Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Posted by
Kousalya Raj
comments (17)
தின்று ஜீவிக்கும் கொடூரா
சொற்கள் வார்த்தைகள்
செய்கையால்
பிறரை துன்புறுத்தும்
நீ சொல்கிறாய்..
'துவேசம் தவிர்'
குருதி,ரத்தம்,அவயங்கள்
உன் போலவே அவனுக்கு
இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும்
நீ சொல்கிறாய்..
'பிற உயிரை நேசி'
நரியின் வஞ்சக புத்தி
பாம்பின் விஷம்
வார்த்தையில்
தேளின் கொடுக்காய்
நாக்கை சுழற்றி கொட்டும்
நீ சொல்கிறாய்..
'அன்பே சிவம்'
புறங் கூறி பழகிய
நாவுகள் உரசிப் போன
தீச்சொற்கள்
எத்தனை மனதை
எரித்திருக்கும்
நீ சொல்கிறாய்..
'வாக்கில் இனிமை வேண்டும்'
ஆணவத்தால் அகக்கண் மூட
தெளிவற்ற சிந்தை
சுயநலத்தால்
உன்னை முன்னிறுத்த
பிறரை பந்தாடும்
மமதை மாமனிதா
நீ சொல்கிறாய்..
'கர்வம் தவிர்'
தூக்கிப்போடு உன்
வறட்டு சித்தாந்தத்தையும்
விளங்காத சாத்திரத்தையும்
இனியும் அவற்றை பேசி
உன்னை புனிதன் என்று காட்டாதே
சக மனிதன், உன் சிநேகிதனை
மதிக்கத் தெரியாத
நீ சொல்கிறாய்..
'நட்பால் உலகை வெல்வோம்'
உன் போல் யார்
ஊர் சொல்லும் முன்
உன் மனசாட்சியிடம் கேள்
முகமூடி கிழித்து உன்
சுயத்தை காட்டும்
பிற உயிரை தூசித்து
கடவுளை தொழுகிறாய்
தூஷணமும்
பூசையும் ஒன்றா ?!
சில நேரம் பிதற்றுவாய்
'என் குரலுக்கு
ஓடி வருவான் இறைவன்'
இனி நன்றாக
உற்றுப்பார்
வந்தது...
சாத்தானாக இருக்கக் கூடும் !!


