Posted by
Kousalya Raj
comments (5)
கொட்டித்தீர்த்தது
அடை மழை
உன் வருகையால் இன்று...
வாசலில் உன் கால்தடம்
ஒளிர்கிறது
மாக்கோலம் இன்று...
தோட்டத்து மின்மினி பூச்சி
கண்சிமிட்டி தெரிவிக்கிறது
வானவில் பிரியங்களை இன்று...
சில்மிஷங்களும் அவஸ்தைகளுமாய்
கழிந்த மாலை பொழுது
மேலும் ரம்மியமானது இன்று...
'அழகனா அவன்?'
கேலிபேசிய கொன்றைப் பூக்கள்
உன் மலர் முகம் கண்டு
வெட்கி இதழ்கள் உதிர்த்து
உன்னை முத்தமிட துடிப்பதை ரசித்து
உன் முகம் மறைக்கிறேன்...
நொடிக்கொரு முறை நம் கைகள்
கோர்த்து பிரித்து அழுத்தி
உறவாடியதை நீயும் ரசித்தாயா என்ன?
விடுவிக்கவே இல்லை உன் விரல்களை...
கவிதைகள் பல
கதைகள் பல
ஆசைகள் பல
ஏக்கங்கள் பல
நேரில் சொல்ல ஒத்திகை பல
அத்தனையும் எங்கே
ஓடி ஒளிந்ததோ...
வினாத்தாள் பார்த்து
விடை மறந்த மாணவியாய்
முழித்துக் கொண்டிருக்கிறேன்!
மனதினுள் எழுதி அழித்து
எழுதி அழித்து
நான் தவித்து தடுமாறுவதை
ஓரவிழிகளால் ஏனடா பார்க்கிறாய்
மொத்தமாய் மறந்து போகிறதே !
என் மன ஓட்டம் அறிந்தும்
"ம் அப்புறம்,வேற என்ன செய்திகள்?"
ராட்சஸா! எங்கேயடா கற்றாய்
இப்படி என்னை சீண்டி சிதைக்க
செல்லச்சினம் ஒன்று தோன்ற
"ம்...ஒண்ணுமில்ல"
"அப்ப ஏதோ இருக்கு, என்ன அது சொல்...!?"
ஒத்திகையின்றி
காவியம் ஒன்றை
அரங்கேற்றுகிறாய் மெல்ல...
படங்கள் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (3)
நீ
இல்லாத
இரவுகளும்
இதமாகவே
இருக்கின்றன...
உன்னைவிடவும்
இறுக்கமாக
அணைத்திருக்கின்றன
உன் நினைவுகள்!
* * *
எனக்குள்
ஓடி பிடித்து
விளையாடுகின்றன
'பத்ரமா பாத்துக்கோ' வென
நீ ஒப்படைத்து சென்ற
உன் நினைவுகள்...
விழுந்து
அடிபடாமல்
பாதுகாப்பதிலேயே
முப்பொழுதும்
முடிந்துவிடுகிறது...
* * *
ஒன்றும் செய்யவிடாமல்
பாடாய் படுத்தியெடுக்கும்
உன் நினைவுகளால்
நினைவிழந்து போகிறேன் நான் !
* * *
வரும்வரை வைத்துக் கொள்...
உனக்கென்ன
கொடுத்துவிட்டு
போய்விட்டாய்...
நானல்லவா மாட்டிக்கொண்டு
முழிக்கிறேன்
நினைவுக்கும் கனவுக்கும் நடுவில்...
ஒன்று
தூங்கவிடுவதில்லை !
மற்றொன்று
தூங்கினாலும் விடுவதில்லை !
* * *
நீ வர தாமதித்தால்
நிலைமை இங்கே
மிக மோசமாகிவிடும்...
உன்னை விட
அருமையாய் காதலிக்கின்றன
உன் நினைவுகள் !
* * *
உன் நினைவுகளில்
மூழ்கித் திளைப்பதே
காதல் என்பதாகிப்
போனதெனக்கு!
* * *
படங்கள் -நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (6)
நாட்கள் பல
தவமாய் தவமிருந்து
வரம் யாசித்து
பெறப் போகும்
அத்தருணத்தில்
குளத்து நீரில்
வரம் யாசித்து
பெறப் போகும்
அத்தருணத்தில்
குளத்து நீரில்
கல்லெரிந்ததை போல
விழுந்ததொரு மழைத்துளி...!
சலனம் அடங்குமென
சலனத்துடனே
சலனம் அடங்கும்வரை
காத்திருந்தேன்...!
நீண்ட காத்திருப்பின் முடிவில்
எனதருகில் வந்த
நீண்ட காத்திருப்பின் முடிவில்
எனதருகில் வந்த
உன்னை எண்ணி எண்ணி
இணைந்த பொழுதினில்
சட்டென்று வெடித்து
சிதறின கனவுகள் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (11)
எங்கெல்லாம் கூட்டி செல்கிறாயோ
அங்கெல்லாம் கேள்வி ஏதும் இன்றி
உன் கை பிடித்து வரும் என்னை...
'சிரி' என்று நீ சிரிப்பாய்
சிரிப்பேன்
'பேசு' என்று நீ பேசுவாய்
பேசிக் கொண்டே இருப்பாய்...
உன் வார்த்தையை
ஒவ்வொன்றாக
அசைபோட்டு மென்று தின்பேன்...
