வசியம் செய்த பேச்சுக்கள்
வசை மொழியாய் மாறியதென்ன !
என்னை கொஞ்சி அழைத்த குரல்
எடுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !
கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !
கவிதை பாடிய விழிகளில்
கள்ளத்தனம் தெரிவதென்ன !
பொய்மை அறியா இதழ்களாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !
அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
அன்பை யாசித்து நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !
பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
*************************************************
இனி என் காதல் செடிக்கு
தினம் லட்சார்ச்சனை
கண்ணீரால் !!
என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!
கண்ணீரால் !!
என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !!
வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !!
35 comments:
பிரிவு என்பது இருவருக்கும் உள்ள வலி ...
//பிரிவு என்பது இருவருக்கும் உள்ள வலி .//
யார் யாரை பிரிஞ்சாங்க .......
@sako
கவிதை தானே நிஜம் இல்லையே ...இருந்தாலும் கவிதைல சோகம் நிறைய இருக்கு ...
பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
அதிகமான பக்குவமற்ற பருவ காதல் தோல்வியில்தான் முடிகின்றது.
இதுக்கெல்லாமா ஃபீல் பண்றது
ஃஃஃஃபொய்மை அறியா இதழ்கலாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன ஃஃஃஃஃ
அருமை அருமை.. வரிகில் மட்டுமல்ல வார்தை ஒவ்வொன்றிலும் ஜாலம் தெரிகிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
//அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம் அன்பை யாசித்து
நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய்//
வேதனை!
வலிகள் நிறைந்த வரிகள்...கவிதை
//அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம் அன்பை யாசித்து
நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய்//
பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
வலிகள் நிறைந்த வரிகள்...கவிதை
அன்பிற்கு அர்த்தம் தெரியாத உன்னிடம்
அன்பை யாசித்து நின்ற என்னை
அர்த்தம் இல்லாதவளாகி விட்டாய் !
.....சோகமே மிஞ்சும் என்பது உண்மைதான்.
முதல் வரி திருமணதிட்கு முன் இரண்டாம் வரி திருமணதிட்கு பின்
வசியம் செய்த பேச்சுக்கள்
வசை மொழியாய் மாறியதென்ன !
என்னை கொஞ்சி அழைத்த குரல்
எடுத்தெறிந்து பேசும் விந்தையென்ன !
கொள்ளை அடித்த உன் புன்னகை
கொள்கை மாறிய அவலமென்ன !
//பக்குவமற்ற பருவக் காதல் //
கடைசி வரி மொத்த கவிதையின் வலியை குறைத்து விடுகிறது சகோ!
வ, எ, கொ,பொ,அ, ப - ஆரம்பம் அருமை....
உணர்வின் வமியை உணர்த்தும் கண்ணீர் கவிதை.
கவிதை ரொம்ப பீலிங்கா இருக்கு! விடுங்க காதல் செத்துப் போகட்டும்! வாழ்க்கையில தோத்துப் போயிடாதீங்க! அதுதான் ரொம்ப முக்கியம்!! அப்புறம்
" பொய்மை அறியா இதழ்கலாம்
பொருத்தமாய் பொய் புனையும் ஜாலமென்ன !"
ஏதோ சிறிய ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று நினைக்கிறேன்!
பொய்மை அறியா இதழ்களெல்லாம்......... அப்டீன்னு வந்திருக்க வேண்டும்! இல்லையா?
பக்குவமற்ற காதலின் கண்ணாடி பிம்பமாய் உங்கள் கவிதையின் சோகம்.
அந்தக் காதல் பிரிந்தது நன்று தான்.
அந்தக்காதல் இணைந்திருந்தால், இதைவிடப் பெரிய சோகமாகத்தான் இருந்திருக்குமென நினைக்கிறேன் அக்கா...
ஓர் எழுத்தில், தொடங்கும் இரு வரிகள், அருமை அக்கா....
"@ மாத்தி யோசி" சொன்னதுபோல இருந்திருக்கலாம், அல்லது,
"பொய்மை அறியா இதழ்களும்" -னு வந்திருக்கலாமோ அக்கா?
//பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் //
உண்மைதாங்க.. அனுபவப்பட்டா மட்டும்தான் அந்த வலி தெரியும்..
முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி
ஏன் நல்லதான போயிகிட்டுருந்தது....
எதுக்கு இந்த வருத்தம்....
பாதை மாறி போறாரா?
Feeling ah irukku kavithai..
கௌசி...ஏன் இத்தனை சோகம்.அதுவும் ஒரு சுகம்தான் !
// என் தலையணையும்
தினம் குளிக்கிறது
கண்ணீரால் !! //
அருமையான வரிகள் மேடம்...
முதல் கவிதையின் மோனை நயமும் அருமை...
