Posted by
Kousalya Raj
comments (17)
தின்று ஜீவிக்கும் கொடூரா
சொற்கள் வார்த்தைகள்
செய்கையால்
பிறரை துன்புறுத்தும்
நீ சொல்கிறாய்..
'துவேசம் தவிர்'
குருதி,ரத்தம்,அவயங்கள்
உன் போலவே அவனுக்கு
இருந்தும் உனக்கு மட்டும் ஏன் இந்த வெறி
பிற மனதை குத்தி கிழித்து ரணமாகி
புரையோடிப்போன
புண்ணை ரசிக்கும்
நீ சொல்கிறாய்..
'பிற உயிரை நேசி'
நரியின் வஞ்சக புத்தி
பாம்பின் விஷம்
வார்த்தையில்
தேளின் கொடுக்காய்
நாக்கை சுழற்றி கொட்டும்
நீ சொல்கிறாய்..
'அன்பே சிவம்'
புறங் கூறி பழகிய
நாவுகள் உரசிப் போன
தீச்சொற்கள்
எத்தனை மனதை
எரித்திருக்கும்
நீ சொல்கிறாய்..
'வாக்கில் இனிமை வேண்டும்'
ஆணவத்தால் அகக்கண் மூட
தெளிவற்ற சிந்தை
சுயநலத்தால்
உன்னை முன்னிறுத்த
பிறரை பந்தாடும்
மமதை மாமனிதா
நீ சொல்கிறாய்..
'கர்வம் தவிர்'
தூக்கிப்போடு உன்
வறட்டு சித்தாந்தத்தையும்
விளங்காத சாத்திரத்தையும்
இனியும் அவற்றை பேசி
உன்னை புனிதன் என்று காட்டாதே
சக மனிதன், உன் சிநேகிதனை
மதிக்கத் தெரியாத
நீ சொல்கிறாய்..
'நட்பால் உலகை வெல்வோம்'
உன் போல் யார்
ஊர் சொல்லும் முன்
உன் மனசாட்சியிடம் கேள்
முகமூடி கிழித்து உன்
சுயத்தை காட்டும்
பிற உயிரை தூசித்து
கடவுளை தொழுகிறாய்
தூஷணமும்
பூசையும் ஒன்றா ?!
சில நேரம் பிதற்றுவாய்
'என் குரலுக்கு
ஓடி வருவான் இறைவன்'
இனி நன்றாக
உற்றுப்பார்
வந்தது...
சாத்தானாக இருக்கக் கூடும் !!
Posted by
Kousalya Raj
comments (31)
வேண்டுமென்றே
தோற்கிறேன்
உன்
வெற்றி பிடிக்கிறது !
பலமுறை
வாங்கி கட்டி கொள்வேன்
உன்
திட்டுகள் பிடிக்கிறது !
தெரியாததுபோல்
முழித்து கொண்டிருப்பேன்
உன்
அறிவுரை பிடிக்கிறது !
கைகட்டி
கேட்டு கொண்டிருப்பேன்
உன்
கட்டளை பிடிக்கிறது !
உனக்கு
பிடிக்காததை செய்வேன்
உன்
தண்டனை பிடிக்கிறது !
பிறரிடம் பேசியதாய்
பொய் சொல்வேன்
உன்
கோபம் பிடிக்கிறது !
தவறு செய்யாமல்
மண்டியிட்டு நிற்பேன்
உன்
மன்னிப்பு பிடிக்கிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
படிப்பு, அனுபவ அறிவு
மறைத்து நிற்பேன்
உன்
பேச்சுக்கள் பிடிக்கிறது !
சில நேரம்
அசட்டுதனமாய் பேசுவேன்
உன்
சிரிப்பு பிடிக்கிறது !
கவிதையில்
எனை மொத்தமாய் சிதறியும்
இயல்பாய் பார்த்துச் செல்லும்
உன்
கம்பீரம் பிடிக்கிறது !
சமயங்களில்
சட்டென என் அன்பை
'போடி' என தூக்கி எறிவது
வலித்தாலும்...
அந்த திமிரும் பிடித்துதான் போகிறது !
Posted by
Kousalya Raj
comments (18)
உன்னை முழுதும்
என்னுடையவனாக்க
முயன்றும் முடியாமல்
போய்விடுமோ !??
...
...
...
...
...
அழைத்தேன்
மறுக்காமல் வந்தாய்
ஓயாமல் பேசும் என் வாய்
ஓய்வெடுக்கிறது !
வழக்கம் போல்
மடை திறந்த வெள்ளமாய்
ஆர்ப்பரித்து பேசிச் சிரிக்கிறாய்
என் எண்ணம் புரியாமல் !
எப்போதும் கிறங்கடிக்கும்
இன்றோ என்னைக் கொன்று
தின்றுத் தீர்க்கிறது
உன் புன்னகை !
அழுத்தமாய் உன் கரம் பற்ற
வித்தியாசம் உணர்ந்து
விடுவிக்க முயன்று தவிக்கிறாய்
திமிரும் உன்னை...
உன் கெஞ்சும் விழிகளை
கொஞ்சியே கூட்டிச் செல்கிறேன் !
மலை உச்சி
தூரம் தெரியவில்லை
உடன் நீ வருகையில் !
உச்சி முகட்டின் மேல் நின்று
கீழ் நோக்க
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஒரு கணம் பயந்து
பின் சுதாரிக்கிறேன் !
ஓடும் நதி
ஆர்ப்பரித்துச்செல்லும் அழகை
விழியால் பருக மனம் குளிர
சுவாசத்தில் புதிய நறுமணம்
ஆழமாய் உள்ளிழுத்து
நிதானமாய் வெளி விடுகிறேன் !
