தின்று ஜீவிக்கும் கொடூரா
சொற்கள் வார்த்தைகள்
செய்கையால்
பிறரை துன்புறுத்தும்
நீ சொல்கிறாய்..
'துவேசம் தவிர்'
குருதி,ரத்தம்,அவயங்கள்
உன் போலவே அவனுக்கு
இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும்
நீ சொல்கிறாய்..
'பிற உயிரை நேசி'
நரியின் வஞ்சக புத்தி
பாம்பின் விஷம்
வார்த்தையில்
தேளின் கொடுக்காய்
நாக்கை சுழற்றி கொட்டும்
நீ சொல்கிறாய்..
'அன்பே சிவம்'
புறங் கூறி பழகிய
நாவுகள் உரசிப் போன
தீச்சொற்கள்
எத்தனை மனதை
எரித்திருக்கும்
நீ சொல்கிறாய்..
'வாக்கில் இனிமை வேண்டும்'
ஆணவத்தால் அகக்கண் மூட
தெளிவற்ற சிந்தை
சுயநலத்தால்
உன்னை முன்னிறுத்த
பிறரை பந்தாடும்
மமதை மாமனிதா
நீ சொல்கிறாய்..
'கர்வம் தவிர்'
தூக்கிப்போடு உன்
வறட்டு சித்தாந்தத்தையும்
விளங்காத சாத்திரத்தையும்
இனியும் அவற்றை பேசி
உன்னை புனிதன் என்று காட்டாதே
சக மனிதன், உன் சிநேகிதனை
மதிக்கத் தெரியாத
நீ சொல்கிறாய்..
'நட்பால் உலகை வெல்வோம்'
உன் போல் யார்
ஊர் சொல்லும் முன்
உன் மனசாட்சியிடம் கேள்
முகமூடி கிழித்து உன்
சுயத்தை காட்டும்
பிற உயிரை தூசித்து
கடவுளை தொழுகிறாய்
தூஷணமும்
பூசையும் ஒன்றா ?!
சில நேரம் பிதற்றுவாய்
'என் குரலுக்கு
ஓடி வருவான் இறைவன்'
இனி நன்றாக
உற்றுப்பார்
வந்தது...
சாத்தானாக இருக்கக் கூடும் !!
17 comments:
//இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும் //
உங்கள் மனதை புன்னாகியவன் எவன் ..?
//பிறரை பந்தாடும்
மமதை மாமனிதா//
????
@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//உங்கள் மனதை புன்னாகியவன் எவன் ..?//
இது பொதுவான கவிதை பாபு. எதையும் சொல்லி கும்மி அடிசிடாதிங்க. :))
சக மனிதனை நேசிக்க மறந்த மனிதனை நோக்கிய ஒரு ஆதங்கம் !
யாரோ உங்கள் மனசை புண் படுத்தி இருக்காங்க...
இருந்தாலும் மனிதம் வேண்டும் மனிதனிடம்.....
படமும் கவிதையும் அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
Arumai...
//சக மனிதனை நேசிக்க மறந்த மனிதனை நோக்கிய ஒரு ஆதங்கம்//
சரியான சாட்டையடி வார்த்தைகள்
வாழ்த்துக்கள் தோழி
மனதில் அன்பு இருந்தாலே போதும்.அத்தனை நல்ல குணங்களும் அவன் கூடவே இருக்கும்.நல்லதொரு கவிதை கௌசி !
@@ MANO நாஞ்சில் மனோ கூறியது...
//யாரோ உங்கள் மனசை புண் படுத்தி இருக்காங்க...//
அச்சோ அப்படி எல்லாம் இல்ல...சில மனிதர்களின் முரண்பட்ட குணங்கள் குறித்து எனக்கு சில கோபங்கள், ஆதங்கங்கள் நிறைய உண்டு. அதை இங்கே வெளிபடுத்தி இருக்கிறேன் அவ்வளவுதான்.
அப்படி யாராவது புண்படுத்தி இருந்தா இப்படி கவிதை எழுதிட்டு இருக்க மாட்டேன் நேரடி நடவடிக்கை தான் :))) (என் ஊர் நினைவு இருக்குதா?)
//இருந்தாலும் மனிதம் வேண்டும் மனிதனிடம்.....//
கண்டிப்பாக !
மனோ நன்றிகள்
@@ விஜய்...
நன்றிகள் விஜய்
@@ சே.குமார்...
நன்றிகள் குமார்
@@ S Maharajan...
நன்றி நண்பரே
@@ ஹேமா கூறியது...
//மனதில் அன்பு இருந்தாலே போதும்.அத்தனை நல்ல குணங்களும் அவன் கூடவே இருக்கும்//
இப்ப போலியான சுயநல அன்பு தான் மிகுந்து காண படுகிறது ஹேமா !
உண்மையான அன்பு எங்கே இருக்கிறதோ அங்கே கண்டிப்பா நல்ல குணம் இருக்கும்.
நன்றி ஹேமா
@@ FOOD கூறியது...
//என்ன சகோ, இப்படில்லாம் பயம் காட்றீங்க!//
மனிதம் தொலைத்த மனிதர்களுக்கு சொன்னேன் அண்ணா !
நன்றிகள் அண்ணா
யதார்த்தமான வரிகள் அருமையான கேர்ப்பு வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
//இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும் //
அருமையான வரிகள்
// பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி புரையோடிப்போன புண்ணை ரசிக்கும்
நரியின் வஞ்சக புத்தி பாம்பின் விஷம் வார்த்தையில் தேளின் கொடுக்காய் நாக்கை சுழற்றி கொட்டும் நீ // பழகிய நாவுகள் உரசிப் போன தீச்சொற்கள் எத்தனை மனதை எரித்திருக்கும் //
இன்று இது போன்ற புழுக்கள்..தெருக்களில் புழங்கிக்கொண்டிருக்கின்றன... அதுகளையெல்லாம் என்ன செய்ய.. இதோ என் வீதிகளில் புழுக்கள் புறம் பேசுகின்றன.... அருமையான எனக்கு பிடித்த ஆதங்க கவிதை... நன்றியுடன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Post a Comment