>>>பயணப்படுகிறது தோல்வி நோக்கி
பக்குவமற்ற பருவக் காதல் !!
iwdha lainil இந்த லைனில் மட்டும் ஒரு ஆல்ட்டர்
தோல்வியை நோக்கி பயணப்படுகிறது
பக்குவமற்ற பருவக் காதல்
என்பது கரெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்
@@ சௌந்தர் கூறியது...
நன்றி சௌந்தர்
@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//கவிதை தானே நிஜம் இல்லையே ...இருந்தாலும் கவிதைல சோகம் நிறைய இருக்கு .//
யாரும் யாரையும் பிரியல பாபு...பருவத்தில் வர கூடிய காதலின் பிரிவை கவிதையாக்கி இருக்கிறேன்.
கவிதைகள் கற்பனை தானே...
:))
@@ sulthanonline கூறியது...
//அதிகமான பக்குவமற்ற பருவ காதல் தோல்வியில்தான் முடிகின்றது
இதுக்கெல்லாமா ஃபீல் பண்றது //
உண்மை...பீல் பண்ணினாதான் கவிதை எழுத முடியும் :))
@@ ம.தி.சுதா ...
நன்றி சகோ.
@@ S Maharajan...
உணர்விற்கு நன்றி நண்பரே.
@@ மாணவன்...
நன்றி சகோ.
@@ Harini Nathan...
நன்றி ஹரிணி.
@@ Chitra...
நன்றி சித்ரா
@@ யாதவன் கூறியது...
//முதல் வரி திருமணதிட்கு முன் இரண்டாம் வரி திருமணதிட்கு பின் //
உங்களின் இந்த புரிதல் நல்லா இருக்கே...
:)))
@@ Balaji saravana கூறியது...
//கடைசி வரி மொத்த கவிதையின் வலியை குறைத்து விடுகிறது சகோ//
அழகான புரிதல் பாலா.
:))
@@ சே.குமார்...
ரசனைக்கு நன்றி குமார்
@@ மாத்தி யோசி கூறியது...
//கவிதை ரொம்ப பீலிங்கா இருக்கு! விடுங்க காதல் செத்துப் போகட்டும்! வாழ்க்கையில தோத்துப் போயிடாதீங்க! அதுதான் ரொம்ப முக்கியம்!!//
அடடா உங்க பீலிங் கவிதையில் விட அதிகமா இருக்கே...?! :))
மிஸ்டேக் சரி பண்ணிட்டேன் நன்றி சகோ.
@@ கவிநா... கூறியது...
//அந்தக் காதல் பிரிந்தது நன்று தான்.//
//அந்தக்காதல் இணைந்திருந்தால், இதைவிடப் பெரிய சோகமாகத்தான் இருந்திருக்குமென நினைக்கிறேன்//
சில காதல்கள் பக்குமற்று இருப்பதால் தான் பாதியிலே பிரிந்து விடுகிறது...நீ சொல்ற மாதிரி அதுவும் நல்லதுக்கு தான்.
:))
புரிதலுக்கும் ரசனைக்கும் நன்றி காயத்ரி.
@@ கவிதை காதலன் கூறியது...
//உண்மைதாங்க.. அனுபவப்பட்டா மட்டும்தான் அந்த வலி தெரியும்..//
ம்... ஆமாம்...
நன்றிங்க.
@@ சி. கருணாகரசு கூறியது...
//ஏன் நல்லதான போயிகிட்டுருந்தது....
எதுக்கு இந்த வருத்தம்....
பாதை மாறி போறாரா?//
இப்பவும் நல்லாத்தான் போயிட்டு இருக்கு... :))
இது பிரிவின் வலி பற்றிய ஒரு உணர்வு அவ்வளவே... :)))
@@ Thanglish Payan...
நன்றி
@@ FOOD கூறியது...
//கொள்ளை அடித்த புன்னகை ,கொள்கை மாறலாம்
எங்கள் மனங்களை கொள்ளையடித்த கவிதைதான் "பிரிவு"
என்ற எங்கள் கொள்கை மாறாது//
உங்களை இங்கே எதிர்பார்கலையே...உங்களுக்கு கவிதை பிடிக்குமா ??
:))
@@ ஹேமா...
சோகம் கவிதையில் மட்டும்தான் ஹேமா :))))
@@ Philosophy Prabhakaran...
ரசனைக்கு நன்றி பிரபாகர்.
@@ சி.பி.செந்தில்குமார் கூறியது...
//தோல்வியை நோக்கி பயணப்படுகிறது
பக்குவமற்ற பருவக் காதல்
என்பது கரெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன்//
சரிதான் நான் ப ப ஒண்ணா இருக்கணும் ஒரு லாஜிக் (??)காக மாத்தி போட்டுட்டேன் :)))))
கவிதை தானே அட்ஜெச்ட் பண்ணி கோங்க ஒ.கே :)))
நன்றி
//வாழ இயலாது நீ இன்றி
வாழ தெரியாது
நீ இருந்தும் இல்லாமல் !///
.....ஹ்ம்ம்.. இது ரொம்ப பிடிச்சிருக்குங்க.. :)
Post a Comment