசியும்
     தொலைந்த மனதும் !
     தொல்லையடா உன்னுடன்
     இன்றாவது
     பேசித்தொலை தொலைபேசி !!







 நலம் விசாரிப்பு
 ஊடல் 
 கோபம்
 தவிப்பு
 கண்ணீர்
 கெஞ்சல்
 கொஞ்சல்
 கூடல்
 சிரிப்பு
 அனைத்தும் 
 நிகழ்ந்துவிடுகிறது
 தொலைபேசியில்...
 நான் தனித்தில்லை
 இவ்வாறு  
 வாழ்ந்து கொண்டிருக்கிறேன்  
 உன்னுடன் !!