Posted by
Kousalya Raj
comments (15)
இன்னும் குழந்தையாய் நான் இருக்க
அவனோ நாளும் ஒரு வளர்ச்சி
உடலில் மட்டுமா ? மனதளவிலும் !
'நைட் அம்மா வர லேட் ஆகும்,
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ'
செல்பேசியில் நான்.
'பிரட் ரோஸ்ட்,ஆம்லேட்,மில்க்
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
ரெடி பண்ணி தம்பியும் நானும் சாப்பிட்டாச்சு'
பதிலில் மனம் குளிர வைப்பதிலும் !
மாலையில் வரும் என்னை வரவேற்கும்
வாசலில் நீ தெளித்திருக்கும் தண்ணீர்
'நான் வந்து தெளிப்பேனே நீ ஏன்மா பண்ணின ?
'லைட் போடணும் அதான் தெளிச்சேன்மா' என்பதிலும் !
புதிதாய் யாரையும் அறிமுகபடுத்தினால்
உடனே 'நல்லா இருக்கீங்களா' நீ நலம் விசாரிக்க
பையனை 'நல்லா வளர்த்திருக்கீங்க' என
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
அதை கேட்ட நீ மௌனமாய் சிரிப்பதிலும் !
என் கையில் ரத்தம் பார்த்து பதறி
தண்ணீர் குடிக்க வைத்து ரத்தம் துடைத்து காயத்திற்கு(?) கட்டு போட்டு விடுவாய்
பள்ளிவிட்டு வந்ததும் 'வலி சரியா போச்சா?'
விசாரிப்பதிலும்
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
என அத்தனையிலும் தாயாக நீ தானே தெரிகிறாய் !
இன்று எங்கள் திருமணநாள், உனக்கு எப்படி இதை நினைவு படுத்த
வார்த்தைகளை நான் தேட, கிளம்பி வாசல் வரை சென்ற நீ, திரும்பி பார்த்து சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்து, "இரண்டு பேரும் ஏதாவது மூவி போயிட்டு வாங்க...அப்பா, இன்னைக்காவது மறக்காம அம்மாவுக்கு பூ வாங்கி கொடுங்க...நாங்க வந்ததும் ஈவினிங் வெளில போகலாம், ரெஸ்டாரன்ட்ல நைட் டின்னர், ஒ.கே வா ?! சந்தோசமா இருங்க...திருமணநாள் வாழ்த்துகள் !'
வாழ்த்தி விட்டு இதோ கிளம்பிவிட்டாய் பள்ளிக்கு...!
உன்னை பார்த்து பொடியனும் " சரி சரி நல்லா இருங்க...!" என்று ஆசிர்வதிப்பது போல் கைகளை உயர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப 'இன்று விடுமுறை நாளாய் இருந்தால் நல்லா இருக்குமே' யோசனையில் இருவரும் உள்ளே வர மனமின்றி வாசலில் அமர்ந்துவிட்டோம்.
Labels:
அனுபவம்
,
திருமணநாள்
Posted by
Kousalya Raj
comments (9)
புல்வெளியில்
அமரும்போதெல்லாம்
அனிச்சையாய் விரல்கள்
புல் பிடுங்கி அடி கடிக்க
ருசி ரசிக்கும் மனது !
பேச்சின் ஊடாய்
உன் அழகு சிரிப்பு
அனிச்சையாய் கண்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சேர்த்து அள்ள
ரசித்து ருசிக்கிறது
என் இதயம்
சிரிக்க மறக்காதே
அது துடிக்க
மறந்துவிடக்கூடும் !
மறந்துவிடக்கூடும் !
* * * * * * *
உன்னில் என்னை மீட்டெடுக்க
எடுத்த பிரயாசங்கள்
அனைத்தையும் வென்று
இன்னும் ஆழத்தில் புதைத்தே விட்டது
உன் புன்னகை !
தூக்கத்தில் சிரிக்கும்
குழந்தையின்
பரிசுத்தமான பளிங்கு சிரிப்பு
உன் புன்னகை !
