Posted by
Kousalya Raj
comments (15)
ஆசையோடு எனக்கும் ஊட்டிய அன்பே !
தமிழோடு உறவாடி காதல் மணம்
புரிந்து கவிக்குழந்தை பெற்ற தாயே !
என் விரல் பிடித்து கவிநடை
பயில கற்றுத் தந்த எந்தையே !
என் மனச்சுமை குறைக்க சாய்ந்து
கொள்ள தோள் தரும் தோழனே !
உனதன்பை நினைத்து உவகை கொண்ட
என்னுள்ளம் துள்ளி எழுதும் கவிதையே!
உன் பேச்சில் சிதறிடும் முத்துக்கள்
சேர்த்து அள்ளி நெஞ்சம் நிறைப்பேனே !
பரம்பொருளை பாடி பணிவதுபோல் மனதினுள்
மலர்தூவி அர்ச்சித்து மகிழ்வேன் கண்ணனே !
மனதோடு மட்டும்பேசி வந்த என்னை
கனவு தோட்டத்தில் பூக்கவைத்த விந்தையே !
ஆறுபல கூடிடவே தேடிவரும் கடலெனவே
நட்புபல நாடிவரும் பேருபெற்ற நாயகனே !
தவறாய் தமிழை பேசும்பலர் சூழ்ந்திருக்க
தவமாய் தமிழை போற்றும் தனித்துவமே !
பூவுலகின் ஆர்ப்பாட்டமான அற்புத கவிதையே
செஞ்சுடரே ! செந்தமிழே ! செந்தழலே ! தீஞ்சுவையே !
நீ வாழிய ! வாழிய பல்லாண்டு !
தமிழ் வாழும்வரை நீயும் வாழியவே !!
***************
வாழ்த்துக்களில்
வாழ்வதில்லையாம் நேசம்
யார் சொன்னது !?
உன்னை
வாழ்த்தியே
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான் !
***************
Labels:
காதல் கவிதைகள்
,
வாழ்த்துப்பா
Posted by
Kousalya Raj
comments (13)
என் தாயை உன் தாய்
என்று உரைப்பாய்
நான் ஆம் என்பேன் உன்போல்
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
அரக்கி கருவறை
ஜனனம் என்றால் !
மண்ணை தாயாய் வணங்கும்
நான் எங்கே
என் தாய்களின் கருவறுத்த
நீ எங்கே
நாளை உனக்கு
இங்கே 'ராஜ'மரியாதை !
கொலை விளையாட்டை
ரசித்த உனக்கு
இது எம்மாத்திரம் !?
தமிழன் கருவறுத்தவன்
'கை'பற்றி
குதூகலிக்க போகும் கூட்டம்.....!!
ரசிக்கத்தான் வேண்டுமோ
விளையாட்டுடன் அவனையும் ?!
எங்கே போயின
எம்வீர தினவெடுத்த தோள்கள் ?
எங்கே தொலைந்தார்கள்
ரௌத்ரம் பழகியவர்கள் ?
Posted by
Kousalya Raj
comments (18)
தகிக்கும் என்
தனிமைக்கு
தீர்வு கேட்டேன் உன்னிடம்
வருந்தாதே பேசுகிறேன்
என தொலைபேசி, எதிர்பாரா பொழுதில்
என் உயிர் கொய்து
சிரித்து கொண்டே செல்கிறாய் !
மீண்டும்
உன் மன கருவறையில் ஜனித்து
உன் விழி பார்வையால் பிறக்கின்றேன்
மரிக்கிறேன் பின் பிறக்கிறேன்
உன்னால் எனக்குள்
எத்தனை இறப்புகள் ?
எத்தனை பிறப்புகள் ?
உன் நினைவு பூக்களின் வாசம்
என் சுவாசம் !
எத்தனை இறப்புகள் ?
எத்தனை பிறப்புகள் ?
உன் நினைவு பூக்களின் வாசம்
என் சுவாசம் !
நான் உலகை நீங்கிய பின்னும்
என் காதலை
கவிதையில் வாழவைக்கும்
இணையம்
குலதெய்வமாகி போனதே !!
என் காதலை
கவிதையில் வாழவைக்கும்
இணையம்
குலதெய்வமாகி போனதே !!
*************
காதல்
பலரை சிதைக்கும்
என்னை செதுக்குகிறது
காதலன் நீ என்பதால் !!
*************
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (22)
வார்த்தைகளற்ற வெற்றிடத்தை
உன் நினைவுகள் இட்டு
நிரப்புகின்றேன் !
அந்நினைவுகள் கொன்று
மௌனவலிக்கு மருந்திட்டு
ஆற்றுகிறேன் !
நம் புரிதல் பெரிது
என் இறுமாப்பை உடைத்தெறிந்தது
இப்போது விழுந்த மெல்லிய திரை
திரை கிழித்தெறிய
உரிமையில்லை எனக்கு
மனமில்லை உனக்கு !
