என்னவோ பேசுகிறேன்
எதையோ எழுதுகிறேன்
எங்கோ அலைகிறேன்
ஏனோ அத்தனையிலும்
உன் பிம்பத்தை
பதித்து விடுகிறேன்
மறக்காமல்...
பிடித்திருப்பதாய்
ஒருபோதும் சொன்னதில்லை நீ !
பேசும் அத்தனை முறையும்
'பிடிக்கும்' என
சொல்லி விடுகிறேன்
தவறாமல்...
* * * * *
நெஞ்சை வலிமையாய்
கிழித்தபின் புரிந்தது
மௌனம்
வலிமையானதுதான்...
ஒன்றும் தோணவில்லை
பதிலுக்கு மௌனிப்பதை தவிர...
எதையும் உணர்த்தாத
வார்த்தைகள்
இனி எதற்கென்றே
மௌனத்தில்
மூழ்கடிக்கிறேன் எனை
மொத்தமாய் !
சொற்கள் அற்ற
மொழிகள் அற்ற
மௌனங்களின் பரிமாற்றத்தில்
வாழுகிறது நேசம்
மௌனமாய் தேற்றிக் கொள்கிறேன்
வருந்தும் என் மனதை !
இருவரின் மௌனங்கள்
சப்தமாய் பேசிச் சிரிக்கலாம்
நாம் இல்லா வெளியில்...
மெய்
பொய்யானது
மெய் நீ
பொய் நான்
மௌனமாய் நாம்
மெய்யாய் நம் காதல் !
படங்கள் - கூகுள்
19 comments:
எதையும் உணர்த்தாத வார்த்தைகள் இனி எதற்கென்றே மௌனத்தில் மூழ்கடிக்கிறேன் எனை மொத்தமாய்
நல்ல வரிகள் ..வாழ்த்துக்கள்..
வாருங்கள்..சூரியன் சுட்டெரிக்கிறான்..
பிடித்திருப்பதாய்
ஒருபோதும் சொன்னதில்லை நீ !
பேசும் அத்தனை முறையும்
'பிடிக்கும்' என
சொல்லி விடுகிறேன்
தவறாமல்...
அட.. ஆமாம்ல.. அழகா சொல்லப்பட்ட உண்மை உணர்வுகள்.
நல்ல கவிதை....
மௌனத்தைவிட சிறந்த ஒன்று வேறொன்றுமில்லை...
கௌசி...கல்லுளி மங்கன்ன்னு பேர் வையுங்க.நான் அப்பிடித்தான் வச்சிருக்கேன் !
சில சந்தர்ப்பங்களில் மௌனம் கூட ஒரு மொழியாகி விடுகிறது. கடைசி நான்கு வரிகளை மிக ரசித்தேன். பிரமாதம்.
அழகாக சொல்லப்பட்ட உண்மை உணர்வுகள்...ரசித்தேன்...
அருமை.
வணக்கம்..
பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்
அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/
நல்ல வரிகள் ..வாழ்த்துக்கள்..
please read my tamil kavithaigal in www.rishvan.com
@@ மதுமதி...
நன்றிகள்
@@ ரிஷபன்...
நன்றி ரிஷபன்
@@ வெங்கட் நாகராஜ்...
நன்றிகள்
@@ விச்சு...
அதேதாங்க :) நன்றி
@@ சி.கருணாகரசு...
எப்படி இருக்கீங்க...?
நீண்டநாள் கழித்து வந்த வருகைக்கு நன்றிகள்
@@ ஹேமா கூறியது...
//கௌசி...கல்லுளி மங்கன்ன்னு பேர் வையுங்க.//
அப்படியே வச்சாச்சு :))
//நான் அப்பிடித்தான் வச்சிருக்கேன் !//
அட அப்படியா...? சரிதான் !! :)
நன்றி ஹேமா
@@ கணேஷ் கூறியது...
//சில சந்தர்ப்பங்களில் மௌனம் கூட ஒரு மொழியாகி விடுகிறது. //
மௌனம் பல சமயங்களில் மிக உதவியாக இருக்கும் :)
நன்றி கணேஷ்
@@ ரெவெரி...
நன்றிகள்
@@ Rathnavel...
நன்றிகள் ஐயா
@@ moosa shahib...
நான் பார்த்தேன் மிக நல்ல கலெக்சன்ஸ் !!
வருகைக்கு நன்றிகள்
@@ rishvan...
அவசியம் படிக்கிறேன்.நன்றிகள்
மெய்
பொய்யானது
மெய் நீ
பொய் நான்
மௌனமாய் நாம்
மெய்யாய் நம் காதல் !
படங்கள் - கூகுள்
Post a Comment