Posted by
Kousalya Raj
comments (13)
புது மணம் முகர்ந்து
முகத்தோடு ஒற்றி மகிழ்ந்தேன் !
பளபள மேனி அழகு வியந்து
பிடித்த இடத்தில் அமர வைத்தேன் !
மெல்ல என் விரலால்
தொட்டு வருடி ரசித்தேன் !
புரட்டி பார்க்க
ஆவலாய் காத்திருந்தேன் !இன்றோ
திட்டித் தீர்க்கின்றன.....
இன்னும்
திறக்கப் படாத புத்தகங்கள் !?
திறக்கப் படாத புத்தகங்கள் !?
உன்னை படித்து கொண்டிருக்கிறேன் நான் !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (14)
இது சரியில்லை
அது சரியில்லை
இவன் எதுக்கும் லாயக்கில்லை
அவன் ஒரு உதவாக்கரை
இரவு பகல்
ஓய்வின்றி
சலிப்பின்றி சொன்னேன்
அலுக்கவில்லை எனக்கு !
..............
நான்
கொஞ்சம் மாறியிருக்கலாம்
தவறில்லை
தாமதமாக புரிகிறது
மரணபடுக்கையில் !!
**************
லட்சத்தில் ஒரு துளி
போகட்டும்
விட்டுவிட மனமின்றி
எழும்முன் விரைந்து
அடித்து கொன்று
சிரிக்கிறது மிருகம் !
செத்துக்கிடக்கிறது
கடித்த கொசு !!
Labels:
கவிதை மாதிரி
,
மனிதம்
Posted by
Kousalya Raj
comments (11)
நம்பிக்கையற்ற தீயில்
பொசுங்கிப்போன
மென் உணர்வுகளில் !
நிராகரிக்கப்பட்டு
திரும்பிய நேசம் பிளந்த
வெடிப்பில் !
இன்பச்சுமை நீயென
சுமந்து தீர்த்து வலிகண்ட
உயிர்கூட்டில் !
உன்னை விடுத்து வேறெதையும்
சுவாசித்தறியா நாசியின்
வெம்மையில் !
வேடந்தரித்து
பேசத்தெரியா இயல்பின்
கோபக் கதிர்வீச்சில் !
.............
மரணித்துவிடுகிறது
'காதல்' எனும் மாயை !!
Labels:
காதல் கவிதைகள்
,
மாயை
Posted by
Kousalya Raj
comments (21)
முதல் முறை
நாம் சந்தித்தபோது
விழிகள் விரிய
நீ பார்த்த பார்வையின்
ஆழத்தில் விழுந்து
நான் மெல்ல
உள்ளே செல்ல
சிறிதும் தாமதியாமல்
இமைகள் இரண்டையும்
இறுக்கமாக
மூடிக்கொண்டாய் !
மூடிக்கொண்டாய் !
வெளிவர மனம் இன்றி
பொய்யாக மயங்கியே
கிடக்கின்றேன்
******
நாம்
இன்றுவரை நானும் !
******
நாம்
கடற்கரைச் செல்லும்
போதெல்லாம்
பெருமையாய் சிரிக்கின்றன
உன் கால் தழுவி
முத்தமிட்டு செல்லும் அலைகள் !
ஒரு சந்தர்ப்பம் கொடு
அவை என்னை பார்த்து
பொறாமைப்படட்டும் !!
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (26)
பயணம் இனிதாய் முடிந்தது
அடம் பிடித்து
உடன் வந்த உன்
நினைவுகளால் !!
**************
சில நேரம்
உன் கோபம் ரம்மியமானதாக
இருந்திருக்கிறது
மழை நேரத்து தேநீரின்
முதல் துளி
அருந்துவது போல !
**************
பேசியே களைத்து போன வார்த்தைகள்
தேடிக் கிடைத்த அர்த்தங்கள்
இரண்டும் அற்ற இந்த மௌனம்
இதன் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும்
நம் நேசம் !
விலகி இருந்தும்
தழுவிக் கொண்டிருக்கும்
உன் நினைவுகள் !
தனித்திருந்தும்
தொடர்ந்து ஒலிக்கும்
உனது குரல் !
நான் சேகரித்து
வைத்திருக்கும்
உன் சிரிப்பு முத்துக்கள் !
இவை போதுமெனக்கு
இந்த ஜென்மத்தை முடிப்பதற்கு !!
**************
சட்டென்று
சிலிர்க்கிறது எனக்கு
வேகமாய் துடிக்கிறது நெஞ்சம்
..................
புரிந்துவிட்டது
இப்போது
என் எழுத்துக்களை நீ
படித்துக் கொண்டிருக்கிறாய் !
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (15)
ஆசையோடு எனக்கும் ஊட்டிய அன்பே !
தமிழோடு உறவாடி காதல் மணம்
புரிந்து கவிக்குழந்தை பெற்ற தாயே !
என் விரல் பிடித்து கவிநடை
பயில கற்றுத் தந்த எந்தையே !
என் மனச்சுமை குறைக்க சாய்ந்து
கொள்ள தோள் தரும் தோழனே !
உனதன்பை நினைத்து உவகை கொண்ட
என்னுள்ளம் துள்ளி எழுதும் கவிதையே!
உன் பேச்சில் சிதறிடும் முத்துக்கள்
சேர்த்து அள்ளி நெஞ்சம் நிறைப்பேனே !
பரம்பொருளை பாடி பணிவதுபோல் மனதினுள்
மலர்தூவி அர்ச்சித்து மகிழ்வேன் கண்ணனே !
மனதோடு மட்டும்பேசி வந்த என்னை
கனவு தோட்டத்தில் பூக்கவைத்த விந்தையே !
ஆறுபல கூடிடவே தேடிவரும் கடலெனவே
நட்புபல நாடிவரும் பேருபெற்ற நாயகனே !
தவறாய் தமிழை பேசும்பலர் சூழ்ந்திருக்க
தவமாய் தமிழை போற்றும் தனித்துவமே !
பூவுலகின் ஆர்ப்பாட்டமான அற்புத கவிதையே
செஞ்சுடரே ! செந்தமிழே ! செந்தழலே ! தீஞ்சுவையே !
நீ வாழிய ! வாழிய பல்லாண்டு !
தமிழ் வாழும்வரை நீயும் வாழியவே !!
***************
வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !
***************
Labels:
காதல் கவிதைகள்
,
வாழ்த்துப்பா
Posted by
Kousalya Raj
comments (13)
என் தாயை உன் தாய்
என்று உரைப்பாய்
நான் ஆம் என்பேன் உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !
கொலை விளையாட்டை
ரசித்த உனக்கு
இது எம்மாத்திரம் !?
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!
ரசிக்கத்தான் வேண்டுமோ
விளையாட்டுடன் அவனையும் ?!
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ?