நிதானமாய் வெளி விடுகிறேன் !
கம்பீரம் மிளிரும் உன்
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
அழகு முகம் கையில் ஏந்தி
உன் இரு விழி நோக்கி
முதலும் கடைசியுமாய்
இறுக அணைத்து
இறுக அணைத்து
முத்தமிட்டு
நம்மை உணரும் முன்
நம்மை உணரும் முன்
உன் கரம் பற்றியிழுத்து
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
கண் மூடி
வேகமாய் நதி நோக்கி
பாய்கின்றேன் !
ஒன்று...
இரண்டு...
மூன்றாம் முறை
மேலெழும்பாமல்
மூழ்கி போனோம் மொத்தமாய் !!?
Posted by
Kousalya Raj
comments (11)
ஊர் மாற்றலாகி
என் வகுப்பில் வந்து சேர்ந்தாய்
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
படிப்பில் இருவருக்கும்
சரிக்கு சரி போட்டி
தேர்வில் நீ வெற்றி பெற
முதல் இடம் போனதில்
முழுநாள் பட்டினி
எப்படியோ தெரிந்து
வந்து பேச்சு கொடுத்தாய் !
அதன் பின்...
வகுப்பு தலைவன் தேர்தல்
என் தோழியரை கெஞ்சி
ஓட்டுபோட வைத்தேன் !
வெற்றி கிடைத்தது
வெற்றி கிடைத்தது
தோழிகளுக்கு நன்றி சொல்லி
என் நெஞ்சில் நெருப்பை வார்த்தாய் !
மதிய இடைவேளை
என் டிபன் பாக்ஸ்
ஒளித்து உன் உணவை
சாப்பிட வைக்கும் மர்மம்
அறிந்தும் அறியாதவளாய்
அறிந்தும் அறியாதவளாய்
மிச்சம் இன்றி காலி செய்வேன் !
பிறந்த நாளுக்கு
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
எனக்கு பிடித்த
கண்ணாடி வளையல்
வாங்கித் தந்து
ஒரு சந்தர்ப்பத்தில்
ஒரு சந்தர்ப்பத்தில்
நீயே உடைத்து அழவைத்தாய் !
ஒருநாள் பென்சில் தேடி
உன் பிளாஸ்டிக் பாக்ஸ் திறக்க
சிரித்தன உடைந்த
வளையல் துண்டுகள் !
வளையல் துண்டுகள் !
தேர்வில் ஒரு பாடத்தில்
குறைந்த மதிப்பெண்கள்
வாத்தியாருடன் நீ வாதம்
நான் சரியாக எழுதவில்லை
அவர் என்ன செய்வார்
புரியாது உனக்கு
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
நேசம் வைத்து
முட்டாள் ஆனவன் நீ !
வீட்டிற்கு வரும் வழியில்
கல் தடுக்கி என் காலில் ரத்தம்
நீ துடித்த துடிப்பு
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
பசுமையாய் இன்றும்
அடி படும் போதெல்லாம் !!
நேற்று
ஷாப்பிங் மாலில்
என் மகனுடன் நான்
முதுகில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
குறுகுறுக்கும் பார்வை
திரும்பிய திசையில்
மகள் மனைவியுடன் நீ !
உறைந்து நின்ற
என் அருகே வந்தாய்
என் அருகே வந்தாய்
இருவர் விழிகளும் மிக சரியாக
வாங்கி கொண்டன அடுத்தவரை !
மகள் பெயர் என்ன
என் மன வரி எப்படி படித்தாய்
'பொண்ணு பெயர் வர்ஷா'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என்றாய் !
சிறு ஏமாற்றம் எனக்கு
பின் யதார்த்தம் உணர்ந்து
மௌனமாய்
நொடிகள் கரைய
சட்டென்று
என் விழி ஆழமாய் பார்த்து
'இவள் என் மனைவி'
என் பெயர் சொல்லி
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
உன் மனைவியை
அறிமுகம் செய்கிறாய் !
**********
Labels:
கவிதை மாதிரி
,
முதல் காதல்
Posted by
Kousalya Raj
comments (20)
கடும் வெயில்...
என் மீது மழை பொழிந்தது !
இலையுதிர்காலம்...
என் தோட்ட
கொன்றை மரம் பூத்தது !
அப்போது
என் வாழ்வில் நீ வந்தாய் !!
என் வாழ்வில் நீ வந்தாய் !!
பேருந்து
ஜன்னலோர தனி பயணம்
மிக பிடித்ததாயிற்று
எல்லா பயணமும்
உன்னை நெருங்க எடுக்கும்
பிரயத்தனம் என்பதால்!
பயண வழியெங்கும்
உன் முகம் தோன்ற
ரசித்து ரசித்து வலிக்கும்
மனகண்ணுக்கு களிம்பு பூசட்டும்
சிறு புன்னகை சிந்தேன் !
நீ அழைக்கும் போதெல்லாம்
செல்பேசியுடன் மொட்டை மாடி
விரைந்து ஓடுவேன்
குரலுடன்
உன்னை சுவாசிக்க !
உன்னை சுவாசிக்க !
இரவில் நீ
பேசும் பேச்சுக்கள் தானே
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
மறுநாள் பகலில்
என்னை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது !
எரிமலை வெடித்து
நதி பெருக்கெடுக்கும் !
பாலையில்
நீரூற்று புறப்படும் !
எதுவும் மாறும்
என்னை தவிர...
ஒருநாள் உனக்கு
என்னை பிடிக்காமல் போகும் அப்போதும்
உன்னை காதலிப்பேன் !
...
...
...
உன்னை எனக்கு மிக பிடிக்கும் !!
படங்கள் -கூகுள்
Labels:
காதல்







