வேண்டுமென்றே
தோற்கிறேன்
உன்
வெற்றி பிடிக்கிறது !
பலமுறை
வாங்கி கட்டி கொள்வேன்
உன்
திட்டுகள் பிடிக்கிறது !
தெரியாததுபோல்
முழித்து கொண்டிருப்பேன்
உன்
அறிவுரை பிடிக்கிறது !
கைகட்டி
கேட்டு கொண்டிருப்பேன்
உன்
கட்டளை பிடிக்கிறது !
உனக்கு
பிடிக்காததை செய்வேன்
உன்
தண்டனை பிடிக்கிறது !
பிறரிடம் பேசியதாய்
பொய் சொல்வேன்
உன்
கோபம் பிடிக்கிறது !
தவறு செய்யாமல்
மண்டியிட்டு நிற்பேன்
உன்
மன்னிப்பு பிடிக்கிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
31 comments:
மொத்தத்தில் எனக்கு பைத்தியம் பிடிக்கிறது .இதை படிச்சா ஹ ஹ ....
எல்லாம் பிடிக்கிறது இருக்கட்டும் ..யாரை பிடிச்சு இருக்குன்னு சொல்லவே இல்லை
அப்போ எல்லாம் வேணும்ன்னுதான் பண்றீங்களா .....!!!
நமக்கு தெரியாத ஏரியாவா இருந்தாலும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிக்கிறது! :-)
பைத்தியம் பிடிக்கிறது
@@ இம்சைஅரசன் பாபு...
//மொத்தத்தில் பைத்தியம் பிடிக்கிறது//
எனக்கு பிடிச்சதை நான் சொன்னேன் ...உங்களுக்கு பிடிச்சதை நீங்க சொல்லிடீங்க !! :))
//யாரை பிடிச்சு இருக்குன்னு சொல்லவே இல்லை//
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி :)))))
@@ koodal bala கூறியது...
//அப்போ எல்லாம் வேணும்ன்னுதான் பண்றீங்களா .....!!!//
வேணும்னு தான் பண்றேன் :))
வருகைக்கு நன்றி பாலா
@@ ஜீ... கூறியது...
//நமக்கு தெரியாத ஏரியாவா இருந்தாலும் இந்தக் கவிதை ரொம்பப் பிடிக்கிறது! //
நன்றிங்க
மிகவும் பிடிக்கிறது
வாழ்த்துக்கள்
விஜய்
@@ Niroo கூறியது...
//பைத்தியம் பிடிக்கிறது//
அச்சோ இதுக்கு என்ன சொல்றது தெரியலையே !! :))
வருகைக்கு நன்றிங்க
@@ FOOD...
//எனக்கும் தான்//
அண்ணா உங்களுக்குமா ?!! சரிதான்
:))
@@ விஜய்...
நலமா ?
நன்றி விஜய் :)
கவிதை நல்லா இருக்குங்க!
////// தெரியாததுபோல் முழித்து கொண்டிருப்பேன் உன் அறிவுரை பிடிக்கிறது ! ///////
இதுலாம் நடக்குற காரியமா?
//////கைகட்டி கேட்டு கொண்டிருப்பேன் உன் கட்டளை பிடிக்கிறது ! /////
இதெல்லாம் கனவுதானே?
/////சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !//////
இதுதான் பிடிக்குது......!
@@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//இதுலாம் நடக்குற காரியமா?//
உண்மை ! நம்புங்க...! :)))
//இதெல்லாம் கனவுதானே?//
பெண்களை நம்புறதே இல்லையா ?! :))
வருகைக்கு நன்றிங்க
@@ பன்னிக்குட்டி ராம்சாமி...
//இதுதான் பிடிக்குது......!//
இதுவாது பிடிச்சதே ! :)
ஆனா பாபு முதல் கமெண்ட் போட்டதில் இருந்து பிடிக்கிறது என்ற வார்த்தையே இப்ப கொஞ்சம் அலர்ஜி ஆகிவிட்டது ! :))
////Kousalya கூறியது...
@@ பன்னிக்குட்டி ராம்சாமி...
//இதுதான் பிடிக்குது......!//
இதுவாது பிடிச்சதே ! :)
ஆனா பாபு முதல் கமெண்ட் போட்டதில் இருந்து பிடிக்கிறது என்ற வார்த்தையே இப்ப கொஞ்சம் அலர்ஜி ஆகிவிட்டது ! :))////////
ஹஹஹா..... நெஜமாவே கவிதை அருமை....
மனதிற்குப் பிடித்தவருக்காக இசைந்து அல்லது இயைந்து போகும் பெண்ணின் மன உணர்வுகள் இங்கே கவிதையாக வந்திருக்கிறது.
சகோதரி
படிக்கப் பிடிக்கிறது
பாராட்ட பிடிக்கிறது-கவிதை
துடிப்பும் பிடிக்கிறது
தொடக்கம் பிடிக்கிறது-கவிதை
முடிப்பும் பிடிக்கிறது
முழுதும் பிடிக்கிறது-அந்த
பிடிக்கும் யாரெனினும்
பிடிக்கிறது பிடிக்கிறது
புலவர் சா இராமாநுசம்
claaps claaps claaps claaps....
@பன்னிகுட்டி
//ஹஹஹா..... நெஜமாவே கவிதை அருமை.... //
அடபாவி!! சாட்ல வேற சொன்ன.. :)
(தொலைந்தான் எதிரி....)
கவிதை பிடித்திருக்கிறது
என்று சொல்லுவேன்
நீங்கள் பிரசவித்த வேதனையில் இருந்து
ஆத்ம திருப்தி அடைவதை
பார்க்க பிடித்திருக்கிறது
Nice one ..,enjoyed your blogging .
///////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி
//ஹஹஹா..... நெஜமாவே கவிதை அருமை.... //
அடபாவி!! சாட்ல வேற சொன்ன.. :)
(தொலைந்தான் எதிரி....)
/////////
பிரபல பதிவர்கள்னா அப்படித்தான் இருப்பாங்க, கண்டுக்கப்படாது....!
இது உங்க கவிதைதானே? https://plus.google.com/116048704472314557205/posts/2qg9g1oYL1m
நான் குழம்பிட்டேன்!
காதலுக்காக எல்லாம் பிடிக்கும்
காதல் எதையும் செய்ய வைக்கும்
என்பது சரித்திர உண்மையல்லவா
எளிய நடை ,அருமை கவிதை
பகிற்தலுக்கு நன்றி
கவிதை நல்லா இருக்குங்க!
(கமெண்ட் உபயம் - நன்றி பன்னிகுட்டி ராம்சாமி)
:))
//சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !//
...இந்த லைன் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க.. ;)
தவறு செய்யாமல்
மண்டியிட்டு நிற்பேன்
உன்
மன்னிப்பு பிடிக்கிறது !.... அசத்தலான கவிதை பிடிச்சுருக்கு வாழ்த்துக்கள்
Post a Comment