Posted by
Kousalya Raj
comments (16)
பல வந்தன
பலவாகி வந்தன
பலனின்றி சில
பலமின்றி சில
பலமாய் பயமின்றி
வேர் விட்ட ஒன்று எதுவோ
அதை இது
உடைத்து போட முயன்று தோற்று
உடைந்து போனது என்னவோ இது தான் !
அது வேறு வேறாகி
போயினும்
அது அதுவாகியே
தனித்திருந்தது
தன் இருப்பு புரிந்திருந்தது...
வெளியில் தெரியா நகைப்பு
உள்ளில் புரியா திகைப்பு
இப்படியும் இயலுமா
சிந்தித்தே சிதறிப்போனது
சிந்தை...
கோபக்கனல்களால் சபிக்கப்பட்ட அது
தொடர்ந்த இரவுகளின் கனவுகளில்
விமோசனம் அடைந்தது...
அது போன்ற முடிவுறாக் கனவுகள்
முடிவுரக்கூடும்
கூட்டை புறந்தள்ளி உயிர்
விடுதலை பெறும் இறுதி நாளில்...
ஆழமாய் புரிய முயன்ற அது
அறிவற்றது என அர்ச்சிக்கபட்டது
அறிவை கடந்த புரிதல் அது என்பது புரியாதது
அறியாமையா அதிக அறிவின் மாயையா ?
கொலைக்களத்தில் ஓர்நாள்
கொலையுண்ட அது
ஒற்றை பார்வையில் சட்டென்று
உயிர்ப் பெற்று நகைக்கிறது
சிறிதும் லஜ்ஜையின்றி...
அறிந்தே சித்தரித்த பிம்பங்கள்
ஒவ்வொன்றாக உடைத்து போட போட
சிதறி விழும் சில்லுகளில்
அதுவே அதுவாகி தெரிகிறது
எதுவான போதும்
பிடிவாதமாய் நிற்கிறது
அது அதுவாகவே !!
* * * * *
Posted by
Kousalya Raj
comments (8)
ஆர்ப்பாட்டமான அழைப்பு
அக்கறையாய் நலம் விசாரிப்பு
சலிக்காத சம்பாஷனை
அர்த்தமற்ற அங்கலாய்ப்பு
நேச பரிமாற்றம்
அவஸ்தையான வெட்கம்
சில புரிதல்கள்
சில சமாளிப்புகள்
சில கட்டளைகள்
சில வற்புறுத்தல்கள்
சில கோபங்கள்
சில கெஞ்சல்கள்
ஒரு சொல் பனித்தூறல்
மறு சொல் எரியும் தணல்
அத்தனை சந்திப்பிலும்
இறப்பும் உயிர்ப்பும்
சாதாரண ஒரு நிகழ்வாகி விடுகிறது !
ஒவ்வொரு சந்திப்பிலும்
விழுவது நானாக
எழுவது நீயாகவும்
இருக்கிறாய்...
...
சரிதான்
நான் விழுந்து
நீ எழுவது தானே காதல் !
* * * * *
எல்லா சந்திப்புகளின் முடிவிலும்
எப்போதும்
சில பதில்கள்
மிச்சமிருக்கின்றன
கேட்க மறந்த
சில கேள்விகளும்
சொல்ல விட்டுப்போன
சில விளக்கங்களும்...
படங்கள் - கூகுள்
Posted by
Kousalya Raj
comments (9)
ஒவ்வொரு முறையும்
மிக சரியாக வலைவீசி
பிடித்து விடுகிறாய்...
கைதேர்ந்த
வேடன் நீ !
அப்பாவி பறவையாகி
போனேன் நான்...
* * * * * * * * *
பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
போனேன் நான்...
* * * * * * * * *
அடிக்கடி
கோபபடுகிறாயே
ஏன்...?
அடுத்து வரும்
என் கெஞ்சல்களை
நீ ரசிக்கிறாயா என்ன ?
* * * * * * * * *
பறக்கடிக்கும்
திசையெல்லாம்பறக்கும்
சிறு காகிதம் நான்...
காற்று நீ !
* * * * * * * * *
காணும்
அத்தனையிலும் நீ...
என் நெற்றி பொட்டை
எவ்வாறு சரி செய்வது
...
நிலை கண்ணாடியில் நீ !
* * * * * * * * *
வண்ணம் குழைத்து
வெள்ளைத்தாளில்
அழகழகாய்
ஓவியங்கள்...
ஏனோ ஈர்க்கவில்லை
உயிருள்ள ஓவியம் நீ
அருகில் நிற்க்கையில் !
* * * * * * * * *
எதுவும் தெரியாமல்
உன்னை காதலித்தேன்...
எல்லாம்
தெரிந்த போது
நான் பக்தையானேன்
...
நீ கடவுளானாய்...!
படங்கள் - கூகுள்
Labels:
காதல்
Posted by
Kousalya Raj
comments (19)
என்னவோ பேசுகிறேன்
எதையோ எழுதுகிறேன்
எங்கோ அலைகிறேன்
ஏனோ அத்தனையிலும்
உன் பிம்பத்தை
பதித்து விடுகிறேன்
மறக்காமல்...
பிடித்திருப்பதாய்
ஒருபோதும் சொன்னதில்லை நீ !
பேசும் அத்தனை முறையும்
'பிடிக்கும்' என
சொல்லி விடுகிறேன்
தவறாமல்...
* * * * *
நெஞ்சை வலிமையாய்
கிழித்தபின் புரிந்தது
மௌனம்
வலிமையானதுதான்...
ஒன்றும் தோணவில்லை
பதிலுக்கு மௌனிப்பதை தவிர...
எதையும் உணர்த்தாத
வார்த்தைகள்
இனி எதற்கென்றே
மௌனத்தில்
மூழ்கடிக்கிறேன் எனை
மொத்தமாய் !
சொற்கள் அற்ற
மொழிகள் அற்ற
மௌனங்களின் பரிமாற்றத்தில்
வாழுகிறது நேசம்
மௌனமாய் தேற்றிக் கொள்கிறேன்
வருந்தும் என் மனதை !
இருவரின் மௌனங்கள்
சப்தமாய் பேசிச் சிரிக்கலாம்
நாம் இல்லா வெளியில்...
மெய்
பொய்யானது
மெய் நீ
பொய் நான்
மௌனமாய் நாம்
மெய்யாய் நம் காதல் !
படங்கள் - கூகுள்