பல வந்தன
பலவாகி வந்தன
பலனின்றி சில
பலமின்றி சில
பலமாய் பயமின்றி
வேர் விட்ட ஒன்று எதுவோ
அதை இது
உடைத்து போட முயன்று தோற்று
உடைந்து போனது என்னவோ இது தான் !
அது வேறு வேறாகி
போயினும்
அது அதுவாகியே
தனித்திருந்தது
தன் இருப்பு புரிந்திருந்தது...
வெளியில் தெரியா நகைப்பு
உள்ளில் புரியா திகைப்பு
இப்படியும் இயலுமா
சிந்தித்தே சிதறிப்போனது
சிந்தை...
கோபக்கனல்களால் சபிக்கப்பட்ட அது
தொடர்ந்த இரவுகளின் கனவுகளில்
விமோசனம் அடைந்தது...
அது போன்ற முடிவுறாக் கனவுகள்
முடிவுரக்கூடும்
கூட்டை புறந்தள்ளி உயிர்
விடுதலை பெறும் இறுதி நாளில்...
ஆழமாய் புரிய முயன்ற அது
அறிவற்றது என அர்ச்சிக்கபட்டது
அறிவை கடந்த புரிதல் அது என்பது புரியாதது
அறியாமையா அதிக அறிவின் மாயையா ?
கொலைக்களத்தில் ஓர்நாள்
கொலையுண்ட அது
ஒற்றை பார்வையில் சட்டென்று
உயிர்ப் பெற்று நகைக்கிறது
சிறிதும் லஜ்ஜையின்றி...
அறிந்தே சித்தரித்த பிம்பங்கள்
ஒவ்வொன்றாக உடைத்து போட போட
சிதறி விழும் சில்லுகளில்
அதுவே அதுவாகி தெரிகிறது
எதுவான போதும்
பிடிவாதமாய் நிற்கிறது
அது அதுவாகவே !!
* * * * *
16 comments:
நீங்கள் இதுவரையில் எழுதியதில் இதுவே சிறந்தது என்று தோன்றுகிறது . தொடர்ந்து இது போன்றக் கவிதைகளை எழுதவும்
அதை, அது தான் என்று புரிந்து கொண்டேனா தெரியவில்லை! நான் புரிந்து கொண்ட அது அதுவாகவே இருக்கட்டும்...
அசத்தல் கவிதை கௌசல்யா...!!!!
சில அடம்பிடிக்கும் *அது*க்கள் *அது*வாக இருப்பதே நல்லது கௌசி.ஒவ்வொரு வரிகளும் ரசனை !
அது அதுவாகவே இருக்கட்டும் . அது எது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அருமை
அருமை.
வாழ்த்துக்கள்.
தம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் எதுவுமே தம் இயல்பைத் தக்கவைக்கும் பிடிவாதத்திலிருந்து துளியும் பின்வாங்குவதில்லை. அது அதுவாகவே இருக்க அதுதானே ஆதாரம். அழகான ஆழமான கருத்துப் பொதிந்த கவிதை. பாராட்டுகள் கௌசல்யா.
மிக அருமையான சொல்லாடல்கள்..
@@ எல் கே...
நன்றி கார்த்திக்.
@@ suryajeeva கூறியது...
//அதை, அது தான் என்று புரிந்து கொண்டேனா தெரியவில்லை! நான் புரிந்து கொண்ட அது அதுவாகவே இருக்கட்டும்...//
அது எதுன்னு புரிந்து கொள்ளவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்ட அது அதுவாகவே இருக்கலாமே ?! :))
பின்னூட்டம் படித்ததும் சிரித்துவிட்டேன். அழகான புரிதல்னா இது தான் போல !! :)
நன்றிகள் சூர்யா.
@@ MANO நாஞ்சில் மனோ...
நன்றிகள் மனோ.
@@ ஹேமா கூறியது...
//சில அடம்பிடிக்கும் *அது*க்கள் *அது*வாக இருப்பதே நல்லது கௌசி.//
அட அது ஏன் அப்படி ? :)
ஹேமா கவிதைகளின் வழியே நாம் இருவரும் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகள் அதி அற்புதமானவை !!
நன்றி தோழி.
@@ Mahan.Thamesh கூறியது...
//அது எது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை//
அது அதுவாகவே இருக்கட்டும் !! :)
நன்றிகள்
@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிகள்
@@ கீதா கூறியது...
//தம் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் எதுவுமே தம் இயல்பைத் தக்கவைக்கும் பிடிவாதத்திலிருந்து துளியும் பின்வாங்குவதில்லை.//
நிச்சயமாக ! அழகான புரிதல் கீதா.
//அது அதுவாகவே இருக்க அதுதானே ஆதாரம்.//
மிக மிக நிறைவாக உணர்கிறேன் தோழி. நீங்கள் சொன்ன கருத்திற்கு என்ன பதில் சொல்ல என தெரியவில்லை. ரொம்ப பிடிச்சிருக்கு.
நன்றிகள் தோழி
@@ அன்புடன் மலிக்கா...
நன்றிகள் தோழி.
Post a Comment