விழிகளால் உன்னை பருகி
நெஞ்சை நிறைக்கும் என்னை
நடு நடுவே
துடிக்கவைத்து ரசிப்பாய்...
சமயங்களில்
என் உயிரை
விலை பேசும் உன் மௌனம்
வெம்மை முழுமையாக
எரிக்கும் முன்
மண்டியிடுவேன்
உன் காலடியில்...
கர்வத்துடன் காதலால்
அள்ளி அணைப்பாய்...!
இதோ
பிரிந்து விட்டாய்
மற்றொரு விடை பெறுதல் !
பிரிவு தற்காலிகம்
மனதிடம் சமாதானம்
எடுபடவில்லை...
வழக்கத்திற்கு மாறாக
உன் தோளோடு தோள் நெருங்கி அமர்ந்து
உன் கரங்களை குழந்தையை போல
தூக்கி முத்தமிட்ட
அடுத்த கணம்...
கனத்த மௌனத்தின் ஓசை நெஞ்சை அறைய
கரங்களில் என் பிடியின் அழுத்தம்
உணர்ந்து நிமிர்ந்த வேளை
விழியோரம் துளிர்த்தது நீர்
பதறி புரிந்தவனாய்
'சீக்கிரம் வந்துவிடுவேன்'
அதுவரை...?
அதுவரை.....!!
படம்-நன்றி கூகுள்
Posted by
Kousalya Raj
comments (11)
எதிர்பாரா நேரத்தில்
சற்றுமுன் கேட்ட
உன் குரல்...
என் நரம்புகளை
உருவேற்றி சென்றதை
நீ அறிய மாட்டாய்...
சேகரித்து வைத்திருந்த
நினைவுகளை
உன் குரல்...
என் உயிர் பிளந்து
களவாடிய போனதை
நீ அறியமாட்டாய்...
என் தனிமைச்
சுமைகளை
உன் குரல்...
அதிகரித்துச் சென்றதை
நீ அறியமாட்டாய்...
தலைகோதி
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
நெஞ்சை வருடும்
உன் குரல்...
என்னை துடிக்க வைப்பதை
நீ அறிய மாட்டாய்...
விழியில் உன் பிம்பம்
செவியில் உன் குரல்
எதை முழுதாய் ரசிப்பது
தவித்து நிற்க்கையில்
சட்டென்று ஒலிக்கும்
உன் சிரிப்பொலி...
உன் சிரிப்பொலி...
அந்த அதிர்வில்
மொத்தமாய் சிதைந்து
சிதறி சருகாய் உதிர்ந்து
போனேன் நான் !
மீண்டு எழுவதற்குள்
முடிந்தே விட்டது
இந்த முறையும்
நம் தொலைபேசி உரையாடல் !!
நம் தொலைபேசி உரையாடல் !!
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (16)
நமக்கேயான
தனிமையான தருணங்களில்
அங்கே நீ
ஒவ்வொரு எழுத்தாய்
ஒவ்வொரு எழுத்தாய்
எனது பெயரை
உச்சரிக்கும் நொடிகளில்
உச்சரிக்கும் நொடிகளில்
இங்கே இவள்
தூள் தூளாய் சிதறி
காற்றில் கரைவதை
அறிவாய் தானே !
மொத்தமாய்
கரைந்து
கரைந்து
உன்னை வந்தடைகிறேன்
அதுவரை
அதுவரை
சொல்லிக்கொண்டே இரு
எனது பெயரை !!
எனது பெயரை !!
எழுத்துக்களை தனித் தனியே
சேர்த்தும் பிரித்தும்
நீ எழுத
'என்ன மொழி இது' நான் விழிக்க
நீ சிரித்தாய்
'உன் பெயரை தான் எழுதினேன் !'
அன்று பார்த்தேன்...
காதல்
உன்னை சிறுபிள்ளையாக்கி
வைத்திருந்த அழகை !!
.
என் பெயரை அவன்
சொல்லும் போதெல்லாம் !
இப்போதும்
கிறங்கிக் கிடக்கிறேன்...
யாராவது
அவன் பெயர்
சொல்லி அழையுங்களேன்
விழித்தெழ வேண்டும் நான் !!
படம் - நன்றி கூகுள்
சொல்லும் போதெல்லாம் !
இப்போதும்
கிறங்கிக் கிடக்கிறேன்...
யாராவது
அவன் பெயர்
சொல்லி அழையுங்களேன்
விழித்தெழ வேண்டும் நான் !!
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (16)
நீண்ட தூர பயணத்தில்
எதிர்ப்படும்
ஆயிரமாயிரம் முகங்களிலும்
உன்னைத் தேடுகிறேன்
உள்ளே வைத்துகொண்டு
வெளியே தேடுவதே
வாடிக்கையாகிவிட்டது
வழக்கம் போல் பரிகசித்து
சிரிக்கின்றன விழிகள்...
இமைகளை இறுக மூடி
விழிகளுக்குள் ஓடுகிறேன்
உன்னைக் காண...!
* * * * *
இப்போதெல்லாம்
கண்கள் கலங்கினாலும்
கண்ணீர் விடுவதாயில்லை...
விழித்திரையில்
சேமித்து வைத்திருக்கும்
உன் காட்சிகளில்
ஒன்றையும்
கரைத்து விட
எனக்கு சம்மதமில்லை !!
படங்கள்-நன்றி கூகுள்
Labels:
காதல்
,
காதல் கவிதைகள்













