Posted by
Kousalya Raj
comments (1)
உனக்கு பிடித்த
உன் கற்பனைகளுக்குச் சிறகு தந்த
வாதாம் மரத்தின் அருகே
உன் சுவாசத்தின் ஒருத் துளி தேடி
அமர்ந்திருக்கின்றேன்
வெகு நேரமாய் ...
ஒன்றாய் நாம் திரிந்த வீதிகளில்
உன் நினைவுகளை ஏந்தி
தனியாய் அலையும் எனக்கு
ஒரு நம்பிக்கை இருக்கிறது
என்னை அழைத்து வந்த
அந்த ஏதோ ஒன்று
உன்னையும் இங்கே
அழைத்து வரும் என்று...
நீண்ட காத்திருப்புகள்
பதிலொன்றை என் மீது
வீசி எறிந்தது கேள்வியாக...
கடைசியாக நீ பேசிய
'புரிய முயற்சிச் செய்'
என்பதன் அர்த்தம்
'பிரிய முயற்சிச் செய்'
என்பதாக இருக்குமோ...?
ஒரு அத்தியாயம் ஒன்றின்
முடிவுரை எழுதி முடித்து
முடிந்து
பனிப் போர்வைக்குள்
தனித்து
நான் விறைத்துக் கிடக்கும்
வேளையில்
நீ என்னைக் கடந்து போகலாம்
அது நானென்று அறியாமல்
இது ஏதோவொன்று என...!
படம்- கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
மழைத் துளிகளில்
ஒரு துளியாக
நீ ரசிக்கும்
வானவில்லின்
ஒரு நிறமாக
உன் கேசம்
கலைத்து விளையாடும்
காற்றாக
நீ நடக்கும்
பாதையோர
ஒற்றை புல்லாக
உன் பாதம் பட்டு
சரசரக்கும்
இலைச் சருகாக
நீ அணியும்
ஆடையின்
ஒற்றை இழையாக
நீ விரும்பி கேட்கும்
பாடலின்
ஒரு ஸ்வரமாக
உனது
கவிதைகளில்
முற்றுப்புள்ளியாக
நீ அருந்தும்
தேநீரின்
கடைசித் துளியாக
ஏதோ ஒன்றாகவேணும்
நானாக வேண்டும் !
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (4)
நினைத்தப் போது அழைப்பாய்
அழைத்தப் போது நினைப்பேன்
உன் கோபத்தை
நான் பார்த்ததில்லை
கோபம் தவிர வேறொன்றும்
நான் கொடுத்ததில்லை
'சாப்டியா' என கேட்க தவறமாட்டாய்
தவறியும் கேட்டதில்லை நான்...
காய்ச்சல் என்றதும்
நொடிக்கொரு முறை விசாரித்து
காய்ச்சலை விட அதிகம் படுத்தி எடுப்பாய்
உன் அக்கறை எனக்கு இம்சை
என் இம்சைகள் உனக்கு ரசனை
என் தேவைகள் உனக்கு அவசியம்
உன் விருப்பம் எனக்கு அனாவசியம்
உன் தத்துப்பித்து உளறல்களை
கவிதை என்பாய்
அட அசடே என்றெண்ணி
ஆஹா அற்புதம் என்பேன்
தனிமையில் என்னை
மூழ்கடித்தப் போதெல்லாம்
எங்கே என்று தேடிக்கொண்டிருப்பாய்
தேடுவாய் என்று தெரிந்தே
தொலைந்துப் போகிறேன் அடிக்கடி...
நிலவென்றாய்
உயிரென்றாய்
இரண்டெழுத்தில்
என் பெயர் சுருக்கி
அழுத்தமாய் உச்சரித்து
இது காதல் என்கிறாய்
இப்படி சொல்வதில் உனக்கு
இன்பம் என்றால்
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே
நமக்குள் காதல் !
படம் : கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (2)
இமைச் சிறகடித்து
பனியிதழ் விரித்து
அவன் சிரிக்கும் போதெல்லாம்
வானுக்கும் பூமிக்குமாய்
பயணிக்கிறது
எனது உயிர் !
* * *
பனியூறிய இதழ்
பனிச் சிதறல் சிரிப்பு
பனித் தூறல் சொற்கள்
பனிமூட்டம் அவனது அண்மை
பனிப்போர்வை அவனது மௌனம்
பனிப்பொழிவு அவனது நேசம்
பனிப்பார்வை குளிர்விக்க
பனியால் சூழ்ந்து
பனியாய் தழுவினான்...
என்னை மறந்துக் கிறங்கிய
ஒருபொழுதில்
மூடிக் கிடந்த விழி
மெல்ல திறக்க...
சட்டென்று
வந்த தடம் இன்றி
கரைந்து
காற்றில் கலந்து
மறைந்தே போனான்
அவன்...!
