Posted by
Kousalya Raj
comments (19)
தெரிந்திருந்தால்
நெருப்பில் வேகவைத்து
பரிமாறியிருப்பேன் மனதை !
நம்பிக்கையற்று போவாய்
தெரிந்திருந்தால்
தீயில் குளிக்க வைத்து
உடுத்தி இருப்பேன் காதலை !
உன் பாதை எங்கும்
பூத்தூவி பார்த்துக்கொண்ட நான்
உன் மனதை கறை படியாமல்
கவனிக்க தவறிவிட்டேன் !
நீ தூங்கும் அழகை
மனக்கண்ணால் கண்டு
இமைகளால் தாலாட்டுவேன்
ஒரே சொல்லில் என்
விழிகளை பிடுங்கி எறிந்துவிட்டாய் !
விரும்பி உன்னில் தோற்று போனேன்
விருப்பமின்றி விலகி போகிறேன்
ஒருவருக்காக ஒருவர் மறந்துவிடுவோம்
நம் காதல் தானாகவே இறந்துவிட கூடும் !
செல்லரிக்காத காதல் என்றாய்
சொல்லடித்து செத்துப்போன காதலை
என்றாவது ஒருநாள்
மயானத்தில் தேடுவோம் !
கண்டுபிடித்தால் மீண்டும்
குழிதோண்டி புதைத்துவிடுவோம்
வேண்டாம் எரித்துவிடுவோம்
தற்கொலை செய்த காதல்
ஆவியாய் அலைய கூடும் !!
Labels:
கவிதை
Posted by
Kousalya Raj
comments (15)
நேற்று
நீ பேசுகிறாய்
ரசிக்கிறேன்
நீ சிரிக்கிறாய்
மிதக்கிறேன்
நீ அழைக்கிறாய்
கிறங்குகிறேன்
நீ சிணுங்குகிறாய்
உளறுகிறேன்
நீ ரசிக்கிறாய்
சிலிர்க்கிறேன்
இன்று
நீ யோசிக்கிறாய்
யாசிக்கிறேன்
நீ மறுக்கிறாய்
துடிக்கிறேன்
நீ மௌனிக்கிறாய்
தவிக்கிறேன்
நீ எழுதுகிறாய் யாருக்கோ
படிக்கிறேன் விழி நீரை மறைத்தபடிஉன்னால் கொல்லப்பட்டும்
உன் நினைவுகளினால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !!
படம் : நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (11)
காயும் நிலவு, சுழன்றடிக்கும் புயல்
எதிலும் பெண் வடிவம் கண்டு மகிழ்ந்தவன்
பின் தன்தன் மனை மதியாமல் போனானே !
கல்வி கற்ற கலைமகளை விட
கை நிறைய பொருள் கொணரும்
திருமகள் தேவை என தேடியவன்
அதிலும் திருப்தி அடையாமல் போனானே !
தேவதை போலொரு மனைவி
அடைந்தால் சுவர்க்கம் வேறில்லை
தலையில் வைத்து கூத்தாடியவன்
பின் சந்தேகக்கண் கொண்டு எரித்தானே !
அன்புக் கடங்குவதிலும்,
துன்பத்தில் இன்பம் கண்டவள்
இவள் போல் யார் என்றவன்
அதிலும் பெண்மை உணராமல் போனானே !
இதுவே பெண்மையின் விதி
தலை கவிழ்ந்தது முடியுங்காலம்
வந்ததம்மா - 'வென்றிடும் பெண்மை'
எங்கோ தூரத்தில் ஒரு குரல்.....
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
ஏனோ எனக்கு மட்டும் கேட்கிறது !!
படம்- கூகுள்
Posted by
Kousalya Raj
comments (10)
அழைக்கிறார்கள்
உன்னை உரிமையாக !
யாரோ
உறவாடுகிறார்கள்
உன்னுடன் அன்பாக !
யாரோ
விசும்புகிறார்கள்
நீ பேசவில்லை என !
யாரோ
மௌனிக்கிறார்கள்
நீ கடிந்துக் கொண்டதால் !
யாரோ
எனதென்கிறார்கள்
உன் உடமைகளை !
யாரோ
சண்டையிடுகிறார்கள்
உனக்கு பரிந்து கொண்டு !
சகித்துக்கொண்டு
உன் தோள் சாய்ந்தேன்
மௌனமாக !
இன்று என்னை யார்
என்கிறார்கள் !?
என்கிறார்கள் !?
அறிவார்களா
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
உன் உயிரின் ஓரம் நான் என்பதை !!
படம் - கூகுள்
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (13)
புது மணம் முகர்ந்து
முகத்தோடு ஒற்றி மகிழ்ந்தேன் !
பளபள மேனி அழகு வியந்து
பிடித்த இடத்தில் அமர வைத்தேன் !
மெல்ல என் விரலால்
தொட்டு வருடி ரசித்தேன் !
புரட்டி பார்க்க
ஆவலாய் காத்திருந்தேன் !இன்றோ
திட்டித் தீர்க்கின்றன.....
இன்னும்
திறக்கப் படாத புத்தகங்கள் !?
திறக்கப் படாத புத்தகங்கள் !?
உன்னை படித்து கொண்டிருக்கிறேன் நான் !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
இது சரியில்லை
அது சரியில்லை
இவன் எதுக்கும் லாயக்கில்லை
அவன் ஒரு உதவாக்கரை
இரவு பகல்
ஓய்வின்றி
சலிப்பின்றி சொன்னேன்
அலுக்கவில்லை எனக்கு !
..............
நான்
கொஞ்சம் மாறியிருக்கலாம்
தவறில்லை
தாமதமாக புரிகிறது
மரணபடுக்கையில் !!
**************
லட்சத்தில் ஒரு துளி
போகட்டும்
விட்டுவிட மனமின்றி
எழும்முன் விரைந்து
அடித்து கொன்று
சிரிக்கிறது மிருகம் !
செத்துக்கிடக்கிறது
கடித்த கொசு !!
Labels:
கவிதை மாதிரி
,
மனிதம்
Posted by
Kousalya Raj
comments (11)
நம்பிக்கையற்ற தீயில்
பொசுங்கிப்போன
மென் உணர்வுகளில் !
நிராகரிக்கப்பட்டு
திரும்பிய நேசம் பிளந்த
வெடிப்பில் !
இன்பச்சுமை நீயென
சுமந்து தீர்த்து வலிகண்ட
உயிர்கூட்டில் !
உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
.............
மரணித்துவிடுகிறது
'காதல்' எனும் மாயை !!
Labels:
காதல் கவிதைகள்
,
மாயை










