ஆர்ப்பாட்டமான அழைப்பு
அக்கறையாய் நலம் விசாரிப்பு
சலிக்காத சம்பாஷனை
அர்த்தமற்ற அங்கலாய்ப்பு
நேச பரிமாற்றம்
அவஸ்தையான வெட்கம்
சில புரிதல்கள்
சில சமாளிப்புகள்
சில கட்டளைகள்
சில வற்புறுத்தல்கள்
சில கோபங்கள்
சில கெஞ்சல்கள்
ஒரு சொல் பனித்தூறல்
மறு சொல் எரியும் தணல்
அத்தனை சந்திப்பிலும்
இறப்பும் உயிர்ப்பும்
சாதாரண ஒரு நிகழ்வாகி விடுகிறது !
ஒவ்வொரு சந்திப்பிலும்
விழுவது நானாக
எழுவது நீயாகவும்
இருக்கிறாய்...
...
சரிதான்
நான் விழுந்து
நீ எழுவது தானே காதல் !
* * * * *
எல்லா சந்திப்புகளின் முடிவிலும்
எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன
சில விளக்கங்களும்...
படங்கள் - கூகுள்
8 comments:
//சரிதான்
நான் விழுந்து
நீ எழுவது தானே காதல் !//
வாழ்த்துக்கள்.. கவிதை அருமை.
உண்மைதான். எலலா சந்திப்புகளின் முடிவிலும் கேட்க மறந்த கேள்விகளும் சொல்ல விட்டுப் போன விளக்கங்களும் இருப்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். மனதைத் தொட்ட வரிகள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்தக்கள்!
அன்பின் ஆளுமைப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட நேசப்பறவையின் சிறகுகளின் படபடப்புகளே கவிதைகளாக... இங்கே... வாழ்த்துக்கள்.
கடைசி பத்தியில் அடர்த்தியாகிறது கவிதை
சொல்லாத பதில்களை விடவும்
கேட்கப்படாத கேள்விகள்
மிகுந்த அவஸ்த்தையானவை
வாழ்த்துக்கள்
-இயற்கைசிவம்
@@ கோவி...
வருகைக்கு மிக்க நன்றிகள்.
@@ கணேஷ் கூறியது...
//உண்மைதான். எலலா சந்திப்புகளின் முடிவிலும் கேட்க மறந்த கேள்விகளும் சொல்ல விட்டுப் போன விளக்கங்களும் இருப்பதை நானும் அனுபவித்திருக்கிறேன்//
இத்தகைய அனுபவங்கள் பலருக்கும் இருப்பது சகஜம்...
அதை தான் இங்கே கவிதை என்ற பெயரில் எழுதி வைக்கிறேன் :))
நன்றிகள் கணேஷ்
@@ கீதா கூறியது...
//அன்பின் ஆளுமைப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்ட நேசப்பறவையின் சிறகுகளின் படபடப்புகளே கவிதைகளாக.//
அட...எப்படிங்க இப்படி அழகா சொல்ல முடியுது...மிக ரசித்தேன் தோழி.
'சொல்'லின் முக்கியத்துவத்தை கதையில் சொல்லி அசாத்திய ஆள் ஆச்சே நீங்க...!!
:))
நன்றிகள் கீதா.
@@ இயற்கைசிவம் கூறியது...
//கடைசி பத்தியில் அடர்த்தியாகிறது கவிதை
சொல்லாத பதில்களை விடவும்
கேட்கப்படாத கேள்விகள்
மிகுந்த அவஸ்த்தையானவை//
சரிதான். நல்ல ரசனை.
உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். மிக்க நன்றிகள்
Post a Comment