Posted by
Kousalya Raj
comments (31)
என் மௌனம் எனக்காய்
உன்னிடம் சண்டை பிடிக்கிறது
மௌனமே பதிலாய் வரும்
என்பதை அறியாமல் !!
உன் கை பிடித்து மழையில் நடக்க
கனா நிதம் கண்டும்
மழை வந்துவிட்டது
நீ....!!?
உன் நினைவுகள் எப்போதும்
எனக்கு !
என்னை தவிர
அனைத்தும்
நினைவாய் உனக்கு !?
தீபம் நீ !
உன்னில்
எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகி
போனேன் நான் !!
இறுதிவரை உறுதியாய்
இருப்பேன் என்றாய் - யார்
இறுதி வரை என்று - என்
இறுதி யாத்திரையில்
தெரிந்துவிட்டது !!?
எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (39)
கருத்தை கருத்தாய் கவர்ந்தவனே !
கவிதையாய் வலம் வருபவனே !
கள்குடித்த வண்டாய்
என் மனதை மாற்றியவனே !
மனதில் எழுதி வைத்த அவன் பெயரை
ரகசியமாய் தனிமையில்
உச்சரிப்பதை கண்டு மொட்டை மாடி
சுவர்களும் சிரிக்கிறதே
நான் ஒரு கோழை என்று !!
மலர்ந்த ரோஜா இதழ் தொட்டு
அவன் ஸ்பரிசம்
உணர்ந்து ரசிப்பதை பார்த்த
ரோஜாவும் பரிகசிக்கிறதே
நான் ஒரு பேதை என்று !!
ஒன்றும் ஒன்றும் இரண்டாம்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
உன்னை கண்டதும் ஒன்றே என்றேன்
எதிர் வீட்டு சுட்டி குழந்தை
சத்தமாக சொல்கிறது
நான் ஒரு முட்டாள் என்று !
பரவாயில்லை
சொல்லிவிட்டு போகட்டும் !
எல்லா வருத்தமும்
தொலைந்து தான் போகிறது
தொலைந்து தான் போகிறது
நீ என் பெயர் சொல்லி
அழைக்கும் போது !!
அழைக்கும் போது !!
*****************
உன்னை விரும்பித் தொலைக்கிறேன் !
விரும்பி உன்னில் தொலைகிறேன் !!
*****************
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (25)
நீ பயணிக்கும் பாதைகளில்
என் நேசம் பின் தொடருவதை
நீ அறியாய் !
உன் பெயரை கையெழுத்திட்டு கிழித்த
என் காசோலைகளின் எண்ணிக்கை
நீ அறியாய் !
நீ எழுதி கொடுத்த காகித பிரதியை
அலங்கரித்து தினம் பூஜிப்பதை
நீ அறியாய் !
ஆக்ரோசமாய்
உன்னை விரும்பும்
உலகின் கடைசி உயிர்
நான் மட்டுமே
நீ அறியாய் !!?
*****************************************
நீ பேசுவது ஒன்றும் செவி
சென்று சேருவதில்லை
அதற்கு முன்
என் இதயம்
வாங்கிவிடுவதால் !!
*****************************************
என் ஒரே நம்பிக்கை
பந்தயத்தில்
முன்னால் பலர் சென்றாலும்
முடிவில்
நீதான் வருவாய் முதலில் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (38)
தொட்டதற்கு எல்லாம் சுணங்கி கொள்ளும்
தொட்டாசிணுங்கி காதல் அல்ல !
அழுது அரற்றி ஆர்ப்பாட்டம் செய்யும்
ஆவேசக் காதல் அல்ல !
ஆத்மார்த்தமான ஆன்மாவின்
தேடலாம் அந்த காதல் அல்ல !
கைவிட்டு விடாதே என்று இரஞ்சுகிற
பரிதாப காதலும் அல்ல !
நீ இன்றி நான் இல்லை என்று
விசும்புகிற தத்துவக் காதல் அல்ல !
இழுத்து என்னுள் அமிழ்த்தி
மூச்சு திணறடிக்கும் முரட்டு காதல் அல்ல !
மரித்தபின்னும் வாழும் என்று புலம்பும்
காவிய காதலும் அல்ல !