எதையும் சொல்லாதது போல்
உன் வார்த்தைகள்
எல்லாவற்றையும் சொன்னது போல்
உன் புன்னகை !
மௌனம், கோபம், சண்டை
எல்லாம் நொடியில் தூக்கி போட்டு
என் தலையில் தட்டி பரிகசிக்கும்
கர்வகிரீடம் உன் புன்னகை !
Posted by
Kousalya Raj
comments (23)
சில புரிதலற்ற
கோபக்கனல்கள்
கோபக்கனல்கள்
சுட்டெரித்து சாம்பலாக்கிவிட
மிகச் சரியாக அந்த வினாடி
வீறு கொண்டெழுகின்றன
உன் முன் மண்டியிட்டு கிடக்கும்
என் கர்வங்கள் !
இருபுறமும் மோதி
இருபுறமும் மோதி
கீழே வீழ்ந்து துடிக்கிறது
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
ஏதும் அறியா ஒரு நேசம்...
வார்த்தைகளின் கனம்
தாளாமல் சிதைந்தது
மாசற்ற அன்பு...
மௌனமாய் கதறுகிறது
என்றோ எனக்குள்
ஒளித்திருந்த காதல் !
ஒரு கட்டத்தில்
இரு கர்வங்கள்
போராடி
களைத்து போய்விட
மௌன வெளியில்
சிறகடித்து பறந்து
சென்றே விட்டது
வெண்புறா ஒன்று !
அதன் பின்னான
உன் இதழோரப் புன்னகை
களிம்பை பூச மறந்து
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !
ஏனோ
காயத்தை கீறி விட்டு
செல்கிறது!?
இம்முறையும்
உன் கோபாக்கினையில்
தப்பி பிழைத்த
ஒற்றை கொள்ளியாய் நான் !
Posted by
Kousalya Raj
comments (8)
என் உணர்வுகள்
என் வார்த்தைகள்
என் மௌனங்கள்
என் சுவாசங்கள்
அனைத்தும்
உன் ஒருவனை
உன் ஒருவனை
பற்றியதாகவே இருக்கிறது
மொத்த வாழ்வின்
ஒரே தேடலாய்
ஒரே தேடலாய்
ஒற்றை முடிவாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
முற்றுப்புள்ளியாய் நீ இருக்கிறாய்
ஆதி எதுவென நான் அறியேன்
அந்தம் நீ...நீ மட்டுமே !
பலநேரங்கள்
நீயாகிய நான்
சில நிமிடங்களே
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
நானாகிய நான்
நித்தம் நீ ஆடும்
மேடையாகி போனதென் மனம்
நீயோ ஆனந்த தாண்டவம் இதுவென
கர்வம் கொண்டு சிரிக்கிறாய் !
சமயங்களில் எனை
பாலை புயலாய் சுழன்றடிப்பாய்
காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
போய்விடுகிறதென் நான் ! காட்டாறு வெள்ளமாய் ஆர்ப்பரிப்பாய்
அத்தனையிலும்
சப்தமின்றி அமிழ்ந்து
ஆழ்ந்து கரைந்து மறைந்தே
மேடு பள்ளம் பாறைகள்
யாவும் கடந்து
ஆழ்கடல் உனை
சிறு நதியெனவே
வந்தடைவேன்
உருவமற்று
பொருளற்று
நீயே தஞ்சமென
உயிர்த்துளிகள் உதிர்த்து
உன்னுள் அடங்கி
போய்விட மாட்டேனா
...
என்றாவது ?!
என்றாவது ?!
Posted by
Kousalya Raj
comments (8)
குவிக்கப்பட்டனர்
முப்படைவீரர்கள்
பல்லாயிரக்கணக்கில் !
பல்லாயிரக்கணக்கில் !
விமான நிலையம்
ரயில் நிலையங்கள்
பேருந்து நிலையங்கள்
தீவிர சோதனையில்...!
பாராளுமன்ற வளாகம்
ஹோட்டல்கள்
தங்கும் விடுதிகள்
மனிதர்கள்
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
கடும் கண்காணிப்பில்...!