எனக்கு பிடிக்காத மௌனம்
உனக்கு பிடிப்பதால்
ஏற்று கொள்கிறேன்
உயிர் வதைக்கும் வலியை !
என்னிடம் இருக்கட்டும்
உன்னை பற்றிய கற்பனைகள்
அழிக்க சொல்லிவிடாதே
அதையும் !
எனது உயிர் இயக்கம்
நடந்தாக வேண்டும்
என்னிதயம் சுற்றுகிறது
உன்னை !
சிற்பி நீ தரும்
மௌன வலி பொறுத்து
சிலை ஆவேனே தவிர
வலி பொறுக்காமல்
மிதிபடும் வாயிற்படி
கல்லாக மாட்டேன் நான் !
மன்னித்துவிடு
நாம் பேசாத போது
என் பேனா பெரும்பாலும்
இப்படிதான் எழுதுகிறது !
**************
Labels:
கவிதை காதல்
Posted by
Kousalya Raj
comments (17)
எங்கிருந்தோ வந்து
இதோ இருக்கிறேன் என்றாய்
அன்பை வாரி இறைத்து
என் இதயம் கவர்ந்தாய்
பேசாத நாட்களிலும்
மயிலிறகாய் என் இதயம்
தொட்டு செல்வாய் !
முதல் முறை
உன் குரல் கேட்டு
மிக வியந்தேன்
என் இரு
காதில் ஒலித்தது
வீணையின் நாதமா
காயத்ரி மந்திரமா
குழந்தையாய் நீ
சிணுங்கும் சிணுங்களில்
அள்ளி கொஞ்ச தோன்றுமடி
என் செல்லமே !
உனக்கு பிறந்தநாளாம்
ஆனந்தத்தில் வாழ்த்த
வார்த்தை வரவில்லையடி
அழகு தேவதையே !
உன் தாயை
வாழ்த்துகிறேன்
நான் கேளாமல்
தங்கை என்ற பொக்கிஷத்தை
அள்ளி தந்தவள் அல்லவா !
நம்மை இணைத்தது
இணையமா
இதயமா ?!
இன்று உனக்கு பிறந்த நாள்
உன்னை வாழ்த்தவா
இந்த நாளை வாழ்த்தவா
நீ மட்டுமா பிறந்தாய்
உன்னுடன் கவிதையும் !
இல்லை நீயே கவிதை
உயிருள்ள கவிதை நீ !!
இன்று பிறந்த நாள் காணும் என் அருமை தங்கை காயத்ரியை (கவிநா) வாழ்த்துகிறேன். வாழ்வில் பல செல்வங்களை குறைவின்றி பெற்று நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
Labels:
வாழ்த்து கவிதை
Posted by
Kousalya Raj
comments (15)
காலை விழித்ததும்
முதலில் உன் விழி பார்க்கும்
உள்ளங்கை ரேகையாய் !
குளியலில்
உன் இதயம் தொட்டு
வழிந்தோடும் நீராய் !
அலைபாயும்
உன் அழகு தலை முடி
கோதும் சீப்பின் விரலாய் !
அணியும் உடையின்
இணைப்பில் பிரிந்திருக்கும்
சிறு நூல் இழையாய் !
அவசரமாய் உண்ணும்
காலை உணவின்
ஒரு துளி உப்பாய் !
பயண வழி நெடுகிலும்
பயண வழி நெடுகிலும்
உன்னை தழுவி செல்லும்
குளிர்காற்றாய் !
இன்னும் எதிர்படும்
யாவுமாய் நான் மாற
யாவுமாய் நான் மாற
Labels:
காதல் கவிதைகள்
Posted by
Kousalya Raj
comments (41)
சொற்கள் கூடிக் களித்தே
பிரசவிக்கின்றன
கவிதைகள்...
கவிதைகள்
கொஞ்சிப் பேசி வளர்த்தன
காதல்...
காதல்
ரசித்து கொண்டாடின
இரு உள்ளங்கள்...
இரு உள்ளங்கள்
கூடிக் களித்து பிரசவிக்கின்றன
கவிதைகள்...
மீண்டும்.....தொடருகின்றன
கவிதைகளும் காதலும் !!
************
கார் கதவில்
படிந்த தூசி
பிடித்திருக்கிறது
உன் பெயர் எழுதி
தூசி விலக்கி
பதிந்து கொண்டேன்
உன்னை !
காசோலையில்
கையெழுத்திடும் முன்
மிக யோசிக்கிறேன்
எனது பெயர் என்ன !?
************
சகிக்கிறேன்
பிறர் மீதான உன் அன்பை !
மறைக்கின்றேன்
அதன் மீதான கோபத்தை !
************
உனக்கு
************
உனக்கு
எல்லோரும் தேவை
எனக்கு நீ மட்டும்
பொதுநலம் நீ
சுயநலம் நான் !
படம் - நன்றி கூகுள்
Labels:
காதல் கவிதைகள்