என் உயிர் பிரியும் கடைசி தருணத்தில்
உன் உயிர் பறித்து
என்னுடன் அழைத்து செல்லும்
ஒரு 'ராட்சஸக் காதல்' !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (51)
ஊடாய் நீ விட்டு செல்லும்
மௌனங்கள் !
என்னிடம் சொல்லி விட்டன
உன் காதலை !
இப்போதெல்லாம்
வடி கட்டிய பின்னே
என் சுவாசம்
வெளி செல்கிறது !
உள்ளே உன்
நினைவுகளின் மிச்சங்கள் !!
என் விடாபிடியான
பிடிவாத அன்பில்
சண்டை, சமாதானம்
வந்தது, போனது
எல்லாமே காதல் தான் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (11)
போராட்டங்கள் சங்கிலி தொடராய் தொடர
தனிமையில் வெறுமையை தேடி மனம் அலைய
சிந்தனை செய்தே செத்து கிடக்கிறது அறிவும் !
அகலக்கால் வைக்காதே விரைவில் அடிவிழும்
பெரியோர் அறிவுரை சரிதானோ
என்றே பிதற்றுகிறது மனம் !
கண்ணீரால் கவலைகளை கழுவிவிட
முயன்றும் கவலை தொலையவில்லை
கண்ணீரும் நிற்கவில்லை !
தட்டினேன் திறக்கவில்லை
கேட்டேன் கிடைக்கவில்லை
தேடினேன் கண்டடையவில்லை !
வெளிவர வகையற்று ஓட்டுக்குள்
நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
எதற்கும் கலங்காத என்னை கதற
வைக்கிறது வாழ்க்கை !
பற்றி கொள்ள உன்னிடம் கரம் நீட்டினேன்
கரம் விடுத்து உயிர் பற்றினாய் உறுதியாய் !
ஒரே ஆறுதலாய், உயிராய் நீ இருக்கையில்
இனி உதிரம் வற்றியும் துக்கம் இல்லை !
என் காயங்களை உன் கண் அசைவில்
கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது
என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !
'எனதுயிரே ! துயரங்களை தூரப்போடு
நாளையும் இருக்கிறது ஒரு போராட்டம்
சந்திக்க வேண்டும் உற்சாகமாய்'
என்றே திடப் படுத்துகிறாய் தினமும் !
'இன்னும் கொஞ்சம் அமைதி கொள்
என் தோள் இருக்கிறது' என்றே
சாய்த்து கொள்கிறாய் என்னை !
சோகம் இடியாக நெஞ்சில்
இறங்கும் போதெல்லாம்
என் மனம் தளராமல் தாங்குகிறாய் !
அவமான கல்லில் அழகு சிலை
அற்புதமாய் செதுக்குகிறேன்
உன்னால் இன்று !!
******************
எனக்கு முதல் வாழ்த்து சொல்லிய சௌந்தருக்கு என் அன்பான நன்றிகள் !!
அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!
Labels:
கவிதை மாதிரி
Posted by
Kousalya Raj
comments (24)
நான்
செல்லும் வழியெங்கும்
சந்தோஷ பூக்களை
தூவி செல்கிறாய் !
நானோ துக்க மலர்களை
கூசாமல் உன் மீது எறிகிறேன்
இரக்கமின்றி !
புன்னகையுடன்
பெற்றுகொள்கிறாய்
இப்போது அவையும்
சிரிக்கின்றன உன்னைப்போல !?
வெட்கி தலைகுனிகிறது
என் கோபம் !!
இயன்றால் என் கோபத்தை
மொத்தமாய் சேர்த்தள்ளி
கேட்டு பார்
கேட்டு பார்
உண்மையான நேசம் இது
என்றே பதில் சொல்லும் !!
என்றே பதில் சொல்லும் !!
நூறாவது முறையாக படிக்கிறேன்
படிக்கும் போதெல்லாம்
என்னை அக்கறையாய்
நலம் விசாரிக்கிறது
என் செல்பேசிக்கு நீ அனுப்பிய
குறுஞ்செய்தி 'சௌக்கியமா...?'
Labels:
காதல் கவிதைகள்