உச்சகட்ட பாதுகாப்பு
சுற்றிலும் இரகசிய கேமராக்கள்
ஹெலிஹாப்டர் ரோந்துகள்
நடுவே செங்கோட்டை
கண்ணாடி கூண்டின் உள்ளே பிரதமர் !
இன்று சுதந்திரதினம் !?
அச்சம் ஏன் ?
எதனால் தீவிரவாதம் ?
சுயநல அரசியலின்
முரண்பட்ட வாதங்களால்
முரண்பட்டு போனதொரு
மக்கள்கூட்டம் அன்றோ அவர்கள்!
எங்கள் முன்னோர்களே...
அடிஉதை வாங்கிபெற்று தந்தீர்கள்
வெள்ளையர்களிடம் இருந்து
விடுதலை !
இரவில் வாங்கியதால் என்னவோ
உறக்கத்தில் இருந்து
இன்னும் எழவில்லை நாங்கள் !
பகலில் வாங்கிதாருங்கள்
அரசியல்
கொள்ளையர்களிடம் இருந்தும் !
அரசியல்வாதிகளின்
அயோக்கியத்தனம்
அடக்கி
அடையவேண்டும்
மற்றுமோர் சுதந்திரம்
ஆம் வேண்டும் 2 வது சுதந்திரம் !
எங்கள் இளைஞர்களே...
தலைமீது கைவைக்க
காத்திருக்கிறது அமெரிக்கா
கை வெட்ட
நேரம் பார்க்கிறது சீனா
வேடிக்கை பார்க்க
காத்திருக்கிறது மற்றவை !
இனி அலறவேண்டும் அத்தனையும்...
இங்கே மூடப்பட்ட
ஜன்னல்களை திறவுங்கள்
தேச மூலையில்
ஆங்காங்கே கொட்டி கிடக்கிற
நேர்மையை, உழைப்பை, ஞானத்தை
சேர்த்தள்ளி எடுங்கள் !
அவை கொண்டு
புரையோடி போய் கிடக்கிற
சமூக பள்ளங்களில் இட்டு நிரப்புங்கள்
வெற்று மனங்களை இணையுங்கள் !
உள்ளுக்குள் இருக்கும் நெருப்பை
வெளி அள்ளித் தெளியுங்கள்
எரிந்து சாம்பலாகட்டும்
அநீதிகளும்
அவசர கோலங்களும் !
இரண்டாம் சுதந்திரம் பெற்று தாருங்கள்
ஆண்டுகள் பல ஆயினும்
நான் இன்னும் சுவாசிக்கவில்லை
ஜீவனுள்ள சுதந்திரக்காற்று !!
Labels:
சுதந்திரதினக் கவிதை
,
தேசம்
Posted by
Kousalya Raj
comments (22)
'ம்' என்ற உன் ஒற்றைச்சொல்
சிறிதும் தயக்கமின்றி
என் உயிரை குடித்து
சற்று நேரம் கழித்து வெளியே துப்பும்
விந்தை நீ அறிய வாய்ப்பில்லை !
உன் வார்த்தைகளின் பிரமாண்டம்
அண்ணாந்து பார்த்து
மலைக்கிறேன் - அதிசயமென
வியக்கிறேன் - அதன்முன்
சிறு புள்ளியாய் தெரிகிறேன் - அதில்
விழுந்து திக்கெங்கும் தெறிக்கிறேன் !
உன் வார்த்தைக்குள் கரைகிறேன் - பின்
மெல்ல தெளிகிறேன் - அதை
தெளிக்கிறேன் மனவாசலில் - நான்
கலைக்கிறேன் அதை
மீண்டும் உன் வார்த்தை கோலமிட !
சுகிக்கிறேன் சுகமென - அனலாய்
தகிக்கிறேன் தவமென - அதை
மறைக்கிறேன் எதுவென - நான்
இருக்கிறேன் உனக்கென - நீ
இன்றி ஏதுமில்லை இனி
இன்றி ஏதுமில்லை இனி
வாழ்வில் எனக்கென !!