* * *
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (12)
நமது சந்திப்பு
ஒவ்வொன்றின் முடிவிலும்
பேசி
விடை பெறுகிறாய் நீ
விடை பெற்றும்
பேசிக்கொண்டிருக்கிறேன்
அதுவரை
உன்னிடம் சொல்லவியலாத
காதல் படிமங்களுடன்...!
* * *
நம்மிடையே
சம்பிரதாயமான விடைபெறுதல்
சாத்தியமில்லை
என்றா
ஒரு காற்றைப்போல செல்கிறாய்...
என்னவொன்று
காற்று தொட்டுச் செல்லும்
நீ விட்டுச் சென்றாய் !
* * *
விடைப் பெற்று நீ
சென்ற பின்னும்
பல முறை
திரும்பிப் பார்க்கிறேன்
பார்ப்பேன் என தெரிந்தே
போகாமல் இன்னும்
அங்கேயே
நின்றுக்கொண்டிருக்கிறது
உன் நிழல்...!
* * *
எப்படியாவது சொல்லிவிடுவாய்
என்றுதான்
நமது எல்லா சந்திப்புகளிலும்
எதிர்பார்க்கிறேன்...
விடைபெறுவாய்
எல்லாம் பேசியும்
என்னை பேசாமலும்...!
படம் -கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (5)
உன் தோள் சாய்ந்து
கதைகள் ஆயிரம் பேசி
விரலுடன் விரல் கோர்த்து
உனக்கினையாக நடந்து
விழியால் விழி ஊடுருவி
உயிர் தொட்டு பிடித்து
விளையாடி மகிழ்ந்து...
உன் அத்துமீறல்கள் ரசித்து
தயங்குவதாய் கொஞ்சம் நடித்து
கெஞ்சலில் அனுமதித்து
செல்ல சீண்டல் சண்டையுமாய்
முப்பொழுதுகள் மயங்க...
என் மடி சாய்த்து
தலை கோதும் வேளை
உன் அழகை விழியால் அள்ளி பருகி
என் உயிரை நிறைத்து...
இவை எல்லாம் நிகழ வேண்டுமென
கனவுகள் ஏதும்
இதுவரை
காணவில்லை
...
...
...
நிஜமாக்க முயன்று கொண்டிருக்கிறேன் !
படம் - கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (11)
திடமுடன் மீண்டெழுவேன்
காப்பாற்றுகள்
என்றாயே
அறைசுவரில் பட்டு தெறித்த
அவள் கதறல் ஒலி
நெஞ்சை அறைகிறதே...
காலமே புண்ணை ஆற்று
வடு என்னை வதைக்கட்டும்!
தைரியம் தன்னம்பிக்கையின்
மொத்த உருவம்
நீ சென்றுவிட்டாய்
கையாலாகாத கோழைகள்
மட்டுமே மிச்சம் இங்கே...
பெண்ணியம் பேசி
தொலைக்காதீர்கள்
பெண்ணை தொலைத்து விடுங்கள்
மொத்தமாக...
கொடுபாதகம் கண்டும்
கையை பிசைந்து கொண்டு
வேடிக்கைப் பார்த்த
என்போன்றோரை
மன்னித்து விடுமா...
நாளை வேறு பெண்ணுக்கு
அஞ்சலி செலுத்த
நலமாய் இருக்கவேண்டும்
நாங்கள் !
காதலர் தினம் வேறு வருகிறது
தயாராக வேண்டும்
நாங்கள் !
உனக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
சொல்வதுடன்
திருப்திபட்டுக்கொள்கிறது
எனது மனித நேயம் !!??
* * * * *
ஒவ்வொரு துயர மரணத்தின் போதும் இது இறுதியாக இருக்கட்டும் என்ற எனது வேண்டுதல்கள் மட்டும் மாறவில்லை ...பெண்ணை சக்தி என்ற கொண்டாட்டவும் வேண்டாம் சகதியில் தூக்கி எறியவும் வேண்டாம். சக உயிராக உணர்ந்து மதித்தால் போதும். காதல் என்ற பெயரிலும் போக பொருளாக எண்ணி விளையாடுபவர்கள் மன்னிப்பு பெற கூட அருகதை அற்ற வக்கிர மனித மிருங்கங்கள்...
பெண்களின் மீதான கொடுமைகள் தொடருவதை கண்டும் காணாமல் இருக்கும் சமூகம் திருந்தாதவரை வினோதினிகள் பலியிடபடுவதும் நிற்க போவதில்லை என்பதை மிகுந்த வலியுடன் பதிகிறேன்.
வினோதினியின் மரணம் கொடுமை என்றால் வலியுடன் அவள் நடத்திய மரண போராட்டம் கொடுமையிலும் கொடுமை. இத்தனை நாளாய் அவளுக்கு கிடைக்காத நிம்மதி அமைதி இனியாவது அவளை இறுக தழுவட்டும் என்ற வேண்டுதலுடன்...







