இருக்கின்றன...
உன் நுட்பங்களை
சொல்லிச் செல்கின்றன !
தங்களுக்குள்ளே
கொதிக்கின்றன...
எரிகின்றன...
எரிக்கின்றன...
எரிக்கின்றன...
சில நேரம் அதிக சத்தமாய்
பல நேரம் ஆழ்ந்த மௌனம்
அதை நெடுந் தவம் என்பாய் !
ஆழமாய் நெருங்கினால்
மோனநிலை நிச்சயம்...
மோனநிலை நிச்சயம்...
மெல்ல வருடினால்
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம் !
சொல்லாமல் சொல்கிறது
இல்லாமல் இருக்கிறது
அது எல்லாமாய் நிறைக்கிறது
நிறைந்து நிலைக்கிறது...
உனதாய் இருக்கின்றன
உன்னை போலில்லை
உன்னை போன்ற
வேறொன்றாக இருக்கிறது
வேறொன்றாக இருக்கிறது
அவை வேறொன்றுமில்லை
உன் வார்த்தைகள் !!
20 comments:
வார்த்தைகளிலும் வசந்தம் காணலாம்...
அவள் வாய் திறந்தால்...
அழகியதொரு கவிதை..
வாழ்த்துக்கள...
// அவை வேறொன்றுமில்லை
உன் வார்த்தைகள் !!//
அழகு..... அழகு .....
நீ சிரித்தால் சிரிப்பழகு ... அழகு
நீ நடந்தால் நடையழகு!
என்ற பாடலை வாய் முணுமுணுக்க வைத்தது, இதைப்படித்ததும்.
சபாஷ்!
சொல்லாமல் சொல்கிறது
இல்லாமல் இருக்கிறது
அது எல்லாமாய் நிறைக்கிறது
நிறைந்து நிலைக்கிறது...
-அருமையான வரிகள். கருப் பொருளும் கூட உங்களுக்கு வசப்பட்டு விட்ட, எனக்கு இன்னும் வசப்படாத... வார்த்தைகள்! மிக ரசித்தேன். அருமை.
னான் மனமென்று நினைத்தேன்.... கவிதை முடிவில் விடைகண்டு வியந்தேன்.
வார்த்தைகளின் வசந்தம், சூப்பர்ப்....!!!
// ஆழமாய் நெருங்கினால்
மோனநிலை நிச்சயம்...
மெல்ல வருடினால்
சிலிர்ப்பின் உச்சம் தொடலாம்//
உச்சத்தை எட்டி விட்டீர்-பலரின்
உள்ளத்தைத் தொட்டு விட்டீர்
மெச்சத்தான கவி பாடி-மேலும்
மேன்மைமிகு சொல் நாடி
முடித்தீராம் நயம் படவே-நம்
முத்தமிழும் பயன் படவே
தொடுத்தீராம் சொல் மாலை-எழில்
சொல்லரிய நறுஞ் சோலை!
புலவர் சா இராமாநுசம்
மென்மையான,இனிய,துளிர்க்க வைக்கும் ,உயிருள்ள வார்த்தைகள்!
நன்று.
@@ கவிதை வீதி... // சௌந்தர் //...
//வார்த்தைகளிலும் வசந்தம் காணலாம்//
அழகாக சொல்லிடீங்க சௌந்தர் நன்றிகள்
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
கவிதையை நீங்க ரசிக்கிற விதமே தனிதான். :)
நன்றிகள்
@@ கணேஷ் கூறியது...
//கருப் பொருளும் கூட உங்களுக்கு வசப்பட்டு விட்ட, எனக்கு இன்னும் வசப்படாத... வார்த்தைகள்!//
மீண்டும் ஒருமுறை படியுங்கள் கவிதை வசப்பட்டு விடும். :)
நன்றி கணேஷ்
@@ சி.கருணாகரசு...
நலமா ? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.
ரசனைக்கு நன்றிகள்.
@@ MANO நாஞ்சில் மனோ...
நன்றி மனோ.
@@ புலவர் சா இராமாநுசம் கூறியது...
//உச்சத்தை எட்டி விட்டீர்-பலரின்
உள்ளத்தைத் தொட்டு விட்டீர்
மெச்சத்தான கவி பாடி-மேலும்
மேன்மைமிகு சொல் நாடி
முடித்தீராம் நயம் படவே-நம்
முத்தமிழும் பயன் படவே
தொடுத்தீராம் சொல் மாலை-எழில்
சொல்லரிய நறுஞ் சோலை!//
இப்படி அழகான தமிழில் கவிதையை எனக்கு பரிசளித்த உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் பல.
@@ சென்னை பித்தன்...
அழகான ரசனை !!
நன்றிகள்
@@ FOOD...
நன்றி அண்ணா
"உன் வார்த்தைகள் !! அருமை ...
அழகான கவிதை அருமை...
வார்த்தைகளால் சுடவும் செய்யலாம்,மனதை குளிரவும் வைக்கலாம். "பலநேரம் ஆழ்ந்த மௌனம்" - இதுதான் நல்லது. நல்லதொரு படைப்பு.
///// அதை நெடுந் தவம் என்பாய்////
கம்பன் வந்து தங்கள் புளக்கில் கவி பாடிப் போனானோ...
நல்ல ஒரு எடுத்துக்கட்டு அருமைங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
Post a Comment