உன்னை முழுதும்
என்னுடையவனாக்க
முயன்றும் முடியாமல்
போய்விடுமோ !??
...
...
...
...
...
அழைத்தேன்
மறுக்காமல் வந்தாய்
ஓயாமல் பேசும் என் வாய்
ஓய்வெடுக்கிறது !
வழக்கம் போல்
மடை திறந்த வெள்ளமாய்
ஆர்ப்பரித்து பேசிச் சிரிக்கிறாய்
என் எண்ணம் புரியாமல் !
எப்போதும் கிறங்கடிக்கும்
இன்றோ என்னைக் கொன்று
தின்றுத் தீர்க்கிறது
உன் புன்னகை !
அழுத்தமாய் உன் கரம் பற்ற
வித்தியாசம் உணர்ந்து
விடுவிக்க முயன்று தவிக்கிறாய்
திமிரும் உன்னை...
உன் கெஞ்சும் விழிகளை
கொஞ்சியே கூட்டிச் செல்கிறேன் !
மலை உச்சி
தூரம் தெரியவில்லை
உடன் நீ வருகையில் !
உச்சி முகட்டின் மேல் நின்று
கீழ் நோக்க
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஓடும் நதி
ஆர்ப்பரித்துச்செல்லும் அழகை
விழியால் பருக மனம் குளிர
சுவாசத்தில் புதிய நறுமணம்
ஆழமாய் உள்ளிழுத்து
நிதானமாய் வெளி விடுகிறேன் !
நிதானமாய் வெளி விடுகிறேன் !
கம்பீரம் மிளிரும் உன்
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
முதலும் கடைசியுமாய்
இறுக அணைத்து
இறுக அணைத்து
முத்தமிட்டு
நம்மை உணரும் முன்
நம்மை உணரும் முன்
உன் கரம் பற்றியிழுத்து
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
ஒன்று...
இரண்டு...
மூன்றாம் முறை
மேலெழும்பாமல்
மூழ்கி போனோம் மொத்தமாய் !!?
17 comments:
திமிரும் உன்னை...
உன் கெஞ்சும் விழிகளை
கொஞ்சியே கூட்டிச் செல்கிறேன் !///
பாருய்யா ம்ம்ம்ம் சரி சரி :)))
என்னமா எழுதுறீங்க ........ஆமா ...அது யாரு ?
ரசிக்கும் படியான கவிதை....
கவிதை அருமை. வரிகள் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. வாழ்த்துக்கள்.
ஆஹா! இருவரையும் இறுதிவரை சேர்த்து அணைத்ததோடு மட்டுமல்லாமல், சேர்த்தே அள்ளிச்சென்ற அருவிபோன்ற அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.
கைவிட்டுப்போகுமோ என்கிற காதலின் ஏக்கம் ஒவ்வொரு சொற்களிலும் !
@@ சௌந்தர்...
ரொம்ப புரிஞ்ச மாதிரி சரி சரி சொல்ற...!?
@@ koodal bala...
//ஆமா...அது யாரு ?//
எது படத்தில இருக்கிறதா ? தெரியலையே...!!!! :))))
நன்றி பாலா
@@ # கவிதை வீதி # சௌந்தர்...
நன்றி சௌந்தர்.
@@ சே.குமார் ...
நன்றி குமார்.
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
அழகான ரசனை சார் உங்களுக்கு.
நன்றிகள்
@@ ஹேமா கூறியது...
//கைவிட்டுப்போகுமோ என்கிற காதலின் ஏக்கம் ஒவ்வொரு சொற்களிலும் !//
ஹேமா, அனைத்து கவி வரிகளும் உங்களின் இந்த ஒரு வரிக்கு சமர்ப்பணம் !
:))
@@ FOOD கூறியது...
//காதலர்களைக் கொன்ற பாவம் செய்ததால்,இன்று உங்களுக்கு ஓட்டு கிடையாது சகோ.//
ம்...கால் பண்ணி வோட் போட வைக்க வேண்டியதாயிற்று.
நன்றி அண்ணா
தாகமாய் ஆரம்பித்த கவிதை
அந்தோ
சோகமாய் முடிந்ததே! ஏன்?
புலவர் சா இராமாநுசம்
"வாராய் நீ வாராய் " பாடல்தான் இதுக்குக் காரணமா ??
நல்ல கவிதை வாழ்த்துக்கள்......
ஒன்று...
இரண்டு...
மூன்றாம் முறை
மேலெழும்பாமல்
மூழ்கி போனோம் மொத்தமாய் !!?
மூன்றாம் பிறை மேலுழுப்பியதோ என்னவோ... புன்னகை மன்னன் காதலர்கள் நினைவில் தோன்றி அவர்கள் போன்ற சூழ்நிலையில் உள்ளவரிகளின் மனதில் என்ன தோன்றியிருக்குமோ அதை அழகிய கவிதையாய் இங்கே.... அருமை வாழ்த்துக்கள்...
Post a Comment