சமயத்தில்
கோபத்தில் சிதறும்
உன் வார்த்தைகள்
வரவழைக்கும் விழிநீரை
சுண்டி எறியும்
தொடர்ந்து வரும்
வார்த்தைகள் !
செந்தணலையும்
நீராய் மாற்றும்
வார்த்தைகள்
உனதல்லவா ?!
இப்போதும்
என் இதயம்
குளிர்ந்து துடிக்கிறது
நீ வார்த்தை மழை பெய்வித்து
கொண்டிருக்கிறாய் !
Labels:
காதல்
Posted by
Kousalya Raj
comments (12)
முன் எப்போதும்
என் மாலை பொழுதுகள்
மொட்டைமாடியில் !
நீ வந்தாய் மனதினுள்
மறந்தேன்
மாலை பொழுதின் அழகை ரசிக்க !
இன்று உன்னை விடுத்து
இருக்க எண்ணி மாடி அடைந்தேன்
மாலை நேர தென்றல்
மேனித் தொட்டு மறவாமல் நலம் விசாரிக்க
மெல்ல நிமிர்ந்து வானம் பார்த்தேன்
அடடா நிலவுக்கு ஏன் இந்த அவசரம்
கதிரவன் முழுதாய் மறையும் முன் எட்டி பார்க்கிறது !!
நிலா கவிதை எழுதி நாள் பல ஆனதை
நினைவுபடுத்த வந்தாயா ?
என் செய்வேன் உனை பார்த்தாலும்
அவன் முகம் நினைவுக்கு வருகிறது
நிச்சயம் இன்று உன்னை பற்றியதே என் கவிதை !
அட...அங்கே யாரது தென்னை மரத்தில்
ஓ... இரு குயில்கள்
எப்படி மறந்தேன் உங்களின் இனிய குரலை....
கால்களுக்கு முன் இன்னிசை
கேட்க ஓடி வருமே என் செவிகள் !
கூவுங்கள் குயில்களே
இன்று இவள் செவி உங்கள் குரல் கேட்கவே !
என்ன சலசலப்பு ?!
வேப்பமரக் கிளைகளை அசைத்து
ஏன் தூண்டிவிடுகிறாய் காற்றே !
கட்டிய ஊஞ்சலில் ஆட மறந்தேன் என்றா?!
காற்றே மெல்ல மெல்ல...
குருவிக் கூடுகள் விழுந்துவிட போகின்றன!
தென்னையில் புதிதாய் ஒரு பாளை ?
ம்...இது எப்போது ?
சந்தன நிற மலர்கள்
அழகில் கிறங்குகிறதென் மனம்!
மணம் நாசியை துளைக்கிறதே
பன்னீர் பூ உனக்கு இது வசந்த காலமா...
மரம் கொள்ளாமல் பூவாடை !
சட்டென்று சிவக்கிறது வானம் ஏனோ?
பகலெல்லாம் பூமி பந்தினை சுட்டெரித்தாய் போதும்
நிலாவுடன் பேசவேண்டும் நீ செல் !
உன்னுடன் பேசக் கூடாதாம் நிலவே
முகம் சிவந்து கோபத்துடன்
செல்கிறான் கதிரவன் !
நான் பேசுவேன் இன்று இரவு முழுவதும்
ஆம் பேசுவேன்...கவிதை எழுதுவேன்
எழுத பேனா எடுத்தேன்.......
நிலவே
இரவின் தனிமையில்
சுட்டெரிகிறாய் என்னை
வடுக்களோ உன்னில் !
.....
.....!
.....?
இரு எழுத்து
மந்திரமாம் அவனது பெயர்
உச்சரித்தே
முக்தி அடைகிறதென் காதல் !!
மரம் , குயில், ஊஞ்சல், பன்னீர் பூ
மறந்து...
அவனையே எழுதுகிறது...!
எப்போது மயக்கினான்
என் பேனாவையும் !?
Labels:
காதல்












