உன் தொடுதலில்
சுருங்கிய
தொட்டாச் சிணுங்கி மனது
நீ சென்றபின்பு
விரிந்து சிரிக்கிறது
ரகசியமாய் !
* * * * *
நான்
கவிதை எழுதவில்லை
எழுத்துக்களின் வழியே
உன்னை நெருங்குகிறேன்...
உன்னை நெருங்குகிறேன்...
என்னிடத்தில் உன் ஸ்பரிசம்
தேடியும்
நீ இட்ட முத்தச்சுவடு
வருடியும்
நெஞ்சம் படர்ந்த உன் நினைவுகள்
அணைத்தும்
எழுதி முடியும் தருணம்
சிலிர்த்தும்...
நான் கவிதை எழுதவில்லை
உன்னை எழுதுகிறேன்
என்னை வாசிக்கிறேன்...!
* * * * *
* * * * *
வண்ணத்தின் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !
8 comments:
Arumai Sago.
Arumai. TM vote potachu.
//வண்ணத்தின் நிழலை
என்னிடம் விட்டுவிட்டு
பிடிபடாமல்
ஓடிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி நீ !//
ஆஹா! அந்த இறுதி வரிகள் அழகோ அழகு அந்த வண்ணத்துப்பூச்சி போலவே!
vgk
மூன்றும் முத்துக்கள்...
வண்ணத்து பூச்சி CLASS
வாழ்த்துக்கள்
விஜய்
@@ துரைடேனியல்...
வருகைக்கு நன்றிகள்.
@@ வை.கோபாலகிருஷ்ணன்...
மிக்க நன்றிகள்
@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றி.
@@ FOOD...
நன்றி அண்ணா
@@ ரெவெரி...
நன்றி.
@@ விஜய்...
நன்றி.
நீண்ட நாட்களின் பின் வந்தாலும் அதே ரசனையுடன் ரசித்துச் செல்கிறேன் அருமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
Post a Comment